'அனைவருக்கும் செயலி' - மொத்த மக்கள்தொகையின் தொழில்நுட்பத்தை உருவாக்குவது பற்றி இளம் நிறுவனர்களின் உரையாடல்!
யுவர்ஸ்டோரியின் முதல் டெவலர்ப்பர் மாநாடு டெவ்ஸ்பார்கஸ் 2024 ல் ஜெஸ்பே நிறுவனர் விமல் குமார், டிஜி யாத்ராவின் ராம் குன்சூர், மொத்த மக்கள்தொகைக்குமான தொழில்நுட்பத்தை உருவாக்குவது பற்றி பகிர்ந்து கொண்டனர்.
பெரிய அளவில் வளர்ச்சி பெறக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்க ஊக்கம் பெற இனியும் இந்தியா மேற்கை நோக்கியிருக்க வேண்டியதில்லை. கடந்த சில ஆண்டுகளில், அனைத்து மக்களுக்குமான செயலிகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கியுள்ளது. ஆதார், யுபிஐ, டிஜி யாத்ரா, நம்ம யாத்ரி (ஜஸ்பே உருவாக்கம்) ஆகியவை உதாரணங்கள்.
யுவர்ஸ்டோரியின் முதல் டெவலர்ப்பர் மாநாடு 'டெவ்ஸ்பார்கஸ் 2024' இல் பேமெண்ட் உள்கட்டமைப்பு நிறுவனம் ஜஸ்பே (Juspay) நிறுவனர் விமல் குமார் மற்றும் டிஜி யாத்ரா அறக்கட்டளை புதுமையாக்க தலைவர் நாம் குன்சூர் பெரிய மக்கள் தொகைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது பற்றி உரையாட ஏற்பாடு செய்தோம்.
பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தனியுரிமை, நிதிநுட்பத்துறையில் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பான உரையாடல் அமைந்திருந்தது.
அனைவருக்குமான செயலிகள்: ’மொத்த மக்கள்தொகைக்கு தொழில்நுட்பத்தை உருவாக்குதல்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடலில் பேசியவர்கள், துடிப்பான டிஜிட்டல் சூழலின் தேவையை வலியுறுத்தினர். நிஜ உலகில் ஏஐ மற்றும் எம்.எல் கோட்பாடுகளை பயன்படுத்துவதில் உள்ள சவால்களை சுட்டிக்காட்டினர்.
இந்த உரையாடலின் தொகுப்பு:
யுவர்ஸ்டோரி [ஒய்.எஸ்]: பொது உள்கட்டமைப்புன் அடிப்படை அங்கங்கள் என்ன?
விமல் குமார் [விகே]: செயலி உருவாக்கம் பற்றி பேசும் போது, ஸ்டேக்கை கடந்து நாம் செல்ல வேண்டும். பொது உள்கட்டமைப்பின் அடிப்படை அங்கம் அரசு பங்கேற்புடன், அறிவியல் அடிப்படைகளைக் கொண்டிருப்பதாகும்.
ராம் குன்சூர் [ஆர்கே]: பொது உள்கட்டமைப்பு என்பது உங்கள் தரவுகளை பல்வேறு பங்குதாரர்களோடு பகிரும் அதே நேரத்தில், பெரிய அளவில் விரிவாக்கம் செய்யக்கூடியது. தொழில்நுட்பம், தரவுகள் தொகுப்பு, வலை சேவை, பிளாக்செயின் போன்றவை அடிப்படை அங்கங்களாகின்றன.
ஒய்.எஸ்: டிஜி யாத்ராவின் பழைய வடிவை பலரால் பயன்படுத்த முடியாத அண்மை சர்ச்சை பற்றி விளக்கம் அளிக்க முடியுமா?
ஆர்.கே: எங்கள் தரவுகள் தொகுப்பு எதுவும் மைய சேமிப்பு கொண்டிருக்கவில்லை. எல்லா தரவுகளும் உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ளன. யாரேனும் செயலியை ஹேக் செய்ய விரும்பினால், நான்கு மில்லியன் பயனாளிகள் சாதனங்களையும் ஹேக் செய்ய வேண்டும். பயனாளிகள் தரவுகள் பாதுகாப்பாக உள்ளன. பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, விமான நிலையங்களுடன் தரவுகள் பகிர்வு பயனாளிகள் சம்மத்ததுடன் நிகழ்கிறது. டிஜி யாத்ரா செயலியை நீக்கியவுடன் தரவுகளும் மறைந்துவிடுகின்றன.
இந்த செயலி ஆதார் மேடை மீது உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் டிஜிலாக்கரை அணுக அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு தேவை.
ஓய்.எஸ்: ஆனால், செயலியின் பழைய வடிவை ஏன் பயன்படுத்த முடியவில்லை?
ஆர்.கே: நிட்டி ஆயோக்கின் அடல் புதுமையாக்க திட்டத்தின் அங்கமாக டிஜி யாத்ரா விளங்குகிறது. டிஜி யாத்ரா அறக்கட்டளை சூழலின் கீழ் பங்கேற்ற பல நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. எனவே, மொத்த ஐபி அறக்கட்டளைக்கு உரியது. எனவே, பழைய அல்லது புதிய செயலியாக இருந்தாலும் தரவுகளை மையமாக சேமிக்கப்படவில்லை. இதை எங்கள் டொமைனுக்கு, பொது உள்கட்டமைப்புக்கு மாற்றினோம். ஏனெனில், மற்ற விமான நிலையங்கள், சிறிய நகரங்களில் வளர விரும்பினோம். இந்த செயலி பாதுகாப்பானது.
ஒய்.எஸ்: நம்ம யாத்ரி இனியும் ஜஸ் பே கீழ் இல்லை என்றாலும், இதை சாத்தியமாக்க பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள். இது எப்படி சாத்தியமானது?
வி.கே: நம்ம யாத்ரிக்கு முன், யுபிஐ துவக்கத்தில் இருந்து பணியாற்றியுள்ளோம். அதற்கு முன்னரும் கூட, ஒரு பேமெண்ட் நிறுவனமாக, பேமெண்டை கடந்து செயல்பட வேண்டும் என நினைத்துள்ளேன். எதை செய்தாலும் முடிவுக்கு வந்தது போல தோன்றி அடுத்து என்ன என யோசித்தோம்.
மொத்த மக்கள்தொகை வளர்ச்சியை நோக்கிய எங்கள் பயணம் பேமெண்டில் துவங்கியது. பின்னர் யுபிஐக்கு பங்களித்து முதல் பீம் செயலியை உருவாக்கினோம். தொழில்நுட்பம் தவிர சேவை வடிவமைப்பிலும் ஈடுபட்டோம். எனவே, பலருடன் இணைந்து பணியாற்றினோம். அவர்கள் ஒன்றாக இணையும் வாய்ப்பும் உண்டானது.
அதே போல, போக்குவரத்து தொடர்பாக யோசித்துக்கொண்டிருந்த போது, எல்லாமே முழுவதும் டிஜிட்டல்மயமாக்கப்பட வேண்டும் என நினைத்தோம். போக்குவரத்து தொடர்பான எல்லாமே டிஜிட்டல்மயமாக்கப்படுவதால் ஊக்கம் பெற்றோம். இதற்கான இயங்குதளம், பற்றி யோசித்தோம். இணையம் மணல் கண்ணாடி முறையில் அமைந்தது. அதே முறையை பின்பற்ற தீர்மானித்தோம்.
நம்ம யாத்ரியின் நோக்கம் எப்போதோ உருவாகி, இப்போது போக்குவரத்துடன் ஒருங்கிணைந்துள்ளது.
ஒய்.எஸ்: டிஜி யாத்ரா டெக்ஸ்டேக்கில் பல்வேறு அம்சங்கள் என்ன?
ஆர்.கே: இது ஆண்ட்ராய்டு, ஐபோன் செயலியாக துவங்கியது. அதன் பின், முகத்தை சரி பார்க்க ஏஐ நுட்பம் பயன்பட்டது. பயோமெட்ரிக்ஸ், கம்ப்யூட்டர் விஷன் முக்கியப் பங்கு வகிக்கிறது. பின்னர் பிளாக்சைன் அங்கம் வந்தது.
எங்களிடம் தரவுகள் தொகுப்பு இல்லை. நிலை மதிப்பை சேமிக்கிறோம். இது தனிப்பட்ட அடையாளம் அல்ல. பின்னர் விமான நிலையங்களுடன் வரிசை தகவலை பகிர்கிறோம். விமானங்கள் ஒருங்கிணைப்பில் வலை சேவைகள் வருகின்றன. புறப்பாடு கட்டுப்பாடு அமைப்பு என ஒன்று இருக்கிறது. இவை அனைத்தும் மொத்த சூழலில் உள்ளன. ஆனால், ஒவ்வொரு நுட்பமும் ஒரு அமைப்பு போன்றது.
ஒய்.எஸ்: நீங்கள் என்றென்றும் அறிவியலின் மாணவர் என்றீர்கள். நீங்கள் குழப்பம் அடைந்து மீண்டும் மதிப்பீடு செய்த அடிப்படையான விஷயம் எது?
வி.கே: நான் கணிதத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். சிம்பாலிக் ஏஐ மற்றும் நியூரால் நெட்வொர்க் இணைந்திருக்க வேண்டும். இதை சரி பார்க்கக் கூடியதாக மாற்ற வேண்டும்.
ஒய்.எஸ்; டிஜிட்டல் உள்கட்டமைப்பு மீது உருவாக்க போதிய அணுகல் வசதி இல்லை என்பது டெவலப்பர்கள் குறையாக இருக்கிறது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் பங்கேற்பது எப்படி?
ஆர்.கே: நான் பட்டம் பெற்ற போது இருந்தது போல் அல்லாமல் இப்போது நிறைய ஹேக்கத்தான்கள் நிகழ்கின்றன. அரசு ஆதரவு அளிக்கிறது. டெவலப்பர்கள் இவற்றில் பங்கேற்க வேண்டும். வெற்றிபெறாவிட்டாலும் நல்ல கற்றலாக அமையும்.
இரண்டாவதாக, ஒரு புரோகிராமிங் மொழியேனும் தெரிய வேண்டும். ஏஐ போன்ற நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். மூன்றாவதாக அரசு தளங்களை பார்த்து பொருத்தமாக நிகழ்வுகளை அறியவும். ஓபன் சோர்ஸ் நுட்பங்களை நாடவும்.
வி.கே: டிபிஐ ஒரு பயணம். அது பெரியதாகும் போது அணுகலும் அதிகமாகும்.
ஆங்கிலத்தில்: டெபோலினா பிஸ்வாஸ், தமிழில்: சைபர் சிம்மன்
'தொழில்புரட்சியை விட அதிக தாக்கத்தை ஏஐ நுட்பம் கொண்டு வரும்' - ஏஐ ஊழியர் சேவை நிறுவனர் சுரோஜி சாட்டர்ஜி!
Edited by Induja Raghunathan