முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் விர்மானி Niti Aayog முழுநேர உறுப்பினராக நியமனம்!

By Kani Mozhi
November 16, 2022, Updated on : Wed Nov 16 2022 11:01:32 GMT+0000
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் விர்மானி Niti Aayog முழுநேர உறுப்பினராக  நியமனம்!
2007 முதல் 2009ம் ஆண்டு வரை நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த விர்மானி நிதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

2007 முதல் 2009ம் ஆண்டு வரை நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அர்விந்த விர்மானி நிதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


1950ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான மத்திய அமைச்சரவை மூலம் உருவாக்கப்பட்ட திட்ட கமிஷன், மாநிலங்களுக்கான நிதி பகிர்வுகளை கவனித்து வந்தது. அதன் பின்னர், 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் திட்ட கமிஷன் கலைக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டு, 2015ம் ஆண்டு ‘நிதி ஆயோக்’ ‘Niti Aayog' அறிமுகப்படுத்தப்பட்டது.

aravind

இதன் தலைவராக பிரதமரும், ஒரு தலைமை செயல் அதிகாரி மற்றும் துணைத்தலைவர் இடம் பெறுவார்கள். முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த 2 பேர், பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். சில முழு நேர உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள். அத்துடன் பிராந்திய கவுன்சிலில் மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நிதி ஆயோக் முழுநேர உறுப்பினர்:

பிரதமர் தலைமையிலான NITI ஆயோக் குழு தற்போது டாக்டர் வி கே சரஸ்வத், பேராசிரியர் ரமேஷ் சந்த் மற்றும் டாக்டர் வி கே பால் ஆகிய மூன்று நபர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.


தற்போது 2007-2009க்கு இடையில் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய அரவிந்த் விர்மானியை முழு நேர உறுப்பினராக நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நிதி ஆயோக்கின் முழுநேர உறுப்பினராக விர்மானியின் நியமனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நவம்பர் 15ஆம் தேதி அமைச்சரவை செயலகம் வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அமைச்சரவை செயலகத்தின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“நிதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக, பொருளாதார வளர்ச்சி மற்றும் நலனுக்கான அறக்கட்டளையின் நிறுவனர், தலைவர், அரவிந்த் விர்மானியை பிரதமர் நியமித்துள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரும் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினராக நீடிப்பார்,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த அரவிந்த் விர்மானி?

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற விர்மானி, திட்டக் கமிஷனின் முதன்மை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.


பொருளாதார வளர்ச்சி மற்றும் நலனுக்கான அறக்கட்டளையின் நிறுவனர்-தலைவரான விர்மணி, 2007-09 வரை மன்மோகன் சிங் தலைமையிலான UPA அரசாங்கத்தின் போது நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். இந்த காலக்கட்டத்தில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக செயல்பட்ட வந்துள்ளார். ப.சிதம்பரம் நிதித்துறையில் இருந்து உள்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு பிரணாப் முகர்ஜியுடன் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.


அர்விந்த் விர்மானி, பிப்ரவரி 2013 முதல் ஆகஸ்ட் 2016 வரை பணவியல் கொள்கை குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

'தி சுடோகு ஆஃப் இந்தியாஸ் க்ரோத்' , 'யுனி-போலார் முதல் ட்ரை போலார் வேர்ல்ட் வரை: மல்டி-போலார் டிரான்ஸிஷன் பாரடாக்ஸ்' , 'இந்தியாவை சோசலிச தேக்க நிலையிலிருந்து உலக சக்திக்கு உந்துதல்; மற்றும் வேகமான வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைப்பு - இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு கொள்கை கட்டமைப்பு' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

2019ம் ஆண்டு வாஷிங்டன் டிசியின் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட அர்விந்த் விர்மானி, 2012ம் ஆண்டு வரை இந்தியா, பங்களாதேஷ், இலங்கை மற்றும் பூட்டானை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக பணியாற்றியுள்ளார்.