1994ல் அமேசானின் ஜெப் பெசாஸ் வெளியிட்ட முதல் வேலைவாய்ப்பு விளம்பரம் வைரல்!
ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்த போது அமேசான் நிறுவனம் முதன் முறையாக வெளியிட்ட வேலை வாய்ப்பு பற்றிய விளம்பரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்த போது அமேசான் நிறுவனம் முதன் முறையாக வெளியிட்ட வேலை வாய்ப்பு பற்றிய விளம்பரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
1994ம் ஆண்டு சியாட்டல், வாஷிங்டனில் புத்தகங்களை ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் நிறுவனமாக ஜெஃப் பெசோஸால் தொடங்கப்பட்ட அமேசான்.காம் நிறுவனம் இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து பன்னாட்டு ஆன்லைன் டெலிவரி நிறுவனமாக மாறியுள்ளது.
இப்போது குண்டூசி முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரை அனைத்தையும் உலகம் முழுவதும் விற்பனை செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 2021ம் ஆண்டின் கணிப்பின் படி அமேசான் நிறுவனத்தின் மதிப்பு $420.549 பில்லியனாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் ஆரம்பிக்கப்படும் போதும், உலக அளவில் பிரபலமடையும் என்றோ, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார் என்றோ யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். தற்போது இமாலய வளர்ச்சி அடைந்துள்ள அமேசான் நிறுவனம் 1994ம் ஆண்டு சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்த போது ஜெஃப் பெசோஸ் வெளியிடப்பட்ட முதல் வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது.
அமேசான் நிறுவனம் உருவான கதை:
ஜெஃப் பெசோஸ் தான் பணியாற்றி வந்த ஹெட்ஜ் நிதி நிறுவனமான டி.இ.ஷா.வின் முன்னாள் முதலாளியிடம், தனது படைப்பில் ஆர்வம் காட்டாத ஆன்லைன் புத்தகக் கடை பற்றிய தனது யோசனையை முதலில் தெரிவித்தார்.
ஆனால், முதலாளி அந்த யோசனையை ஏற்காததால், வேலையை ராஜினாமா செய்த ஜெஃப் பெசோஸ், 1994ல், தனது தொடக்க நிறுவனமான Amazon.com-யை சியாட்டிலில் உள்ள ஒரு கேரேஜில் தொடங்கினார். கேரேஜில் ஆரம்பிக்கப்பட்ட சாம்ராஜ்யமான அமேசான் மூலமாக, இன்று பெசோஸ் உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
வைரலாகும் முதல் வேலை வாய்ப்பு விளம்பரம்:
பெசோஸ் 1994ல் தனது இ-காமர்ஸ் நிறுவனத்தின் முதல் வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை தற்போது வெளியிட்டுள்ளது வைரலாகியுள்ளது. அதில் சிக்கலான அமைப்புகளை வடிவமைத்து உருவாக்கக்கூடிய ஒருவருக்கு தான் வேலை வழங்கப்படும் என அறிவித்திருந்துள்ளார்.
அத்துடன் கணினி அறிவியலில் BS, MS அல்லது Phd பெற்றிருக்க வேண்டும். உயர்ந்த தகவல் தொடர்புத் திறன் இணைய சேவையகங்கள் மற்றும் HTML தெரிந்திருப்பது உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திறமையான, ஊக்கமளிக்கும், தீவிரமான மற்றும் சுவாரஸ்யமான சக பணியாளர்களை எதிர்பார்க்கலாம். சியாட்டில் பகுதிக்கு இடமாற்றம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் (நகரும் செலவுகளை ஈடுகட்ட உதவுவோம்). உங்கள் இழப்பீட்டில் அர்த்தமுள்ள ஈக்விட்டி உரிமையும் அடங்கும். வேலை பட்டியலைப் படிக்கவும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆலன் கேயின் எழுச்சியூட்டும் மேற்கோள் - "எதிர்காலத்தை கணிப்பதை விட கண்டுபிடிப்பது எளிது" என்று வேலை விளம்பரம் முடிவடைந்துள்ளது.
அமேசான் பயணம் தொடங்கி தற்போது 28 ஆண்டுகள் ஆகும் நிலையில், முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரம் சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தொகுப்பு - கனிமொழி