உலகின் முதல் எரிவாயு மோட்டார்சைக்கிள் பஜாஜ் அறிமுகம்- விலை, மைலேஜ் என்ன?
பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களுக்கு பதிலாக செலவு குறைந்த இந்த சி.என்.ஜி இருசக்கர மோட்டார் வாகனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக இந்த புதிய கண்டுபிடிப்பு இரு சக்கர வாகன துறையில் புரட்சியை ஏற்படுத்தும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ‘Freedom’ என்னும் உலகின் முதல் CNG இயக்க மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. சி.என்.ஜி. என்னும் நெருக்கி அழுத்தப்பட்ட எரிவாயுவில் ஓடும் முதல் இருசக்கர வாகனம் இதுவே என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ‘ஃப்ரீடம்’ என்ற சி.என்.ஜி. இருசக்கர மோட்டார் வாகனம் 125 சிசி வாகனமாகும், மேலும், இதன் விலை ரூ.95,000 ஆகும். இது தொடர்பாக பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:
பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களுக்கு பதிலாக செலவு குறைந்த இந்த சி.என்.ஜி இருசக்கர மோட்டார் வாகனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக இந்த புதிய கண்டுபிடிப்பு இரு சக்கர வாகன துறையில் புரட்சியை ஏற்படுத்தும்.
பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களுடன் ஒப்பிடும்போது, எரிபொருள் செலவினங்களை இந்த சிஎன்ஜி இருசக்கர வாகனம் 50 சதவீதம் குறைக்கின்றது. சிஎன்ஜி டேங்க்கில் வெறும் 2 கிலோகிராம் எரிபொருள் நிரப்பினால் போதும் 200 கிமீ வரை மைலேஜ் தரும். இதோடு கூடுதல் வசதி என்னவெனில் இந்த வாகனத்தில் 2 லிட்டர் பிடிக்கும் பெட்ரோல் டேங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. சி.என்.ஜி. டேங்கில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் இந்த 2 லிட்டர் பெட்ரோல் வசதியும் மேலும் 130 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராகேஷ் சர்மா ஒரு அறிக்கையில்,
“பஜாஜ் ஃப்ரீடம் 125 வாகனம் பஜாஜ் ஆட்டோவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் தரத்தையும் உற்பத்தித் திறனையும் வெளிப்படுத்துகிறது. புத்தாக்கம் மூலம் பஜாஜ் ஆட்டோ அதிகரித்து வரும் எரிபொருள் செலவைக் குறைப்பதோடு மற்றும் பயணத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பில் மானுடத் தடயத்தின் பங்கையும் குறைக்கும் இரட்டைச் சவால்கள்க்குத் தீர்வு காண முயல்கிறது,” என்றார்.
‘இந்தியாவின் 45% மின்சார வாகன விற்பனை தென் இந்தியாவில் இருந்தே வருகிறது’ - அறிக்கையில் தகவல்!