75 பொறியாளர்கள், ப்ராடக்ட் மேனேஜர்கள் தேவை: BharatPe திட்டம்!
நிதி நுட்ப நிறுவனமான பாரத்பே, தனது தொழில்நுட்பக் குழுவை விரிவாக்க டில்லியில் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை அமைக்க உள்ளது.
நிதி நுட்ப நிறுவனமான ’பாரத்பே’, BharatPe தனது தொழில்நுட்பக் குழுவை விரிவாக்க மற்றும் விரிவாக்கப்பட்ட குழுவுக்காக தில்லியில் தொழுல்நுட்ப மையம் அமைக்கவும் 75 பொறியாளர்கள் மற்றும் திட்ட மேலாளர்களை பணிக்கு நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
"பாரத்பே, தனது விரிவாக்கப்பட்ட பொருள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுக்காக தில்லியில் அதி நவீன தொழில்நுட்ப மையத்தை அமைக்க உள்ளோம். நிறுவனம் இந்த ஆண்டு 75 பொறியாளர்கள் மற்றும் திட்ட மேலாளர்களை பணிக்கு நியமித்து, தொழில்நுட்பக் குழுவை விரிவாக்க உள்ளோம்,” என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்ப மையம், பாரத்பே’வின் பிராடகட் உருவாக்கம் மற்றும் புதிய புதுமையாக்கத்திற்கான அடிப்படையாக அமையும்.
"இந்த மையத்திற்காக நிறுவனம் 0.5 மில்லியனுக்கு மேல் செலவு செய்கிறது. மேலும், நிறுவனம் தனது தொழில்நுட்ப மைய ஊழியர்களை, முன்னணி நிதி நுட்ப நிறுவனங்களிடம் இருந்து கற்று வர, அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பு வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஷ்னீர் குரோவர் மற்றும் சஷ்வத் நக்ரனியால், 2018ம் ஆண்டு துவக்கப்பட்ட பாரத்பே, வணிகர்களுக்கு பேடிஎம், போன்பே, கூகுள் பே, பீம் செயலி, மொபிகுவிக், ஃபிரிசார்ஜ் உள்ளிட்ட அனைத்து யுபிஐ செயலிகளுக்காக இடைமுகத்தை வழங்குகிறது. இன்சைட் பார்ட்னர்ஸ், செக்கோஷியா உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன.
"ஜிரோ- எம்டிஆர் கொள்கை மாற்றம், நிதுநுட்ப துறையில் பாரத்பேவை முன்னணி நிலைக்குக் கொண்டு வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் நிதிநுட்பத்துறை மறுப்புகள், நிதி கட்டுப்பாடுகள், பணியிழப்புகள் உள்ளிட்ட மாற்றங்களை சந்திக்க உள்ள நிலையில், முன்னணி நிலைக்கு வர இந்த காலத்தை பயன்படுத்திக்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது,” என நிறுவன சி.இ.ஓ குரோவர் கூறியுள்ளார்.
தொழில்நுட்பத் திறமைகளில் நிறுவனம் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். நிறுவன சேவை மேடை தற்போது பெங்களூரு, தில்லி, ஐதராபாத், ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு சேவை அளிக்கிறது.
2019ல் வர்த்தகம் 30 மடங்கு அதிகரித்திருப்பதாகவும், மாதம் 4 கோடி யுபிஐ பரிவர்த்தனைகளைக் கையாள்வதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் 15,000 கடன்களை வழங்கியிருப்பதாகவும், 2020 மார்ச் வாக்கில் ரூ.250 கோடி கடன் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்