தொண்டு நிறுவனங்களுக்கு 4 பில்லியன் டாலர்களை அள்ளிக்கொடுத்த வாரன் பஃபெட்!
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், பங்குச்சந்தையின் தந்தை என அழைக்கப்படுவருமான வார்ன் பஃபெட் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் நான்கு தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், பங்குச்சந்தையின் தந்தை என அழைக்கப்படுவருமான வார்ன் பஃபெட், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் நான்கு தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
1965ம் ஆண்டு முதல் வாரன் பஃபெட் தலைமை வகிக்கும் பெர்க்ஷயர் ஹாத்வே இன்க் நிறுவனத்தின் பி பங்குகளில் சுமார் 14.4 மில்லியனைக் கொண்டுள்ளது. இதன் இறுதி விலை 277.64 ஆகும்.
பதினொரு மில்லியன் பங்குகள் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கும், 1.1 மில்லியன் பங்குகள் பஃபெட்டின் மறைந்த முதல் மனைவிக்காக பெயரிடப்பட்ட சூசன் தாம்சன் பஃபெட் அறக்கட்டளைக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 7 லட்சத்து 70,000 பங்குகள் பஃபெட்டின் குழந்தைகளான ஹோவர்ட், சூசன் மற்றும் பீட்டர் நடத்தும் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கும் செல்லும். ஹோவர்ட் ஜி. பஃபெட் அறக்கட்டளை, ஷெர்வுட் அறக்கட்டளை மற்றும் நோவோ அறக்கட்டளை ஆகியவற்றிற்கு வழங்கப்படும்.
2006 ஆம் ஆண்டு முதல், 91 வயதான பஃபெட் தனது பெர்க்ஷயர் பங்குகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றை நன்கொடையாக அளித்துள்ளார். நன்கொடைகள் இருந்தபோதிலும், பெர்க்ஷயரின் தோராயமாக 16% பங்குகளை பஃபெட் வைத்திருக்கிறார், மேலும், முக்கிய முடிவுகளை கட்டுப்படுத்தும் விஷயத்திலும் மூன்றில் ஒரு பங்கு அதிகாரத்தை தன் வசம் வைத்துள்ளார்.
பெர்க்ஷயர் நிறுவனம் தனது சொந்த பங்குகளில் 2 சதவீதத்தை மீண்டும் வாங்கியதால் அதன் பங்குகள் சமீபத்திய ஆண்டுகளாக மிகவும் நிலையானதாக இருந்து வருகிறது.
பஃபெட்; ஒமாஹா, நெப்ராஸ்காவை தளமாகக் கொண்ட பெர்க்ஷயரை $600 பில்லியனுக்கும் அதிகமான கூட்டு நிறுவனமாக உருவாக்கியுள்ளார், BNSF ரயில் பாதை மற்றும் Geico வாகன காப்பீடு போன்ற டஜன் கணக்கான வணிகங்களை அந்நிறுவனம் மேற்கொள்கிறது. மேலும், Apple Inc (AAPL.O) மற்றும் Bank of America Corp (BAC) போன்ற நிறுவனங்களின் பங்குகளையும் தன் வசம் வைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக பில் கேட்ஸ், மைக்கேல் ப்ளூம்பெர்க், லாரி எலிசன், கார்ல் இகான், எலோன் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற 200க்கும் மேற்பட்டோர் தங்கள் பங்குகளில் இருந்து பாதியை தானமாகக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் - ராய்ட்டர்ஸ் | தமிழில் - கனிமொழி