இந்தியாவின் புதிய ‘Akasa Air’ விமானப் பணியாளர்கள் Uniform-ஐ அறிமுகம் செய்தது!
ஸ்டார்ட்அப் விமான நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ தனது விமான பணியாளர்களுக்கான சீருடையை வெளியிட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் விமான நிறுவனமான 'Akasa Air' ‘ஆகாசா ஏர்’ தனது விமான பணியாளர்களுக்கான சீருடையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரும், பிரபல பங்குமுதலீட்டாளருமான Rakesh Jhunkhunwala-வின் ‘ஆகாசா ஏர்’ விமான நிறுவனம் இம்மாதத்தில் தனது சேவையை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது தனது ஆண் மற்றும் பெண் விமானப் பணியாளர்களுக்கான சீருடை எப்படியிருக்கும் என்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம், ஜூன் 21 அன்று இந்தியாவில் அதன் முதல் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை டெலிவரி பெற்றது மற்றும் இந்த வாரம் தனது விமானப் பயணங்களையும், அதைத் தொடர்ந்து வணிக நடவடிக்கைகளைத் தொடங்க ஏர் ஆபரேட்டர் அனுமதியையும் பெற உள்ளது.
Akasa Air சீருடையின் சிறப்பம்சங்கள்:
இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ தனது விமானக் குழுவினருக்கான சீருடையின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட சீருடையானது, இளமை, சமகால வடிவமைப்பு மற்றும் ஆகாசா ஏர் நிறுவனத்தின் அன்பான, நட்பான மற்றும் மகிழ்ச்சியான ஆளுமையை பிரதிபலிக்கும் வண்ணங்களைக் கொண்டுள்ளது.
பணிச்சூழலியல், அழகியல் மற்றும் வசதியை மனதில் கொண்டு, ஆகாசா ஏர் விமானத்தில் உள்ள விமானக் குழுவினருக்காக தனிப்பயனாக்கப்பட்ட பேண்ட், பிளேசர்கள் மற்றும் வசதியான ஸ்னீக்கர்களை அறிமுகப்படுத்திய முதல் இந்திய விமான நிறுவனம் இதுவே ஆகும்.
டிசைனில் மட்டுமல்ல ஆகாசா ஏர் நிறுவனம் தனது ஊழியர்கள் அணியும் சீருடை தயாரிக்கப்பட்டக்கூடிய துணியிலும் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.
ஊழியர்களின் பேண்ட் மற்றும் பிளேசருக்கான துணியானது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, கடல் கழிவுகளில் இருந்து மீட்கப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களிலிருந்து தயாரிக்கப்படும் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் துணியைப் பயன்படுத்தி சீருடை உருவாக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஊழியர்கள் விமானத்திற்குள் பிசியாக பணியாற்றும் போது எவ்வித அசெளகரியமும் ஏற்படாதபடியும், நீடித்து உழைக்கும் வகையிலும் சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
Akasa Air விமான பணியாளர்களுக்கான சீருடையை ராஜேஷ் பிரதாப் சிங் வடிவமைத்துள்ளார். குறிப்பாக இவரது கைவண்ணத்தில் டிசைன் செய்யப்பட்ட பணியாளர்களின் பிளேசர், இந்தியாவின் பந்த் காலா பகுதியில் இருந்து வருகிறது.
குழு உறுப்பினர்களின் பரபரப்பான வேலை நாள் மற்றும் நீண்ட நேரம் நின்றுகொண்டிருப்பது போன்றவற்றை சமாளிக்கும் வகையில், Vanilla Moon-ன் நிறுவனர் தீபிகா மெஹ்ரா இலகுவான ஸ்னீக்கர்களை வடிவமைத்துள்ளார்.
மேலும், சிறந்த ஆதரவை உறுதி செய்வதற்காக குதிகால் முதல் கால் வரை கூடுதல் குஷனிங் உள்ளது. சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட ஆகாசா ஏரின் அணுகுமுறைக்கு ஏற்ப, ஸ்னீக்கர்களின் அடிப்பகுதி பிளாஸ்டிக் இன்றி, மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பரில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
சீருடை குறித்து ஆகாசா ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் எக்ஸ்பிரியன்ஸ் ஆபீசர் பெல்சன் குடின்ஹோ கூறுகையில்,
“ஆகாசா ஏர் நிறுவனத்தில் நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஊழியர்களின் மையம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை மையமாக இருக்கும். எங்கள் அனைத்து பயணிகளுக்கும் அன்பான மற்றும் திறமையான பறக்கும் அனுபவத்தை உறுதி செய்வதற்காக எங்கள் குழுவினர் தங்கள் உழைப்பை செலுத்தும் போது பெருமையாகவும் வசதியாகவும் உணரும் வகையில் சீருடையை நாங்கள் வடிவமைத்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
யூனிபார்ம் டிசைனர் பற்றி:
ஆகாசா ஏர் நிறுவனத்திற்கான சீருடையை வடிவமைத்தவர் ராஜேஷ் பிரதாப் சிங் ஆவார். இவர், இந்தியாவின் பாரம்பரியத்துடன் நவீன டிசைன்களை கையாளும் கைவினைக் கலைஞர்.
அவரது ஆடைகள் உலகளாவிய ஈர்ப்பைக் கொண்டிருக்கின்றன, ஆனால், அவை உணர்ச்சி ரீதியாக இந்தியரின் டிசைனை வெளிக்காட்டுகின்றன. நவீனத்தை இணைத்துக்கொண்டு பாரம்பரிய நுட்பங்களுடனான அவரது சோதனைகள் அவரது படைப்புகளுக்கு ஆத்மார்த்தமான வடிவமைப்புகளைக் கொடுத்து வருகிறார்.
ஆகாசா ஏர் நிறுவன பணியாளர்களுக்காக சீருடையை வடிவமைத்த ராஜேஷ் பிரதாப் சிங் கூறுகையில்,
"இந்த சீருடைகள் பாணி மற்றும் நிலைத்தன்மையின் சரியான கலவையாகும் மற்றும் ஆகாசா ஏர் நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளை பிரதிபலிக்கின்றன. கருத்து முதல் இறுதி முடிவு வரை, இந்த வடிவமைப்புகளில் பணியாற்றுவதும், நமது காலத்தின் மிகவும் தனித்துவமான, நிலையான மற்றும் செயல்பாட்டு சீருடைகளில் ஒன்றை வழங்குவதும் எனக்கு ஒரு அற்புதமான பயணமாக இருந்தது," எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்னீக்கர் வடிவமைப்பாளர் பற்றி:
இந்திய கைவினைத்திறனை சர்வதேச வடிவமைப்புகளுடன் இணைப்பதில் Vanilla Moon நிறுவனர் தீபிகா மெஹ்ரா முக்கியத்துவம் வாய்ந்த டிசைனராக வலம் வருகிறார். சர்வதேச ஃபேஷன் டிசைன்கள் பற்றி முழுமையாகத் தெரிந்திருப்பதால், ஆகாசா ஏர் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட டிசைன் சேகரிப்பு வசதியாகவும், சமகாலமாகவும், மாறிவரும் பருவங்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதை வடிவமைப்புக் குழு உறுதி செய்துள்ளது.
வெண்ணிலா மூன் நிறுவனர் தீபிகா மெஹ்ரா மேலும் கூறுகையில்,
“இந்த காலணி வடிவமைப்பைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - இது நிலையான, செயல்பாட்டு, வசதியான, பாலின-நடுநிலை மற்றும் சமகாலத்திற்கு ஏற்றது. அவர்களின் வசதியை உறுதிப்படுத்தும் வகையில், ஆகாசா ஏரின் பணியாளர்களை மையமாகக் கொண்ட கலாச்சாரத்தையும் இந்த வடிவமைப்பு பிரதிபலிக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.