‘இந்தியாவின் 45% மின்சார வாகன விற்பனை தென் இந்தியாவில் இருந்தே வருகிறது’ - அறிக்கையில் தகவல்!
இந்தியாவின் மிகப்பெரிய 4வது EV எக்ஸ்போ -மாநாடான ‘இந்தியா EV 2024’ ஜூன் மாதம் 29-30 இருநாட்கள் அன்று சென்னை டிரேட் செண்டரில் நடைபெற்றது. அதில், 'An Overview of Indian Electric Vehicle Market: Trends And Future Outlook' என்ற அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் மின்சார வாகன (EV) விற்பனையில் 45% தென்னிந்தியாவிலிருந்து வருகிறது, என்று ஃபிராஸ்ட் அண்ட் சல்லிவன் வெளியிட்டுள்ள 'An Overview of Indian Electric Vehicle Market: Trends And Future Outlook' என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2023-24 நிதியாண்டில் விற்கப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 17 லட்சம் என்று ஜேஎம்கே ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தது. இந்த விற்பனையில் தென் இந்தியாவின் பங்களிப்பு 45%, அதாவது, மின்சார வாகன விற்பனையில் தென் இந்தியாதான் அதிக பங்களிப்பு செய்துள்ளது என்று இந்த அறிக்கை இப்போது தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய 4வது EV எக்ஸ்போ -மாநாடான ‘இந்தியா EV 2024’ ஜூன் மாதம் 29-30 இருநாட்கள் அன்று சென்னை டிரேட் செண்டரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் “An Overview of Indian Electric Vehicle Market: Trends And Future Outlook” என்ற அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கை, நாட்டின் மின்சார வாகன இலக்கு, ட்ரெண்ட் மற்றும் கண்ணோட்டத்தை வழங்கியது. இந்தியா EV 2024 ஆனது ‘தொழில்முனைவோர் இந்தியா’வால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது கனரக தொழில்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், Guidance தமிழ்நாடு, இந்திய-இத்தாலிய வர்த்தகக் கூட்டமைப்பு, ARAI (ஆட்டோமோட்டிவ் ரிசர்ச்) உட்பட மதிப்பிற்குரிய தொழில் அமைப்புகள் மற்றும் அமைச்சகங்களின் குறிப்பிடத்தக்க ஆதரவால் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கவுரவ விருந்தினராக ‘Guidance தமிழ்நாடு-வின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான விஷ்ணு ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டார்.
JIO BP இன் CEO ஹரிஷ் மேத்தா, Citroen India இன் பிராண்ட் இயக்குனர் ஷிஷிர் மிஸ்ரா, இந்தோ-இத்தாலிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் Dr. Sauro Mezzetti மற்றும் IIT மெட்ராஸ் பேராசிரியர் Dr.அசோக் ஜுன்ஜுன்வாலா உட்பட பிரபல தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டு மாநாட்டில் மின்சார இயக்கத்தின் எதிர்காலம் பற்றிய தொலைநோக்கு பார்வைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தியாவில் EV சந்தை குறித்த Frost & Sullivan-இன் அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:
1. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 123,000 யூனிட் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் (பயணிகள் கார்கள்) இந்தியாவில் விற்கப்படும்; இது 2023 இல் விற்கப்பட்ட ~83,000 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 47.9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
2. டாடா மோட்டார்ஸ் 64%க்கும் அதிகமான சந்தைப் பங்குடன் முன்னணியில் உள்ளது; Tata Nexon EV 2023 இல் அதிக விற்பனையான மின் வாகனமாகும்.
3. இந்தியாவின் EV விற்பனையில் தென்னிந்தியா முன்னணியில் உள்ளது, நாட்டின் கிட்டத்தட்ட பாதி விற்பனை தென் இந்தியப் பகுதியில் இருந்துதான் வருகிறது.
4. தமிழ்நாட்டில் OEM (Original Equipment manufacuture)கள், உதிரிபாக சப்ளையர்கள் மற்றும் பேட்டரி/செல் உற்பத்தி நிறுவனங்களின் வளர்ந்து வரும் இருப்பு, இந்தியாவில் EV விற்பனை மற்றும் EV R&D மையத்தின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அபரிமித பங்களிப்பு செய்கிறது.
5. தற்சமயம், ஹூண்டாய் மோட்டார் மற்றும் ஸ்டெல்லண்டிஸ் ஆகியவை தமிழ்நாட்டில் மின்சார பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. மேலும், Renault-Nissan மற்றும் BMW போன்ற பிற முக்கிய வாகன நிறுவனங்கள் மாநிலத்தில் EV-களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6.OEMகள் 2030 ஆம் ஆண்டளவில் 60-70% EV உதிரிபாகங்களின் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இதில் பேட்டரியைத் தவிர முக்கியமான மின் வாகன பாகங்கள் அடங்கும்.
‘இந்தியாவில் புதைபடிவ எரிபொருள் நுகர்வு 8% அதிகரிப்பு' - அறிக்கையில் தகவல்!