ரோபோ உதவி சாதனங்களை உருவாக்கி வழிகாட்டும் தமிழ்நாட்டின் 21 வயது இளைஞர்!
சென்னையைச் சேர்ந்த சிவசந்தோஷ், தொடங்கியுள்ள ஸ்டார்ட் அப் Subtlebotic, ரோபோ நுட்பத்தை பயப்படுத்தி மருத்துவ நலன், எரிசக்தி, ஏரோஸ்பேஸ் ஆகிய துறைகளில் பயன்படுத்த விரும்புகிறது.
சர்வதேச அளவில் லட்சக்கணக்கானோர் பக்கவாதம், செரிப்ரல் பேலஸி, வயோதிகம், விபத்து உள்ளிட்ட காரணங்களினால் அசைவு செயல்பாட்டை இழக்கின்றனர். இது அவர்களின் தினசரி செயல்பாட்டை பாதிக்கிறது.
இந்த சிக்கலுக்கு தீர்வு காண, 21 வயதான சிவசந்தோஷ், இந்த ஆண்டு துவக்கத்தில் 'சட்டில்போடிக்' (Subtlebotic) எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கியுள்ளார். இந்த ஸ்டார்ட் அப்'பின் முன்னணி சேவையான 'லிம்ப் அசிஸ்ட்' (Limb Assist) குறைந்த எடை கொண்ட, வெளியே அணியக்கூடிய மோட்டார் அமைப்பாக விளங்குகிறது. உடலின் இயக்க செயல்பாடு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தினசரி நடவடிக்கைகளை சொந்தமாக மேற்கொள்ள இது உதவுகிறது.
மருத்தவ நலன், எரிசக்தி, ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட துறைகளில் ரோபோவியல் நுப்டம் கொண்டு சவால்களுக்கு தீர்வு காண்பதை இந்த ஸ்டார்ட் அப் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இயக்க செயல்பாடு பாதிப்பு கொண்டவர்கள் சொந்தமாக இயங்கும் தன்மை பெற உதவும் வகையில் ரோபோ மோட்டார் சார்ந்த அணியக்கூடிய நியூரோ சாதனமான லிம்ப் அசிஸ்ட் முன்னோடி தீர்வை உருவாக்கியுள்ளோம்,” என்கிறார் சிவசந்தோஷ்.
Subtlebotic நிறுவனம் சிவசந்தோஷின் சொந்த ஊரான புதுக்கோட்டை கீரமங்கலத்தில் அமைந்துள்ளது. உள்ளூர் அளவில் புதுமையாக்கத்தை ஊக்குவிக்க மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க சிறிய ஊரிய ஸ்டார்ட் அப்பை துவக்கியதாகக் கூறுகிறார்.
"புதுமையாக்கத்திற்காக நீங்கள் பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என உணர்த்த விரும்பினேன். எனது சொந்த ஊரை மேம்படுத்த மற்றும் வெளியூர்களுக்கு வேலைவாய்ப்பு தேடிச்செல்லும் இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வழங்கும் இலக்குடம் இந்த நிறுவனத்தை நடத்துகிறேன்,” என்கிறார் சிவசந்தோஷ்.
இளம் வயதில் இருந்தே சிவசந்தோசுக்கு விஞ்ஞான ஆர்வம் மற்றும் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்தது. பள்ளி அறிவியல் திட்டங்கள் மூலம் இந்த ஆர்வம் உருவானது. அறிவியல் போட்டிகள் ஊக்கமாக அமைந்து உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வேட்கையை உண்டாக்கியது.
“கோவிட் காலத்தில் உள்ளூர் மருத்துவமனைக்காக தானியங்கி கிரிமிநாசினி தெளிப்பான் சாதனம் உருவாக்க உதவினேன். மேலும், செயற்கைகோள் தொழில்நுட்பம் மற்றும் திட பொருள் ராக்கெட்கள் தொடர்பான திட்டங்களிலும் ஈடுபட்டேன்,“ என்கிறார்.
இந்த அனுபவம் தொழில்முறை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. மேலும், 18 வயதில் ஐஐடி மெட்ராசில் கம்பஷன் ரிசர்ச் மையத்தில் கிடைத்த வாய்ப்பு இதற்கு வலு சேர்த்தது.
மெகட்ரானிக்ஸ் பொறியியல் டிப்ளமோ படித்தவர் இப்போது, அண்ணா பல்கலை கேசிஜி தொழில்நுட்ப கல்லூரியில் ஏரோஸ்பேஸ் பொறியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். ஸ்டார்ட் அப்பில் கவனம் செலுத்த கல்லூரி அவருக்கு அனுமதி அளித்துள்ளது.
ரோபோவியல் பயன்பாடு
பக்கவாதம், முதுகுதண்டு விபத்து, செரிப்ரல் பால்சி, பார்கின்சன் நோய் உள்ளிட்டவற்றால் உடல் இயக்க சிக்கல் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் லிம்ப் அசிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. பொருட்களை பிடிப்பது அல்லது எடுப்பது போன்ற செயலசைவுகளுக்கு விரல்களுக்கு உதவி செய்கிறது.
லிம்ப் அசிஸ்ட் மூலம், பயனாளிகள் கோப்பைகள், தட்டுகள், பைகள் போன்றவற்றை கையாளலாம். டைப் செய்வது, எழுதுவது, பட்டன் போடுவது போன்ற செயல்களிலும் கைகொடுக்கும்.
கைவிரல்கள் அசைவு மீது பகுதியளவு கட்டுப்பாடு கொண்டவர்களுக்கு, மூளையில் இருந்து வரும் சமிஞ்சைகளை மேம்படுத்துவதன் மூலம் இந்த சாதனம் உதவுகிறது. கைவிரல்களை முழுவதுமாக இயக்க முடியாதவர்களுக்கு, இந்த சாதனம் மூளை சமிஞ்சைகள் அல்லது மாற்று வழிகளை உணர்ந்து, ரோபோ உதவியோடு அசைவுகளை மேற்கொள்ள வைக்கிறது.
“எங்கள் சென்சார் தொழில்நுட்பம் இ.இ.ஜி - EEG (electroencephalography), இ.ஓஜி. - EOG (electrooculography), மற்றும் பிசிஐ- BCI (brain-computer interface) ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது,“ என்கிறார்.
இ.இ.ஜி மூளையின் மின் செயல்பாடுகளை கணக்கிட்டு, அதை காட்சியாக பதிவு செய்கிறது. இதனிடையே, இ.ஓ.ஜி கண்களில் விழித்திரை மற்றும் கருவிழி இடையிலான மின் செயல்பாடுகளை கணக்கிடுகிறது. பிசிஐ மூளையின் சமிஞ்சைகளை வெளிப்புற சாதனம் கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் அமைகிறது.
அசைவு குறைபாடுகள் கொண்டவர்கள் மற்றும் வயதானவர்கள் இதை பயன்படுத்தலாம்.
“இந்த இரட்டைத் திறன் (மேற்புற மற்றும் கீழ்புற இயக்கம்) தினசரி செயல்களை சீராக்கி, வாழ்க்கைத்தரத்தை உணர்த்துகிறது. எதிர்காலத்தில் மனிதர்களில் எல்லாவித மோட்டார் செயல்களுக்கும் எங்கள் தொழில்நுடப்த்தை பயன்படுத்துவோம்,” என்கிறார் அவர் நம்பிக்கைகோடு.
இந்த ஸ்டார்ட் அப், காற்றாலை டர்பைன்கள், சுற்றுச்சூழல் நட்பான பேட்டரிகள், நானோ ரோபோக்கள், ரோபோ கைகள் உள்ளிட்டவற்றையும் உருவாக்கி வருகிறது. இவை ஆய்வு நிலையில் உள்ளன.
எதிர்காலத் திட்டம்
லிம்ப் அசிஸ்ட் தற்போது முன்னோட்ட வடிவில் உள்ளது. இன்னமும் அதிகார்ப்பூர்வமாக அறிமுகம் ஆகவில்லை. ஆறு முதல் 12 மாதங்களில் வர்த்தக நோக்கில் அறிமுகம் செய்ய உள்ளது. விலை ரூ.35,000 முதல் ரூ. 45,000 ஆக இருக்கலாம்.
“முழு அளவில் அறிமுகம் செய்வதற்கு முன் வாடிக்கையாளர் கருத்துக்களை அறிந்து வருகிறோம். தற்போது முன்னோட்ட வடிவம் மற்றும் சோதனையில் கவனம் செலுத்துகிறோம்,” என்கிறார் சிவசந்தோஷ்.
நிறுவனம், லிம்ப் அசிஸ்ட் சாதனத்தை, மருத்தவ நலன் சேவையாளர்கள், மறுவாழ்வு மையங்கள், உடல் நல சிகிச்சை மையங்களுக்கு விற்பனை செய்ய உள்ளது. அரசுடன் இணைந்து, அரசு மருத்துவத் திட்டங்கள் வாயிலாக வழங்கவும் முயற்சி செய்து வருகிறது. மருத்துவமனைகள் மற்றும், கிளினிக்குகளுக்கு இந்த சாதனம், குத்தகை முறையில் அளிக்கப்படலாம்.
இந்த ஸ்டார்ட் அப் இதுவரை, மானியம், போட்டி பரிசு, விருதுகள் மூலம் ரூ.14 லட்சம் திரட்டியுள்ளது. செயல்பாடுகளை விரிவாக்கி, சேவையை சந்தைக்கு கொண்டு வர விதை சுற்றுக்கு முந்தைய நிதியையும் எதிர்நோக்கியுள்ளது. எதிர்காலத்தில் லிம்ப் அசிஸ்ட் சேவையை, கைகள், கால்கள், தோள்பட்டை. கழுத்து உள்ளிட்ட உடல் பாகங்களுக்கும் அளிக்க திட்டமிட்டுள்ளது.
“பிசி.இ நுட்பம் மூலம் முழு உடலுக்குமான இயக்க உதவி சேவையை அறிமுகம் செய்வது தான் எங்கள் நோக்கம்,“ என்கிறார் நிறுவனர்.
இந்த பிரிவில் நிறுவனம், எக்சோ பயோனிக்ஸ், ரிவாக் ரோபோடிக்ஸ், பெனும்பரா ஐஎன்சி உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது.
“எங்கள் நிறுவனம் நரம்பியல் சார்ந்த ரோபோ நுட்பத்தை, மாற்றியமையக்க கூடிய இயக்க முறையுடன் இணைப்பது பல்வேறு தேவைகளுக்கான பல வகை சாதனங்களை உருவாக்க வழி செய்கிறது. இந்த அமைப்பு உள்ளார்ந்த கட்டுப்பாடு சார்ந்திருப்பதால், பயனாளிகள் இதை எளிதாகவும், இயல்பாகவும் பயன்படுத்த முடியும் என நிறுவன தனித்தன்மை பற்றி சிவசந்தோஷ்,“ கூறுகிறார்.
“எங்கள் தொழில்நுட்பம் பயனாளிகள் நரம்பியல் குறிப்புகளுடன் இயல்பாக ஒருங்கிணைந்து, தனித்தன்மையான, எதிர்வினை அனுபவத்தை அளிக்கிறது. தற்போதுள்ள வழக்கமான நுட்பங்கள் அல்லது வெளிப்புற சாதனங்களில் இது இல்லை,” என்கிறார்.
இதனிடையே, இந்த ஸ்டார்ட் அப், சோலார் செல்கள் இணைக்கப்பட்ட பல அச்சு காற்றாலைகள் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது. இது செயல்திறன் மற்றும் நீடித்த தன்மையை அளிக்கும். அனைத்து திசைகளில் இருந்தும் குறைந்த வேக காற்றை பெறுவதற்கான திறனையும் வழங்கும்.
“இந்த ஹைபிரிட் தீர்வு, நீடித்த மின் உற்பத்திக்கு காற்றாலை மற்றும் சூரிய மின் ஆற்றலை பயன்படுத்திக்கொள்கிறது. அவசர காலங்களில், உச்சகட்ட பயன்பாட்டின் போது இல்லங்கள், அலுவலகங்களுக்கு இது வலுவான பேக்கப்பை அளிக்கும்,“ என்கிறார்.
(Subtlebotic நிறுவனம், யுவர்ஸ்டோரியின் டெக் 30 பட்டியலில் தேர்வு செய்யப்பட்டது)
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி, தமிழில்: சைபர் சிம்மன்
மனித கழிவுகளை அள்ளும் ரோபோ தயாரிப்பு: Genrobotics-ல் ரூ.20 கோடி முதலீடு செய்த Zoho!
Edited by Induja Raghunathan