Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

அலிபாபா மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து 150 மில்லியன் கோடி டாலர் நிதி உயர்த்தி யூனிகார்ன் ஆன ’பிக்பாஸ்கெட்’

ஆன்லைன் மளிகை தளமான bigbasket அலிபாபா, மிரே அசெட் மற்றும் சிடிசி க்ரூப் ஆகியவற்றிடமிருந்து நிதி உயர்த்தி 2019-ம் ஆண்டில் யூனிகார்ன் க்ளப்பில் இரண்டாவது ஸ்டார்ட் அப்பாக இணைகிறது.

அலிபாபா மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து 150 மில்லியன் கோடி டாலர் நிதி உயர்த்தி யூனிகார்ன் ஆன ’பிக்பாஸ்கெட்’

Tuesday April 02, 2019 , 2 min Read

ஆன்லைன் மளிகை தளமான பிக்பாஸ்கெட் அதன் மிகப்பெரிய பங்குதாரரான அலிபாபா, புதிய முதலீட்டாளர்களான தென்கொரியாவின் மிரே அசெட் மற்றும் யூகேவின் சிடிசி க்ரூப் ஆகியவற்றிடமிருந்து 150 மில்லியன் டாலர் நிதி உயர்த்துகிறது.

இதன் மூலம் ஆன்லைன் மளிகை பிரிவில் செயல்படும் இந்த ஸ்டார்ட் அப்பின் மதிப்பு உயர்த்தப்பட்டு யூனிகார்ன் க்ளப்பில் இந்த ஆண்டு இரண்டாவது ஸ்டார்ட் அப்பாக இணையும் தகுதியைப் பெறுகிறது.

பிக்பாஸ்கெட் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அலிபாபா நிறுவனத்திடமிருந்து 50 மில்லியன் டாலரும் மிரே அசெட் நிறுவனத்திடமிருந்து 59.9 மில்லியன் டாலரும் யூகே அரசாங்கத்திற்கு சொந்தமான சிடிசி க்ரூப் தரப்பிலிருந்து 40 மில்லியன் டாலரும் நிதி பெறுகிறது. பிக்பாஸ்கெட் குழு இந்த முதலீட்டுத் தொகையை பெற்றுக்கொள்வதாக நிறுவனங்களுக்கான பதிவாளருடன் இந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அலிபாபா நிறுவனத்திடமிருந்தும் மற்ற நிறுவனங்களிடமிருந்தும் பிக்பாஸ்கெட் 300 மில்லியன் டாலர் நிதி உயர்த்திய பிறகு அந்நிறுவனத்தின் மதிப்பு 950 மில்லியன் டாலரை எட்டியது. பிக்பாஸ்கெட்டின் சீரீஸ் எஃப் நிதிச்சுற்றின் ஒரு பகுதியான 150 மில்லியன் டாலருக்கான சமீபத்திய நிதிச்சுற்றானது இந்த ஸ்டார்ட் அப்பின் மதிப்பை ஒரு பில்லியன் டாலரை எட்டச்செய்து யூனிகார்ன் தகுதியைப் பெற்றுத்தருகிறது.  

இந்தப் புதிய நிதிச்சுற்றானது குர்கானைச் சேர்ந்த ஆன்லைன் மளிகை தளமான க்ரோஃபர்ஸ், அமேசான் பேண்ட்ரி, ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சூப்பர்மார்ட் போன்றவற்றுடன் பிக்பாஸ்கெட் சிறப்பாக போட்டியிட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய சந்தைகளில் விரிவடையவும் ஹைப்பர்லோக்கல் டெலிவரியில் கூடுதல் கவனம் செலுத்தவும் உதவும்.

ஹைப்பர்லோக்கல் டெலிவரி சந்தையில் தீவிரமாக செயல்படுவதற்கான முயற்சிகளை பிக்பாஸ்கெட் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிக்பாஸ்கெட் கடந்த ஆண்டு புனேவைச் சேர்ந்த ஹைப்பர்லோக்கல் டெலிவரி ஸ்டார்ட் அப்பான RainCan, பெங்களூருவைச் சேர்ந்த MorningCart ஆகிய நிறுவனங்களை வாங்கியது. பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் தினசரி ஹைப்பர்லோக்கல் டெலிவரிகளுக்காக BBDaily சேவையை அறிமுகப்படுத்தியது. அத்துடன் கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான அன்றாட தேவைகளுக்கு வெண்டிங் இயந்திரங்கள் வாயிலாக BBInstant சேவையளிக்கிறது.

ஒரு பங்கின் விலை 11.43 டாலர் மதிப்புடன் 100 ஈக்விட்டி பங்குகளும் ஒரு பங்கின் விலை 114.29 டாலர் மதிப்புடன் 1.31 மில்லியன் சீரிஸ் எஃப் கட்டாயமாக மாற்றக்கூடிய முன்னுரிமைப் பங்குகளும் வழங்கப்படவும் ஒதுக்கீடு செய்யப்படவும் பிக்பாஸ்கெட் குழு ஒப்புதல் அளித்திருப்பதாக RoC-யில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மிரே அசெட் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 59.9 மில்லியன் டாலர் முதலீட்டுத் தொகையில் 54.9 மில்லியன் டாலர் மிரே அசெட்-நெவர் ஏசியா க்ரோத் இன்வெஸ்ட்மெண்ட் மூலமாகவும் 5 மில்லியன் டாலர் மிரே அசெட் ஜிஎஸ் ரீடெயில் நியூ க்ரோத் ஃபண்ட் 1 மூலமாகவும் பெறப்படும்.

அலிபாபாவின் சமீபத்திய முதலீட்டுடன் பிக்பாஸ்கெட்டில் அலிபாபாவின் பங்குகள் 26.26 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் மிரே அசெட் பங்குகள் 5.31 சதவீதமாகவும் சிடிசி க்ரூப் பங்குகள் 3.54 சதவீதமாகவும் இருக்கும் என்றும் அறிக்கைகள் குறிப்பிடப்படுகிறது.

2018-ம் ஆண்டில் பிக்பாஸ்கெட்டின் மொத்தவிற்பனை பிரிவான சூப்பர்மார்கெட் க்ராசரி சப்ளைஸ் பிரைவேட் லிமிடெட் வருவாய் 35 சதவீதம் அதிகரித்து 1,606 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல் நஷ்டம் 53 சதவீதம் குறைந்து 310 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவான இன்னோவேடிவ் ரீடெயில் நிறுவனத்தின் வருவாயும் 29 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 1,410 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டில் 191 கோடி ரூபாயாக இருந்த நஷ்டத்தின் அளவு 179 கோடி ரூபாயாக குறைந்தது.

இந்த மாத துவக்கத்தில் குர்கானைச் சேர்ந்த லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட் அப்பான Delhivery நிறுவனம் SoftBank மற்றும் அதன் தற்போதைய முதலீட்டாளர்களான Carlyle Group, Fosun International மூலம் 395 மில்லியன் டாலர் சீரிஸ் எஃப் நிதிச்சுற்று உயர்த்திய பிறகு 1.6 பில்லியன் டாலர் மதிப்புடன் 2019-ம் ஆண்டின் முதல் யூனிகார்ன் ஆனது.

ஆங்கில கட்டுரையாளர் : டென்சின் பெமா | தமிழில் : ஸ்ரீவித்யா