மலிவு விலையில் லேப்டாப்; 4ஜி சிம் கார்ட் - Jiobook-இன் சிறப்பம்சம், விலை என்ன?
ஆசஸ், ஹெச்பி மற்றும் லெனோவா போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே மலிவு விலை லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஜியோ நிறுவனமும் மலிவு விலையிலான ஜியோபுக் என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹெச்பி, லெனோவா போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே மலிவு விலை லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஜியோ நிறுவனமும் மலிவு விலையிலான ’ஜியோபுக்’ என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ டேட்டா, சிம்கார்டு, மொபைல் விற்பனையில் களைக்கட்டி வருகிறது. அடுத்த டார்க்கெட்டாக லேப்டாப் துறையில் கால்பதிக்க இருக்கிறது. மிகவும் மலிவு விலையில் அசத்தல் அம்சங்களும் லேப்டாப்பை களமிறக்க உள்ளது.
ஜியோபுக் அறிமுகம்:
இந்தியாவில் இ-மார்க்கெட்ப்ளேஸ் (GeM) வழியாக விற்பனை செய்யப்படு வரும் ‘Jiobook' தற்போது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்து வரும் இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC 2022) -யில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாகப்பட்டுள்ளதால் இதன் விலை ரூ.19,500 என மலிவான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஜியோபுக் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதத்திற்குள் கமர்ஷியல் விற்பனைக்கு இந்த மலிவு விலை ஜியோ புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோபுக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
- ஜியோ புக் லேப்டாப் 1366×768 பிக்சல்கள் ரெசல்யூஷன் உடன் 11.6 இன்ச் HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
- உலகின் முன்னணி தகவல் தொழில் நுட்ப ஜாம்பவான்களான குவால்காம் மற்றும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஜியோ கரம் கோர்த்துள்ளது. இதன் மூலம் ஜியோ புக் மடிக்கணினியில் குவால்காம் நிறுவனத்தின் சிப்பும், ரிலையன்ஸ் ஜியோபுக் செயலிகளுக்கான ஆதரவை மைக்ரோசாப்ட் வழங்குகிறது.
- ஸ்னாப்டிராகன் 665 செயலி மூலம் கிராபிக்ஸ் செய்ய Adreno 610 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது.
- ஜியோ புக் 4ஜியின் பாடி பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளதோடு, அதன் மேற்புறத்தில் 'ஜியோ' லோகோ பதிக்கப்பட்டுள்ளது. கீபோர்டில் உள்ள விண்டோஸ் பட்டனிலும் ஜியோ என எழுதப்பட்டுள்ளது.
- ஜியோ புத்தகத்தில் வெறும் 2 ஜிபி ரேம் மட்டுமே உள்ள நிலையில், பிற சேமிப்பு வசதிகள் குறித்து விரிவான தகவல்கள் இடம் பெறவில்லை.
- ஜியோபுக் லேப்டாப் ஜியோ ஓஎஸ் மூலம் இயக்கப்பட உள்ளது. மேலும் இதற்கு தேவையான ஆப்களை ஜியோ ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக்கூறப்படுகிறது.
- வீடியோ பதிவு செய்ய HD கேமராவும் உள்ளது. மைக்ரோசாஃப்ட் விளம்பர உலாவி மற்றும் ஜியோ கிளவுட் பிசி போன்ற ஜியோபுக்கில் சில ஆப்கள் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.