’தமிழ் மொழியின் பெருமை'- டிவிட்டரில் பதிவிட்ட ஆனந்த் மகிந்திரா!
தமிழ் மொழியின் பெருமை குறித்து இதுவரை அறியாமல் இருந்ததற்காக வெட்கப்படுவதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் மொழியின் பெருமை குறித்து இதுவரை அறியாமல் இருந்ததற்காக வெட்கப்படுவதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டும் வரை, உலகின் பழம்பெரும் மொழி எனும் தமிழ் மொழியின் பெருமை குறித்து தெரியாமல் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில் கூறியுள்ளார்.
அண்மையில் கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கை, தமிழர் கலாச்சாரம் மற்றும் மொழியின் தொன்மை குறித்து உணர்த்துவதாக அமைந்துள்ளது. இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கணியன் பூங்குன்றனின்,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற, புறநானூற்றுப் பாடலை மேற்கோள்கட்டி தமிழைப் புகழ்ந்து பேசினார்.
மேலும், சென்னை ஐஐடி விழாவில் பேசும் போது மீண்டும் தமிழ் மொழி பற்றி மோடி குறிப்பிட்டார். “நான் அமெரிக்க சென்று வந்திருக்கிறேன். அங்கு பேசும் போது, தமிழ் மிகவும் பழமையான மொழி என்று கூறினேன்,” என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் கருத்து தமிழ் மொழி மீது பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பிரபல தொழலதிபரான ஆனந்த் மகிந்திரா, டிவிட்டரில் தமிழி மொழி பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.
“ஐ.நா.வில் பேசும் போது, தமிழ் தான் உலகிலேயே பழமையான மொழி என்று பிரதமர் மோடி குறிப்பிடும் வரை, இந்தத் தகவலை அறியாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். இந்த அரிய பெருமை தொடர்பாக இந்தியா முழுவதும் விழிப்புணர்வு மற்றும் பெருமையை நாம் பரவச்செய்ய வேண்டும்,” என மகிந்திரா குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு குறும்பதிவில், “ஊட்டியில் உள்ள உறைவிடப்பள்ளியில் நான் படித்தேன். அப்போதே தமிழை கற்றிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, என் வகுப்புத் தோழர்களிடம் இருந்து துஷ்பிரயோகம் செய்யும் சில வார்த்தைகளைத் தான் கற்றுக்கொண்டேன். இது தமிழ் பேசும் என் நண்பர்களை வெட்கப்பட வைத்தது,” என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில் தமிழ் மொழியின் பெருமை குறித்து தெரிவித்துள்ளது, பெரும் விவாதத்தை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கானோரை இது தொடர்பாக கருத்து தெரிவிக்க வைத்துள்ளது. பெரும்பாலனோர் தமிழ் மொழி பெருமை குறித்த தகவல்களை அதில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.