உங்க போனில் உள்ள ஆபத்தான ஆப்’களை கண்டறிந்து டேட்டாவை பாதுகாக்க உதவும் ‘BeVigil’
ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய உதவுகிறது BeVigil எனும் செயலி. இந்த செயலியை பயனர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என சொல்லப்படுகிறது.
இன்றைய ஸ்மார்ட் யுகத்தில் அனைத்தும் ஸ்மார்ட் ஆகிவிட்டது. கல்வி முதல் பல்வேறு துறைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. அதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன்கள்.
அடையாள அட்டை, வங்கிக் கணக்கு விவரம், வணிகம் சார்ந்த விவரங்கள், குடும்ப மற்றும் தனிப்பட்ட விவரங்கள் என அனைத்தும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்களின் போன்களில்தான் இன்று இருக்கிறது. இதன் மூலம் எளிய முறையில் நினைத்த நேரத்தில் அவரவர் தங்களுக்கு வேண்டியவற்றைப் பெற முடிகிறது.
இதனை பயனர்கள் சிக்கலின்றி செய்ய உதவுகின்றன ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள செயலிகள் (அப்ளிகேஷன்ஸ்). ஆண்ட்ராய்டு போன் பயனர்களின் உலகம் என்பது அப்ளிகேஷன்களை கொண்டே அமைந்துள்ளது. இந்த ஆப்’கள் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய உதவுகிறது ’
’ எனும் செயலி. இந்த செயலியை பயனர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என சொல்லப்படுகிறது.ஏனெனில், டிஜிட்டல் எந்த அளவுக்கு ஸ்மார்ட் ஆனதோ, அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட. அதனால் ஸ்மார்ட்போனில் செயலிகளை கையாளும் போது கொஞ்சம் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஸ்மார்ட் யுகத்தில் பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதும் அவசியம்.
அவ்வபோது கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் சில செயலிகள் நீக்கப்பட்ட செய்திகளை நாம் கவனித்திருப்போம். இந்த ஆப்’கள் அதன் பயனர்களின் போனில் உள்ள பல்வேறு தரவுகளை அத்துமீறி திரட்டியது அல்லது சேகரித்தது கூட பிளே ஸ்டோர் நீக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
சில நாடுகளில் பாதுகாப்பு கருதியும் பிற நாடுகளின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சீன செயலிகள் தேசப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி செயலிகள் விஷயத்தில் கவனமாக இருந்தாலும் சில நிறுவனங்கள் தங்கள் கைவரிசையை காட்டுவது உண்டு. இது அனைத்தும் பயனர்களின் தரவுகளுக்காகதான். அது தனிப்பட்ட தரவுகள் துவங்கி போனில் உள்ள கான்டக்ட் எண்கள் என நீளும். இது வணிக ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் இருக்கலாம்.
பெரும்பாலும் பயனர்கள் அதை கண்டும் காணாமல் நகர்வார்கள். ஏனெனில், செயலிகளை போன்களில் இன்ஸ்டால் செய்யும் போது சில பர்மிஷன்களை Allow செய்ய சொல்லி கேட்கும். பெரும்பாலும் இவை கேமரா, மைக்ரோபோன், இருப்பிடம், கான்டக்ட் போன்றவையாகதான் இருக்கும். இந்த விஷயத்தில் பயனர்கள் விழிப்புடன் செயல்பட உதவுகிறது BeVigil செயலி.
BeVigil செயலி
மொபைல் செயலிகளுக்கான முதல் செக்யூரிட்டி சேர்ச் என்ஜின் என இந்த செயலி சொல்லப்படுகிறது. இது ஏஐ தொழில்நுட்பத்தின் ஊடாக டிஜிட்டல் அச்சுறுத்தலைக் கண்டறிய உதவும் CloudSEK-ன் ப்ராடெக்ட்களில் ஒன்று. இது இந்தியாவில் இயங்கி வரும் நிறுவனம் எனத் தெரிகிறது.
நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களில் இன்டர்னல் மால்வேர் அச்சுறுத்தல் உள்ளதா என்பதை மானிட்டர் செய்ய முடியும். அதற்கு பல மென்பொருட்கள் உள்ளன. அதுவே இணையவழியாக ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்கும் நோக்கில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை பயனர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொள்வதன் மூலம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் செயலிகளின் பாதுகாப்பு தன்மை மற்றும் அதன் ரேட்டிங்கை அறிந்து கொள்ள முடியும். Safe, Moderate, Risky, Dangerous என செயலிகள் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் ரிப்போர்டை இந்த செயலி பயனர்களுக்கு வழங்குகிறது.
இது தவிர குறிப்பிட்ட செயலியின் விரிவான ரிப்போர்டையும் பயனர்கள் பெறலாம். இதில் அந்த குறிப்பிட்ட செயலியின் ரிஸ்க் குறித்த தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன. மேலும், பயனர்கள் தங்கள் போனில் புதிதாக ஒரு செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னதாகவும் பாதுகாப்பு குறித்த தகவல்களை இதில் பெற முடியும்.
அனைத்து ஆண்ட்ராய்டு செயலிகளின் விவரங்களையும் இதில் பெறலாம். பாதுகாப்பு வேண்டும் எனக் கருதும் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம். சிறப்பான பயனர் அனுபவத்தை தருவதாகவும், பயன்படுத்த எளிதாக இருப்பதாகவும் இந்த செயலியை பயன்படுத்தி வரும் பயனர்கள் பிளே ஸ்டோரில் கமெண்ட் செய்துள்ளனர்.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதனை இலவசமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பிளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/search?q=bevigil&c=apps
Edited by Induja Raghunathan