Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தன் இறப்புக்குப் பின் உலகக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தன் சொத்தில் பங்கு: கோடீஸ்வரர் Warren Buffet

உலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட், தனது இறப்பிற்கு பிறகு உள்ள 96 பில்லியன் டாலர் சொத்துக்களை உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பங்கு சேரும்படி ஏற்பாடு செய்ய உள்ளார்.

தன் இறப்புக்குப் பின் உலகக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தன் சொத்தில் பங்கு: கோடீஸ்வரர் Warren Buffet

Tuesday July 05, 2022 , 2 min Read

உலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட், தனது இறப்பிற்கு பிறகு, தனது சொத்தில் இருந்து 96 பில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பங்கு சேரும்படி ஏற்பாடு செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் பலர் பணம் சம்பாதிப்பதை முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு செயல்பாடுவார்கள். அதில், சிலர் மட்டுமே பணத்தோடு சேர்த்து புகழ், நன்மதிப்பு, சக மனிதர்களின் மரியாதை ஆகியவற்றையும் சம்பாதிப்பார்கள். அப்படிப்பட்ட நபர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட்.

Waran

ஏற்கனவே தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை நன்கொடை மற்றும் தானத்திற்காக செலவிட்டு வரும் வாரன் பஃபெட், தான் மரணம் அடைந்த பிறகு 96 பில்லியன் டா சொத்துக்களை என்ன செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அனைவரது பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

அமெரிக்கரான வாரன் பஃபெட், Berkshire Hathaway நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார். பங்குச்சந்தையில் புலியான இவர், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததன் மூலமாக கோடிகளை குவித்து வருகிறார். கடந்த ஜூன் மாத நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு 113 பில்லியன் டாலர் ஆகும். உலக செல்வந்தர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்தவர்.

91 வயதான பஃபெட், 2006 ஆம் ஆண்டில், Berkshire Hathaway நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளில் 85 சதவீதத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக உறுதியளித்தார். சமீபத்தில் கூட பஃபெட்டின் குழந்தைகளான ஹோவர்ட், சூசன் மற்றும் பீட்டர் நடத்தும் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கும் சுமார் 7 லட்சத்து 70,000 பங்குகளை வழங்கியுள்ளார்.

பதினொரு மில்லியன் பங்குகள் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கும், 1.1 மில்லியன் பங்குகள் பஃபெட்டின் மறைந்த முதல் மனைவிக்காக பெயரிடப்பட்ட சூசன் தாம்சன் பஃபெட் அறக்கட்டளைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

2010ல், அவர் தனது சொத்தில் 99 சதவீதத்தை ஏழைகளுக்கு தானமாக அளிக்கப்படும் என்று வாரன் பஃபெட் அறிவித்தார்.

எனவே, பஃபெட்டின் $90 பில்லியன் பெர்க்ஷயர் பங்குகளில், $56 பில்லியன் கேட்ஸ் அறக்கட்டளைக்கும், $17.4 பில்லியன் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தொண்டு நிறுவனங்களுக்குச் செல்லும்.

ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதியுடன் வாரன் பஃபெட்டிற்கு 92 வயது நிறைவடைய உள்ள நிலையில், அவர் தான் இறக்கும் நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் அனைத்து தான, தர்ம நடவடிக்கைகளையும் முடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் கேட்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் சிலர் கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கபட உள்ள அதிகபட்சமாக பணத்தை எங்கு தானம் செய்வது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் யோசித்த பல்வேறு விஷயங்களில் ஒன்று மட்டும் கவனம் ஈர்த்துள்ளது.

உலக குழந்தைகளுக்கான சேமிப்பு வங்கியை உருவாக்கி, அதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரக்கணக்கான டாலர்களைப் பெறுமாறு செய்யலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது, என தகவல்கள் வெளியாகியுள்ளது.