Cultiv8 இன்குபேட்டர் திட்டத்தில் தேர்வாகி நிதி உதவி பெற்றுள்ள 'மேஜிக் 20 தமிழ்'
வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ’மேஜிக் 20 தமிழ்’ செப்டம்பர் மாதம் நடைபெற்ற புகழ்பெற்ற கல்டிவ்8 இன்குபேட்டர் திட்டத்தில் பங்குபெற்றதாகத் தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ’மேஜிக் 20 தமிழ்’ செப்டம்பர் மாதம் நடைபெற்ற Cultiv8 இன்குபேட்டர் திட்டத்தில் பங்குபெற்றதாக தெரிவித்துள்ளது.
புதுமையாக்கங்களை உருவாக்கி வளர்க்கும் தேசிய திட்டத்தின் (NIDHI) ஸ்டார்ட் அப் ஆதரவு திட்டம் கீழ் நிதி (கடன்சார்) பெற்றிருப்பதையும் மேஜிக் 20 தமிழ் அறிவித்துள்ளது.
'மேஜிக் 20 தமிழ்' ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது செயலி வாயிலாக, 400க்கும் மேற்பட்ட புனைவு நூல்களின் ஒலி வடிவம் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாஸ்டர்கிளாஸ் பயிற்சிகளை சந்தா அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.
ஆர்வம் உள்ள தொழில்முனைவோர், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு அறிவு தேடலுக்கான புதுமையான சேவைகளை இந்நிறுவனம் வழங்கு வருகிறது. இந்த ஸ்டார்ட் அப் மேஜிக் பெண்கள் மற்றும் கார்னர் ஆபீஸ் பாட்காஸ்ட் ஆகிய யூடியூப் சேனல்களையும் கொண்டுள்ளது.
கல்டிவ்8 இன்குபேட்டர், 2016ல் கோவையில் ஸ்டார்ட் அப் சூழலை ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது. இந்தியாவில் புதிய ஸ்டார்ட் அப்`களை உருவாக்கி வளர்த்தெடுப்பதை இது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை, 28 ஸ்டார்ட் அப்களில் ரூ.5 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதோடு, 110க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டியுள்ளது. இந்திய அரசின், அறிவியல், தொழில்நுட்ப துறை ஆதரவு பெற்றது.
இந்நிலையில், மேஜிக் 20 தமிழ், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கல்டிவ்8 இன்குபேட்டர் திட்டத்தில் பங்கேற்றதை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கேற்றது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என மேஜிக் 20 தமிழ் நிறுவனர் அருண் பாரதி தெரிவித்துள்ளார்.
"மதிப்புமிக்க தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும், கற்றுக்கொண்டு வளரவும் இது அருமையான மேடையாக அமைந்துள்ளது. NIDHI திட்டத்தின் கீழ் நிதி பெற்றதும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது," என்று கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்றது பெருமைக்குறியது என இணை நிறுவனர் வாசு கார்த்திகேயன் கூறியுள்ளார்.
"எதிர்கால பயணம் குறித்து உற்சாகமாக இருக்கிறது," கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதல் முக்கியமானது, என நிறுவன முதன்மை தொழில்நுட்ப அதிகாரி பாலாஜி பிச்சுமணி கூறியுள்ளார்.
மேஜிக் 20 தமிழ் ஸ்டார்ட் அப் தனது ஆரம்ப பயணத்தில் நேச்சுரல்ஸ் இணை நிறுவனர் சி.கே.குமரவேல், இப்போபே இணை நிறுவனர் கே.மோகன், பிஎம்.எஸ் பஜார் நிறுவனர் பல்லவராஜன், ரேண்டம் வாக் இணை நிறுவனர் ஆனந்த மணி, குவி இணை நிறுவனர் பாலமுருகன் எஸ்.பி ஆகியோரிடம் நிதி பெற்றுள்ளது.
Edited by Induja Raghunathan