கேஸ் விலை ஏறிக்கொண்டே போகிறதா: தள்ளுபடி விலையில் கேஸ் புக் செய்யும் வழிகள் இதோ!
இந்தியாவில் தள்ளுபடியுடன் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
தொழில்நுட்ப பயன்பாடு பல கட்டம் முன்னேறி வருகிறது. வீடு மற்றும் அலுவலகத்துக்கு உபயோகிக்கப்படும் கரண்ட் பில் முதல் மொபைல் ரீசார்ஜ் வரை ஆன்லைன் மூலமாகவே செய்யலாம். இதில் சிலிண்டர் புக்கிங் மட்டும் விதிவிலக்கு இல்லை.
மேலும், ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் மாதாந்திர கட்டண செலுத்தல் சேவைகளுக்கு சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்குகிறது.
இந்தியாவில் உள்நாட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை இந்திய அரசு மீண்டும் உயர்த்தி அறிவித்தது. மே 7, 2022 நிலவரப்படி வீட்டு உபயோக சிலிண்டர் வாங்குவதற்கு ரூ.999.50 செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் ஆன்லைன் தளங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் முன்பதிவிற்கு போட்டிப்போட்டு சலுகைகளை வழங்குகிறது.
பல்வேறு காரணங்களால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தி அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வீட்டின் பிரதான தேவையாக இருப்பது கேஸ் சிலிண்டர். கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
சிலிண்டர் ஏஜென்சிகளிடம் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு விடுத்து, கேஸ் சிலிண்டர் புக்கிங்கை அதில் தெரிவிக்கும் எண்ணை கிளிக் செய்வதன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். அதேபோல், பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலமாகவும் சிலிண்டர்களை புக் செய்துக் கொள்ளலாம். ஆன்லைன் தளங்கள் சிலிண்டர் புக்கிங்கிற்கு தள்ளுபடிகளையும் வழங்குகிறது.
பேடிஎம் தளத்தில் வழங்கப்படும் சலுகைகள்
நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்கும்பட்சத்தில் பேடிஎம் தளத்தின் மூலம் எல்பிஜி சிலிண்டர் புக் செய்யும் போது 100% வரை தள்ளுபடியை பெறலாம். அதேபோல் நீங்கள் பேடிஎம் மூலமாக பாரத் கேஸ், எச்பி கேஸ், இண்டேன் கேஸ்-களை புக்கிங் செய்யும் போது ரூ.50 முதல் ரூ.100 வரை கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த சலுகையானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்படித்தக்கது. முதல் தவணை புக் செய்யும் பெரும்பாலான பயனர்களுக்கு கட்டாய சலுகைகள் வழங்கப்படுகிறது.
எல்பிஜி சிலிண்டருக்கு போன்பே தளத்தில் வழங்கப்படும் சலுகைகள்
எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த தளத்திலும் பாரத் கேஸ், எச்பி கேஸ் மற்றும் இண்டேன் ஆகிய எல்ஜிபி கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்து கேஷ்பேக் மற்றும் தள்ளுபடியை பெறலாம்.
போன்பே தளத்தில் சிலிண்டர் புக் செய்யும் போது ரூ.200 வரை கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் வட்டியில்லா தவணை முறையிலும் கிரெடிட் கார்ட் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். முதல் முறை சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகிறது.
கூகுள் பே சிலிண்டர் புக்கிங் சலுகைகள்
கூகுள் பே என்பது பாரத் கேஸ், எச்பி கேஸ் மற்றும் இண்டேன் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். கூகுள் பே மூலம் புக் செய்யும் பயனர்களுக்கு கேஷ்பேக் மற்றும் கூப்பன்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் கட்டாயம் ஸ்க்ராட்ச் கார்டுகள் சலுகையும் வழங்கப்படுகிறது. ஸ்க்ராட்ச் கார்ட் ஓபன் செய்யும் போது பல்வேறு சலுகைகளும் கேஷ்பேக்களும் வழங்கப்படுகிறது.