Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

தன் தந்தையின் ஆய்வகத்தை அமீரா ஷா எப்படி ரூ. 2000 கோடி சாம்ராஜ்யம் ஆக்கினார்?

தன் தந்தையின் ஆய்வகத்தை அமீரா ஷா எப்படி ரூ. 2000 கோடி சாம்ராஜ்யம் ஆக்கினார்?

Thursday November 12, 2015 , 9 min Read

தன் பட்டப்படிப்பை மருத்துவப் பள்ளியில் 1980ம் ஆண்டு முடித்த போது மருத்துவர் சுஷில் ஷா, ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முறையில் இந்தியா பின்னடைந்திருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்தார். அதிலும் குறிப்பாக மருத்துவ பரிசோதனைகளில். சந்தையில் கிடைக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் தன்னுடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விரும்பிய அவர், அமெரிக்கா சென்று அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை கற்றறிந்தார். இந்தியா திரும்பியதும், சுஷில் சொந்தமாக ஒரு நோய்க்காண மூல காரணத்தைக் கண்டறியும் நோய்க்குறியியல் (Pathology) ஆய்வகத்தைத் தொடங்கினார். ‘டாக்டர் சுஷில் ஷா’ஸ் லேபாரட்டரி’ என்று அதற்கு பெயரிட்டார். அவருடைய சமையலறையையே முதலில் மருத்துவமனையாக செயல்பட்டது.

“இன்று நாம் தைராய்டு பரிசோதனை, கருவள பரிசோதனை, மற்றும் பல்வேறு ஹார்மோன் பரிசோதனைகள் பற்றியெல்லாம் பேசுகிறோம். இந்தியாவில் 80களில் இது போன்ற வசதிகள் கிடையாது, இதை முதலில் தொடங்கியவர் சுஷில்தான். மற்றவர்களுக்கு இந்தத் திறனும் முன் அனுபவமும் இல்லாத நிலையில் சேவையை வழங்குவதில் தனிக்கவனம் மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் அவர் இந்த கட்டமைப்பை உருவாக்கினார்” என்று பெருமையுடன் கூறுகிறார் அவரின் மகள் அமீரா ஷா.

35 வயதான அமீரா, இன்று சர்வதேச நோய்குறியியல் சாம்ராஜ்யாத்தின் முன்னோடியாக உள்ளார். அவர் தனது தந்தையின் ஆய்வகத்தை தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனமாக மாற்றியுள்ளார்.

தனது 21 வயதில் எந்த அனுபவமும் இல்லாத போது தான் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்று குழப்பத்தில் இருந்தார் அமீரா.

image


என் வாழ்க்கைக்கு தலைவணங்குகிறேன்

“நான் நியூயார்க்கில் உள்ள கோல்ட்மேன் சாச்ஸ்-ல் பணியாற்றினேன். அங்கு நான் விரும்பிய நிலை ஏற்பட்ட போதும் என் நண்பர்கள், நான் இங்கு வந்ததை நினைத்து பொறாமைப்பட்டார்கள். ஆனால் நான் அனைத்தையும் மகிழ்ச்சியாக கழிக்கவில்லை. நியூயார்க்கில் இருப்பது எனக்கு பிடித்தது ஆனால் நிதிச்சுமை எனக்கு அங்கு வசிக்க இடம் கொடுக்கவில்லை. பணம் சம்பாதிக்க எனக்கு விருப்பம் இல்லை. பணத்தை அதன் நிலையிலேயே உருவாக்கவும் பிடிக்கவில்லை” என்கிறார் அவர். அதனால் எதைப் பற்றியும் யோசிக்காமல் வேலையை விட்டுவிட்டேன். “அடுத்தது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஐந்து பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றினேன். அந்த அனுபவமும் சிறந்ததாக இல்லை, அது தான் சிறு நிறுவனங்கள் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தை தொடக்க காலத்தில் கற்றுக் கொடுத்தது. அது மட்டுமின்றி நாள்தோறும் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறிய குழுக்களை முன்எடுத்துச் செல்லவும் பிடித்திருந்தது. நான் அங்கு இல்லாவிட்டால் இதையெல்லாம் இழந்திருப்பேன் என்று எனக்குத் தோன்றியது”.

அமீரா தன் வாழ்வில் மதிக்கத்தக்க ஒரு விஷயத்தை செய்ய விரும்பினார், “ஆனால் 21 வயதில் நீங்கள் இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் பேசினால் அதற்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கமாட்டார்கள்”. வேலை மீதான நம்பிக்கை அதிருப்தி அளித்தது, அமெரிக்காவிலேயே தன் வாழ்க்கையை தொடரலாமா என்று தன் தந்தையிடம் ஆலோசனை பெற இந்தியா திரும்பினார். நீ செயல்அலுவராக இருக்கப் போகிறாயா அல்லது தொழில்முனைவராக விரும்புகிறாயா என்று அமீராவின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார். “இரண்டிற்கும் என்ன வித்தியாசம்” என்று அப்போது கேட்டிருக்கிறார் அமீரா.

செயல்அலுவலர் அல்லது தொழில்முனைவர்

“முதலில் உன்னால் பெரிய தொழில், மதிப்பு மற்றும் பணத்தை சம்பாதிக்க முடியும், இதைத் தான் விரும்புகிறாய் என்றால் நீ தாராளமாக அமெரிக்காவில் இருக்கலாம், ஏனென்றால் அங்கு அதற்கான வாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் மாறாக நீ தாக்கத்தை ஏற்படுத்தவோ, ஒரு நிறுவனத்தின் மனசாட்சியாகவும் ஆத்மாவாகவும் இருந்து உன் கடமையை நிரூபிக்க விரும்பினால், நீ தொழில்முனைவராக இருக்க வேண்டும். அதற்கு நீ இந்தியா திரும்ப வேண்டும்” என்று அமீராவின் தந்தை கூறியுள்ளார். அவர் தொழில்முனைவை தேர்ந்தெடுத்து 2001ல் இந்தியா திரும்பினார்.

“அந்த நேரத்தில் அந்த முடிவு ஆட்சேபனைக்குரியதாக இருந்தது. இந்தியா இப்போது போல ‘மின்னும் (ஒளிரும்) இந்தியா’வாக அப்போது இல்லை. தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் இல்லை. அது ஒரு கலாச்சார அதிர்வாகவே தொடக்கத்தில் இருந்தது. நான் இந்தியாவில் பணியாற்றியது இல்லை. அந்த ஆய்வகம் சொந்த மூலதனத்தை வைத்து செயல்பட்டது. என் தந்தை மற்றும் அவருக்கு வலது கையாக இருந்தவரே அனைத்து முடிவுகளையும் எடுத்தனர். அனைத்தும் மையப்படுத்தப்பட்டது. அங்கு கணினிகள், ஈமெயில்கள், மட்டுமல்ல ஒரு திட்டமோ செயல்முறையோ கூட இல்லை. ஒரே ஒரு நபர் மட்டும் அமர்ந்து கொண்டு அழைப்புகளுக்கு பதிலளிப்பார். இதை எப்படி வளர்த்தெடுப்பது என்று நான் எண்ணிணேன். ஒருவர் எடுக்கும் முடிவை வைத்தே அனைத்தையும் அளவிட முடியாது உங்களால். அங்கு ஒரு திட்டம் இல்லை மேலும் அனைத்தும் மனம் போன போக்கில் நடந்து கொண்டிருந்தது” என்கிறார் அமீரா.

டாக்டர்.சுஷில் ஷா’ஸ் ஆய்வகம் தெற்கு மும்பையில் நன்கு வளர்ந்து வரும் நிறுவனம். 1500 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பையும் புகழையும் தன்னுடைய 25 ஆண்டு கால செயல்பாட்டில் பெற்றுள்ளது. “ஆனால் இது ஒரு தனி நிறுவனம். தெற்கு மும்பையைத் தாண்டி இதைப் பற்றி யாரும் கேள்விபட்டதில்லை. என்னுடைய தந்தைக்கு இந்தியா முழுவதும் தொடர் ஆய்வகங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. ஆனால் அதை எவ்வாறு சாத்தியமாக்குவது என்ற தெளிவு இல்லாமல் இருந்தது. சொல்லப்போனால் வளர்ச்சிக்கான ஆதாரம் இல்லை” என்று விளக்குகிறார் அமீரா.

image


சீர்திருத்தம்

தனி நபர் சொத்தை நிறுவனமாக மாற்றுவதே என்னுடைய முதல் குறிக்கோளாக இருந்தது. புதிய திறன்களை நாங்கள் உருவாக்கினோம், புதிய துறைகளை ஏற்படுத்தினோம், டிஜிட்டல் முறையிலான தொடர்புகளை அமைத்தோம், எஸ்ஓபிக்களையும் அதன் திட்டங்களையும் கூட உருவாக்கினோம். இவை அனைத்தும் எனக்கு புதிதாக இருந்தது. வர்த்தகப் பள்ளியில் நான் புதிய மாணவி, அவர்கள் பெரிய நிறுவனங்கள் பற்றியே பெரும்பாலும் கற்றுக் கொடுத்தார்கள்: பண பரிவர்த்தணைகளை எவ்வாறு செய்வது, எப்படி வியூகங்களை வகுப்பது, உள்ளிட்டவற்றை எக்ஸெலில் எப்படி கணிப்பது என்று கற்றுக் கொடுத்தார்கள். அன்றாட மக்களோடு நாம் சந்திக்கும் நடைமுறை பிரச்னைகளை எப்படி கையாள்வது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் எப்படி ஒரு திட்டத்தை ஒரு இடத்தில் செயல்படுத்த முடியும். நீங்கள் ஒரு சிறு நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் உங்களால் எப்படி நல்ல திறன்மிக்கவர்களை ஈர்க்க முடியும். அவர்களுக்கு அதிக சம்பளம் உங்களால் கொடுக்க முடியாது. எனக்கு பகுத்தறிவு உள்ளது என்னுடைய உள்ளுணர்வு என்னைத் தொடர்ந்து இயக்குகிறது.

தொடக்கத்திலேயே இது போன்ற அடிப்படை மாற்றங்களை கொண்டு வருவதற்கு என் தந்தை எனக்கு ஊக்கமளிக்கவில்லை. “என் தந்தை எனக்கு முதல் நாளே உயரிய பொறுப்பை கொடுத்துவிடவில்லை. நான் வாடிக்கையாளர்கள் சேவை பிரிவில் இருந்தே என்னுடைய பணியைத் தொடங்கினேன், அங்கு நோயாளிகள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்னைகளை சரிசெய்வதே என்னுடைய முதல் பணி. அதே சமயம் என்னுடைய எண்ணங்களையும் இதில் செலுத்தத் தொடங்கினேன். என்னைப் பொருத்த வரையில் இது ஒரு சிறந்த முடிவு ஏனெனில் நான் ‘மேலிருந்து கீழ்’ வரவில்லை அதற்கு மாறாக ‘கீழிருந்து மேலே’ உயரும் பாதையில் பயணிக்கிறேன். அடித்தட்டு மட்டத்தில் என்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை நான் உண்மையில் உணர்ந்திருந்தேன் அதனால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. இது போன்றே இரண்டு ஆண்டுகள் கழிந்ததாக” கூறுகிறார் அமீரா.

இனி வளர்ச்சி காணலாம்

இந்த இரண்டு ஆண்டு அனுபவங்களுக்குப் பிறகு வளர்ச்சி பற்றி முடிவெடுக்க இதுவே சரியான நேரம் என்று அமீரா நினைத்தார். தெற்கு மும்பையில் கடந்த 25 ஆண்டுகளாக தன்னுடைய ஆய்வகம் குறித்து மக்களிடம் என் தந்தை ஏற்படுத்தியுள்ள நன்மதிப்பின் வழியிலேயே நானும் தொடர விரும்பினேன். மற்ற நகரங்களில் வேறு சில ஆய்வகங்கள் நன்கு பிரபலமடைந்திருப்பதாக நாங்கள் நினைத்தோம். முதலில் டாக்டர்.சுஷில் ஷா’ஸ் லேபாரட்டரி என்ற எங்கள் நிறுவனத்தின் பெயரை "மெட்ரோபாலிஸ்" (Metropolis) என்று மாற்றினோம், ஏனெனில் பல்வேறு மல்ட்டிநேஷனல் நிறுவனங்கள் இந்தத் துறையில் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. நாங்கள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தனி ஆய்வகங்களோடு கை கோர்த்து, அவர்களை எங்கள் மெட்ரோபாலிசின் கீழ் கொண்டு வர விரும்பினோம்.

2014ல் மெட்ரோபாலிஸ் தங்களது முதல் பங்குதாரருடன் கையெழுத்திட்டது. “நாங்கள் எங்களுடைய கொள்கைகளுக்கு பொருந்தக்கூடிய சென்னையைச் சேர்ந்த ஒரு பேத்தாலஜிஸ்ட்டான டாக்டர்.ஸ்ரீனிவாசனை கண்டுபிடித்தோம். எங்களோடு இணைவதில் இருக்கும் நன்மைகள் குறித்து அவருக்கு விளக்கம் அளித்தோம். இன்றைய தேதியில் நாங்கள் 25க்கும் மேற்பட்ட பங்குதாரர்களைக் கொண்டுள்ளோம்” என்று பெருமையோடு கூறுகிறார் அமீரா.

மெட்ரோபாலிசின் முதல்கட்ட நிதி 2006ல் ஒதுக்கப்பட்டது, ஐசிஐசிஐ வென்ச்சர்ஸ் மூலமாக நாங்கள் நிதியை உயர்த்தினோம். வார்பர்க் பின்கஸ் என்ற சர்வதேச அமெரிக்கன் ஈக்குவிட்டி நிறுவனம், ஐசிஐசிஐயை வாங்கி 2010ல் மெட்ரோபாலிசில் அதிக அளவில் நிதியை முதலீடு செய்தது. 2006ல் ஃபண்ட்ரைசிங் செய்தது பற்றி அமீரா கூறுகையில் “நிதியை அதிகரிக்க முடியாத மற்ற நிறுவனங்களுக்கும் பங்களிக்க வேண்டி இருந்ததால் எங்களுக்கு பணம் தேவைப்பட்டது”. நாங்கள் வர்த்தகத்தை பின்னணியாகக் கொண்ட குடும்பம் இல்லை, அதனால் முதலீடு செய்வதற்குத் தேவையான நிதி எங்களிடம் இல்லை. எங்கள் ஆய்வகத்தில் இருந்து சம்பாதிக்கும் பணத்தை அதிலேயே மறுமுதலீடு செய்து நடத்தி வருகிறோம். அதனால் வளர்ச்சியும் அதற்கு ஏற்றாற் போலத் தான் இருந்தது. இன்றைய தேதியில் ஸ்டார்ட் அப்களோ அல்லது ஈ-காமர்ஸ் நிறுவனங்களோ மாதத்திற்கு 100 கோடி செலவு செய்து 2 கோடி வருமானம் பெறுவது போல அன்று நிலைமை இல்லை. எங்களிடம் இருக்கும் பணத்தை மட்டுமே நாங்கள் செலவு செய்ய முடிந்தது “மெட்ரோபாலிஸ் அண்மையில் வார்பர்க் பின்கஸின் பங்குகளை வாங்கியது தற்போதைய நிலையில் நாங்கள் வெளியில் இருந்து முதலீட்டாளர்களை எதிர்பார்க்கவில்லை”.

மெட்ரோபாலிசின் இந்த சீரான வளர்ச்சிக்கும், வெளியில் இருந்து கிடைக்கும் நிதிக்கும் 2006க்கு முன்பே விதை விதைக்கப்பட்டது. “2002ல் இது 7 கோடி லாபத்தை பெற்ற ஒரு நல்ல ஆய்வகம். அப்போது 40 முதல் 50 ஊழியர்கள் இருந்தனர். 13 ஆண்டுகளில் நாங்கள் ஒரு ஆய்வகத்தில் இருந்து 800 மையங்கள் மற்றும் ஏழு நாடுகளில் 125 ஆய்வகங்களை நிறுவியுள்ளோம். எங்களுடைய மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம், மேலும் எங்களின் ஆண்டு வருமானம் 500 கோடி ரூபாய்” என்று பெருமையாக சொல்கிறார் அமீரா.

சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல்

சர்வதேச அளவில் மெட்ரோபாலிசை எடுத்து செல்வதற்கான நோக்கமே வாய்ப்புகளை உருவாக்குவதே. நாங்கள் இந்தியா முழுவதிலும் கூட இல்லை, மும்பை, சென்னை மற்றும் கேரளாவில் மட்டுமே இயங்குகிறோம். ஒரு வேலை பங்குதாரர் கிடைத்தால் நாங்கள் ஸ்ரீலங்காவில் அடிஎடுத்து வைக்கலாம் என்று நினைத்தோம். இந்தியச் சந்தையில் ஏராளமான போட்டி இருப்பதையும், விலைவாசி அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதையும் நாங்கள் உணர்ந்தோம். இந்தியாவோடு ஒப்பிடும் போது ஸ்ரீலங்கா சந்தை எளிமையாகத் தோன்றியது(அதே சமயம் ஸ்ரீலங்கா தங்களின் மருத்துவ தேவைகளுக்கு சிங்கப்பூரில் இருந்து அவுட்சோர் செய்கிறது). அதனால் தான் நாங்கள் 2005ல் சிங்கப்பூருக்குச் சென்றோம். அது ஒரு சரியான முடிவா என்று தெரியவில்லை ஆனால் அது லாபத்தை கொடுத்தது. 2006ல் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வாய்ப்புகள் வந்தன அதையும் நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். அதே போன்று 2007ல் ஆப்ரிக்காவிலும் மெட்ரோபாலிஸ் விரிவாக்கப்பட்டது.

தன்னுடைய செயல்பாடுகள் மூலம் மெட்ரோபாலிசின் பணி கலாச்சார மாற்றத்தை மகிழ்ச்சியோடு செய்து வருகிறார் அமீரா. ஒவ்வொரு சந்தையும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமானவை மற்றும் தனித்தன்மை வாய்ந்தவை. ஸ்ரீலங்கா ஒரு நிம்மதியான இடம். அங்கு நிறைய பொது விடுமுறைகள் உண்டு, ஆனால் அதன் வம்சாவளி இந்தியாவைப் போன்றே இருக்கும். மத்திய கிழக்கு சந்தையைப் பொருத்த வரை அவர்கள் உலகத்தை மையப்படுத்தியே இருப்பார்கள். அதே போன்று அவர்கள் அதிக அளவில் கார்ப்பரேட் சூழ்நிலையிலேயே இருப்பார்கள். ஆப்ரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் வித்தியாசமானவை. தென்ஆப்ரிக்காவில் வியாபார ஒப்பந்தங்கள் மிகவும் நிர்வாகத்தன்மையோடு இருக்கும், இந்தியாவில் இருப்பது போல இல்லை. அவர்களின் பணி நேரம் 9 மணி முதல் 5 மணி வரை என்பதில் உறதியாக இருப்பார்கள், இந்தியாவைப் போல நீண்டநேரப் பணி கலாச்சாரம் இல்லை.

எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு முக்கியமானது என்ன – நாங்கள் சர்வதேச அளவில் இருக்க வேண்டும் – ஒரே மாதிரியான சேவையை வழங்க வேண்டும். கென்யாவில் இருக்கும் மெட்ரோபாலிஸ் நிர்வாகியும், இந்தியாவில் இருக்கும் நிர்வாகியும் ஒரே மாதிரியான விதிகளை பின்பற்ற வேண்டும், மதிப்பை ஏற்படுத்தும் வகையில் பணியாற்றும் மனப்பான்மை வேண்டும். ஒருமைப்பாடு, நேர்மை, கருணை மற்றும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து தாம் செய்யும் பணியில் உறுதியாக இருக்க வேண்டும், இவையே மதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.”

image


வருத்தங்கள்

மெட்ரோபலிஸ் எந்த அளவு அதீத வளர்ச்சி கண்டுள்ளதோ அதே அளவு தோல்விகளையும் சந்தித்துள்ளது. “பெரும்பாலான பங்குதாரர்கள் எங்களுக்காக சிறந்த பணியாற்றியுள்ளனர். ஒரு சிலர் அவ்வாறு செயல்படவில்லை. அதனால் மீண்டும் நாங்கள் பங்குதாரர்களை வேகமாக தேட வேண்டிய தேவை இருந்தது ஏனெனில் இது போதுமானதா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை,” என்று சொல்கிறார் அமீரா. இந்தத் தோல்விகளின் அடிப்படையில் சில மாற்றங்களை தன் விருப்பப்படி அவர் செய்ய நினைத்தார்.

“ஹெல்த்கேர் என்பது பாரம்பரியமாக வயதானவர்களுக்காக அதிலும் குறிப்பாக ஆண்களுக்கானதாகவே பார்க்கப்படுகிறது. ஒரு இளம் பெண்ணான என்னை மற்றவர்கள் கறாரான ஆளாக நினைக்க வைப்பது கடினமாகவும் பெரும் தடையாகவும் இருந்தது. ஹெல்த்கேர் துறையில் மருத்துவம் சாராத பின்னணியில் இருப்பதும் தொழில்முனைவரான உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஒன்றே ஒன்றை நான் வித்தியாசமாக செய்தேன், அதாவது குறைவான வாய்ப்புகள் அதிக செயல்திட்டம் என்பதே அது. வியாபாரத்தை பங்குதாரர்கள் மற்றும் வாய்ப்புகள் அடிப்படையில் கட்டமைப்பதில் ஒரு வசதி உள்ளது. வாய்ப்புகள் வரும் போது அவர்களும் விரைவில் வந்துவிடுவார்கள். அதே போன்று வந்த வேகத்திலேயே அவர்கள் விரைந்து சென்று விடுவார்கள். ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எப்போதும் மதிப்பு உள்ளது. அதில் அதிக கவனம் செலுத்துவதே என்னுடைய விருப்பமாக இருந்தது” என்று மௌனமாக சிரிக்கிறார் அமீரா.

ஆண்கள் உலகில் ஒரு பெண்

இளம் பெண் தலைவரான அமீரா, பாலின பாகுபாடுகளை சந்திக்க நேரிட்டது. சிறு சிறு தவறுகளுக்காக செயலாளரில் தொடங்கி தன்னுடைய சக ஜுனியர் ஆண் பணியாளர்கள் வரை அனைவராலும் இடையூறுகள் இருந்தாலும் அவற்றை பொருத்துக் கொண்டார். ஆனால் மற்ற பெண்களைப் போல் இல்லாமல் அறிவாளிப் பெண்மணி ஒருவர் கூறியது போல, தன்னுடைய வெற்றிப் போராட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். “பணியாற்றும் இடத்தில் இருக்கும் பாலின போராட்டமும் தொழில்முனைவராக சந்திக்கும் பிரச்சனைக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு பெண் தொழில்முனைவராக நீங்கள் ஒரு நிறுவனத்தை கட்டமைக்க வேண்டும், அவற்றின் கலாச்சாரம் மற்றும் சூழ்நிலை முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் உங்களுடைய சொந்த பிராண்டை கட்டமைக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் பொருள் பற்றி வெளியில் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அது தான் கடினமானது வித்தியாசப்படுத்துதல் அங்கிருந்து தான் தொடங்குகிறது” என்று சொல்கிறார் அமீரா.

தொடர்ந்து அமீரா பேசுகையில், “என்னுடைய அனுபவத்தில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு சமமாக அமர்ந்திருக்கும் பெண்களின் மேஜையை கடக்கும் போது அசவுகரியமாக உணர்வதை நான் பார்த்திருக்கிறேன். இது அவர்களின் தவறு இல்லை. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி, மொத்த ஆண் சமூகமுமே பெண்களை இரண்டு திறனுடையவர்களாக மட்டுமே பார்த்துள்ளது ஒன்று அம்மா மற்றொன்று மனைவி, அவர்கள் பெண்களை பணியாற்றும் இடத்தில் பார்த்ததில்லை. பெண்களை எவ்வாறு சமமாக நடத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆண்களுக்கு இருக்கும் அனுபவம் எல்லாம் பெண்களை பாதுகாப்பது அல்லது அவர்களுக்கு அனைத்தையும் செய்து கொடுப்பது” என்கிறார் அமீரா.

ஒரு பிரச்சனை நடைபெறவில்லை என்று நடிப்பதை விட அதை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் என்று சொல்கிறார் அமீரா. “ஆனால் ஏற்றுக்கொள்வதற்கு அர்த்தம் அந்த நடத்தையை மன்னிப்பது அல்ல. நான் என் பணியே என் திறமைகளை பேசட்டும் என்று முடிவு செய்தேன். பெண்கள் தங்களுடைய பலத்தை மையப்படுத்த வேண்டும் அப்போது தான் இது போன்ற நிலைமைகளை சரிசெய்ய முடியும்” என்று ஆலோசனை கூறுகிறார் அமீரா.

எதிர்காலம்

தன் நிறுவனத்தின் எதிர்காலத்தை பற்றி ஆச்சரியத்தோடு கூறுகிறார் அமீரா. “மெட்ரோபாலிஸ் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக செலவு பிரிவிலேயே உள்ளது ஏனெனில் நாங்கள் மக்கள், அடிப்படை வசதிகள், விநியோகம், நெட்வொர்க் மற்றும் விற்பனையில் முதலீடு செய்துள்ளோம். தற்போது நான் நம்பிக்கையோடு உள்ளேன் என்னுடைய பணிக்கு கிடைக்கும் பிரதிபலனை அனுபவம் செய்து பார்க்க உள்ளேன். இது ஒரு குறுகிய கால திட்டம்.

image


வாடிக்கையாளர்களின் நடத்தை மாறுகிறது. அவர்களின் மனநிலையும் மாறுகிறது. நான் இந்த வியாபாரத்தை மேலும் நிர்வாகத்தன்மையோடு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்அதுவே என்னுடைய நீண்ட கால திட்டம். மேலும் பல புதுமைகளை புகுத்தி, வியாபார யுக்தியை எதிர்காலத்திற்கு ஏற்றாற் போல வடிவமைக்க விரும்புகிறேன். நான் மெட்ரோபாலிசை மேலும் பல புதிய நாடுகளுக்கும், உலக அளவில் வளர்ந்து வரும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தொடர் ஆய்வகங்களாக மாற்றவும் திட்டம் வைத்துள்ளேன். இதுவே என்னுடைய நோக்கம்.

அமீரா வாரத்திற்கு மூன்ற முறை டென்னிஸ் விளையாடுகிறார் மற்றும் வாரத்திற்கு இரண்டு முறை வொர்க் அவுட் செய்கிறார். அவர் குளு குளு ஏசி நிரம்பிய அலுவலகத்தை விரும்பவில்லை எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் வெளியில் சென்றுவிடுவார். “எனக்கு கப்பலோட்டுவது, விடுமுறை முகாம்கள் மற்றும் நீண்ட பயணம் மிகவும் பிடிக்கும். எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றை என்னுடைய உடல் மற்றும் மனநிலைக்கு ஏற்ற வகையில் செயல்களை வகுத்துக் கொள்வேன், மேலும் எனக்குப் பிடித்தமானவர்களுடன் நேரத்தை செலவிடுவேன்,” என்கிறார் அவர். உங்களுக்குக் கிடைத்த நல்ல அறிவுரை என்ன என்று அவரிடம் கேட்டதற்கு அவர் இரண்டே வார்த்தைகளில் பதிலளித்தார்: “தோல்வி சிறந்தது.”

அறிவுரை

கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் இருந்த போதும், அமீரா தனக்குத் தானே ஒரு திடமான ஆலோசனை வைத்திருந்தார். “உங்களுடைய எல்லையை நோக்கி நீங்கள் நகர வேண்டும். சொகுசாகவும், ஒரு நிலையில் இருக்க நினைப்பது மனிதனின் இயல்பு. மற்ற எல்லாவற்றையும் விட நாங்கள் சந்தித்த முக்கியமான விஷயம் நிச்சயமற்ற தன்மை. அது எங்களை பயமுறுத்தியது. ஆனால் அது தான் நீங்கள் உங்களுக்கான இடத்தை தேடிக்கொள்ள உதவும். அது உங்களை எல்லையை கடக்க உந்துதல் அளிக்கும், நீங்கள் யார் என்பதை நீங்களே அதிகம் கண்டுபிடிப்பீர்கள், உங்களின் திறமை உங்களுக்கு தெரியும்” என்று முடிக்கிறார் அமீரா ஷா.

இணையதள முகவரி: Metropolis