'விரும்பும் ஆடையினை அணிவது சுதந்திரம்!' - மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற ஆடையினை வடிவமைக்கும் ரஞ்சனி!
'ப்ராஜெக்ட் டிசைன் அபிலிட்டி' என்பது மாற்றுத்திறனாளிகளுக்காக (பிடபிள்யூடி) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகும். இது எளிதில் அணுகக்கூடிய மற்றும் எளிதில் அணியக்கூடிய ஆடைகளை வடிவமைக்கிறது.
ஆடை அணிவதற்கு மட்டும் மாற்றுதிறனாளியான பவானி அன்றாடம் 45 நிமிடங்களை செலவிடுகிறார். அதனையும் தாண்டி ஒரு கஷ்டம் இருக்குமேயானால், அது அன்றாட சுடிதார் பேன்ட் அணிவது. அவரது கணவர் மூர்த்தியின் உதவியின்றி அதை அவரால் அணிய இயலாது. இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று எளிதில் கடந்துவிட முடியாது! ஏனெனில், இங்கு எதுவுமே மாற்றுதிறனாளிகளின் நலன் கருதி உருவாக்கப்படுவதில்லை என்பதே உண்மை.
அதனை சரிசெய்யும் முயற்சியில் 'ப்ராஜெக்ட் டிசைன்அபிலிட்டி' எனும் பெயரில் மாற்றுதிறனாளிகளுக்கு ஏற்ற ஆடைகளை வடிவமைத்துள்ளது 'SciArtsRUs'- அமைப்பு.
சுடிதார் பேன்ட்களின் அடிப்பகுதி குறுகலாக இருப்பதால் அதனை அணிவதில் அசெளகரியம் ஏற்படுவதாக வருந்தும் பவானி போன்றவர்களுக்காக கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட லாப நோக்கற்ற அமைப்பான 'SciArtsRUs'- மாற்றுதிறனாளிகளுக்கு ஏற்ற ஆடைகளை வடிவமைத்து வருகிறது.
இவ்வமைப்பின் நிறுவனரான ரஞ்சினி கௌஷிக் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர். தொழில்ரீதியாக மூலக்கூறு உயிரியலாளர். மூட்டு வீக்கத்தால் அவதிப்பட்டு வந்த அவரது தாய், ஒவ்வொரு முறை புடவை அணியும் போதும் மூட்டுவலியால் கஷ்டப்பட்டும், மூச்சுத்திணறலையும் எதிர்கொண்டு வந்தார். தாயின் போராட்டத்தை கண்ட அவர், உடல்குறைபாடு உள்ளவர்களுக்கு ஆடை அணிவது எவ்வளவு சிரமமான விஷயம் என்பதை எண்ணி Project Design Ability திட்டத்தைத் தொடங்கினார்.
அதற்காக அவரது அமைப்பு, கடந்தாண்டு மகளிர் தினத்தன்று மாற்றுதிறனாளிகளின் கல்வி, மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆதரவை வழங்கி வரும், சென்னையை தளமாகக் கொண்ட லாப நோக்கற்ற நிறுவனமான வித்யா சாகருடன் சேர்ந்து இந்த திட்டத்தை தொடங்கியது. நிகழ்வின் ஒரு பகுதியாக, SciArtsRUs அமைப்பானது, சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டூடியோ வித்யாவின் கம்ஃபர்ட் டிசைன்ஸால் தைக்கப்பட்ட 100 அடாப்டிவ் டிசைனர் பிளவுஸ்களை வழங்கியது.
"இந்த பேன்ட்கள் நான் ரெடியாகுவதற்கு செலவாகும் நேரத்தையும், அதற்கான உழைப்பையும் குறைக்கிறது. நம்மில் பலருக்கும், குறைபாடு உள்ளவர்களுக்கும் நாம் விரும்புவதை அணிவது ஒரு முக்கியமான சுதந்திரம். அதனை கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளனர்," என்கிறார் பவானி.
ப்ராஜெக்ட் டிசைன் அபிலிட்டி என்பது மாற்றுத்திறனாளிகளுக்காக (பிடபிள்யூடி) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகும். இது எளிதில் அணுகக்கூடிய மற்றும் எளிதில் அணியக்கூடிய ஆடைகளை வடிவமைக்கிறது.
உதாரணமாக, ஸ்லிப்-ஆன் குர்தாக்களில் காந்த பட்டன்கள் முன்பக்கத்தில் தைக்கப்பட்டுள்ளன மற்றும் அளவை சரிசெய்வதற்காக பக்கவாட்டில் வரையப்பட்டிருக்கும். ஸ்லிப்-ஆன் சல்வார் பாட்டம்ஸ் கால்களுடன் ஜிப்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புடவைகளை 30 வினாடிகளுக்குள் அணியக்கூடிய வகையில் காந்த பட்டன்களுடன் வடிவமைத்துள்ளது.
மேலும், iArtsRUs அமைப்பானது ஆண்டுதோறும் ArtAbilities 4 All, ‘Wings Unlimited’ போன்ற கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்வை நடத்துகிறது. நான்கு கண்டங்கள் மற்றும் 8 நாடுகளைச் சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். அதே போன்று இந்தியாவில் 'மார்கழி மட்டும்' என்ற பெயரில் நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அதுபோன்றதொரு கலைத்தொடர்பான கலந்துரையாடலின் போது ரஞ்சனி, வித்யா சாகர் என்ஜிஓவின் உதவி ஒருங்கிணைப்பாளரான ஸ்மிதா சதாசிவனிடம், மாற்றுதிறனாளிகளுக்கு ஏற்ற ஆடை வடிவமைப்பு பற்றி பகிர்ந்தார். அதுநாள் முதல் மாற்றுதிறனாளிக்கு ஏற்ற ஆடை வடிவமைப்பு திட்டத்தில் பணிப்புரிந்து வருகிறார்.
"ஆடைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், நாகரீகமாகவும், குறைபாடுகள் உள்ள பெண்களுக்கு ஏற்றதாகவும் வடிவமைப்பது எப்படி என்று ரஞ்சனி யோசித்தார். அதற்காக, அனைத்து ஊனமுற்ற பெண்களின் உரிமைகளுக்கான மாநில மன்றத்திலிருந்து (SFRADW) மாற்றுதிறனாளிகள் எதிர்பார்க்கு ஆடைகளென்ன என்பது போன்ற உள்ளீடுகளைப் பெற்று, அதற்கேற்றாற் போன்று பணிபுரிந்தோம்.
அனைத்து ஆடைகளும் வித்யாவின் கம்ஃபர்ட் டிசைன்களால் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை ரூபாய் 1,300 முதல் தொடங்குகிறது" என்றார் ஸ்மிதா.
"மாற்றுதிறனாளிகளுக்கு ஏற்ற வடிவமைப்பை உருவாக்கும் அதே வேளை உலகளாவிய டிசைன்களையும் கவனம் செலுத்தி வடிவமைத்தோம். அந்நோக்கத்தினால், மாற்றுதிறனாளிகள் எளிதில் அணியும் வகையிலும், உலகளாவிய டிசைனிலும் இரு பக்கங்களின் வழி அணியும் ஆடையினை வடிவமைத்தோம். இந்த ஆடைகளை சில்லறை விற்பனை மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கச் செய்வதே எனது கனவு. இதன்மூலம் அதிகப்படியான மக்களை சென்றடைய முடியும். எங்களது தயாரிப்புகளால் மாற்றுதிறனாளிகள் மட்டும் அனைவருமே பயனடைந்துள்ளனர்," என்றார் ரஞ்சனி.