அடிப்படை சீர்திருத்தங்களை வேகமாக்கிய 'தற்சார்பு இந்தியா திட்டம்' - நிதி அமைச்சர்!
2025ம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர, இந்திய உற்பத்தி துறை தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி காண வேண்டும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று மத்தியில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.27.1 லட்சம் கோடி நிதியுதவி அடிப்படை சீர்திருத்தங்களை விரைவாக்கி இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
முதல் காகிதம் இல்லா பட்ஜெட்டை சமர்பித்த நிதி அமைச்சர், ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டில், ஆத்மநிர்பர் ஸ்வஸ்தா பாரத் யோஜா திட்டத்தையும் அவர் அறிவித்தார். இந்தியாவில் உருவாக்கப்பட்ட டேப்லெட்டில் இருந்து இதை வெளியிட்டார்.
தேசிய சுகாதார திட்டத்துடன் இது கூடுதலாக அமையும் என்று தெரிவித்தார். இந்தியா இரண்டு கொரோனா தடுப்பூசியை கொண்டிருப்பதாகவும், மேலும் இரண்டு உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள ஏழைகளில் ஏழைகளுக்கு உதவுவதற்காக அரசு தனது நிதி ஆதாரத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும்,
2025ம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர, இந்திய உற்பத்தித் துறை தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி காண வேண்டும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார். உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் கீழ், ரூ.1.97 லட்சம் கோடி ஆதரவையும் அவர் அறிவித்தார்.
2020ம் ஆண்டு இந்திய மத்திய மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு சோதனையான ஆண்டாக அமைந்தது. கொரோனா தொற்று காரணமாக, சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விநியோகச் சங்கிலியும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அரசு இத்துறைக்கான நிவாரண திட்டத்தை அறிவிக்கும் சூழல் உருவானது.
தற்சார்பு இந்தியா ஊக்கத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு மே மாதம் நிதி அமைச்சர் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்தார். உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்தியா தற்சார்பு அடையும் நோக்கத்துடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்ட 15 திட்டங்களில் ஆறு நடுத்தர, குறும் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கானவை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மூன்றாவது பட்ஜெட்டாக இது அமைகிறது.
தகவல் உதவி: பிடிஐ