கிரிப்டோ வருவாயில் ‘30% வரி’ - ரியாக்ஷனை ‘மீம்’களாக தெறிக்கவிட்ட நெட்டிசன்ஸ்!
இந்தியா பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோ வர்த்தகத்திற்கு விர்ச்சுவல் வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதை வைத்து, டிவிட்டரில், ‘30% வரி’ என மீம்ஸ்கள் டிரெண்டிங் ஆகி வருகின்றன.
உலகம் முழுக்க சுமார் 3500க்கும் அதிகமான கிரிப்டோகரன்சிகள் உள்ளன. இதில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் டாலரை விட அதிக மதிப்பு கொண்டதாக உள்ளது. இந்தியாவிலும் பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு க்ரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிரிப்டோ கரன்சி வருவாய் எவ்வளவு வந்தாலும் அதற்கு வரி இல்லை என்ற நிலையே இவ்வளவு நாள் இருந்தது. இதனால், பணம் பதுக்கும் நபர்களுக்கு இந்த வர்த்தகம் தங்களது கருப்பு பணத்தை பதுக்க ஏதுவாக இருந்தது.
இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ வர்த்தகத்திற்கு விர்ச்சுவல் வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக அறிவித்தார்.
பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கிரிப்டோ வர்த்தக வருவாய்க்கு இனி 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வரி விதிப்பு விவகாரத்தை வைத்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தலையில் முக்காடு:
இதுவரை சந்தோசமாக கிரிப்டோ வர்த்தகத்தில் லாபம் பார்த்து வந்தவர்கள், இனி வரி கட்ட வேண்டும் என்ற அறிவிப்பைக் கேட்டு இப்படித்தான் கவலையில் அமர்ந்துள்ளனர் என்கிறது இந்த மீம்ஸ்.
அது ஓகே.. ஆனா இது..?
இந்தியாவில் ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் என்ற அறிவிப்பைக் கேட்டு குஷியான கிரிப்டோ வர்த்தகம் செய்வர்கள், ஆனால் அந்த வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்திற்கு 30% வரி செலுத்த வேண்டும் என்பதைக் கேட்டு இப்படி ரியாக்சன் தருகிறார்களாம்.
புரிஞ்சவன் பிஸ்தா!
இந்த மீம்ஸுக்கு என தனியாக விளக்கம் தேவையில்லை. கிரிப்டோ வர்த்தகத்தில் வரும் லாபத்திற்கு 30% அரசுக்கு வரியாக செல்லும் என்பதை படம் போட்டு விளக்கி விட்டார்கள்.
கிடைச்சதே ரூ.100 தான்.. இதுல 30%மா?
‘கிரிப்டோ வர்த்தகத்தில் அதிக லாபம் பார்ப்பவர்களுக்கு இந்த 30% ஓகே.. நமக்கு வரதே ரூ.100, ரூ.200 தான்; இதில் 30% வரி வேறா?’ என நொந்து போய் இப்படி ஒரு மீம்ஸைப் பகிர்ந்து உள்ளார் இவர்.
மயக்கம் மயக்கமா வருதே!
அரசின் 30% வரி விதிப்பைக் கேட்டு, கிரிப்டோ ஹோல்டர்களுக்கு மயக்கமே வந்து விட்டதாம்!
தலையே சுத்திருச்சு!
டிவியில் பட்ஜெட் தாக்கலைப் பார்த்துக் கொண்டிருந்த, கிரிப்டோ டிரேடர்ஸ், வரி விதிப்பு செய்தியைக் கேட்டு தலையே சுத்தி இப்படி கீழே விழுந்து விட்டார்களாம்.
கூகுள்.. கூகுள்!
முறைப்படி வரி கட்டாவிட்டால், இந்தியாவில் அதற்கு சட்டப்படி என்ன தண்டனை என இப்போதே கூகுளில் தேட ஆரம்பித்து விட்டார் இந்த கிரிப்டோ டிரேடர். அப்படியே சைடு கேப்பில், ‘லாபத்தில் வரி கேட்கிறீர்களே.. ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால் அரசு எதுவும் திருப்பி பண உதவி தருமா?’ என்றும் சந்தேகம் கேட்டிருக்கிறார் விவ(கா)ரமாக.
அப்போ அப்டி.. இப்போ இப்டி!
இதுவரை கிரிப்டோ வர்த்தகத்தில் அதிக லாபம் பார்த்து, வாழ்க்கையை வளமாக வைத்திருந்தவர்கள், இனி 30% வரி கட்டினால் இப்படி காட்சியே மாறி விடும் என பீல் பண்ணி இருக்கிறார்கள்.
இப்டித்தான் இருக்கும்!
கிரிப்டோ வர்த்தகத்தில் வருமானம் இப்படி இருந்தால், வரி இப்படித்தான் கட்ட வேண்டும் என மறைமுகமாகக் கலாய்த்துள்ளனர்.
இதுதான் இனி கிரிப்டோ முதலீட்டாளர்கள் நிலைமை...
வரி என எதுவும் செலுத்தாமல், இதுவரை முழுமையாக லாபத்தை அனுபவித்தவர்கள், அரசின் அறிவிப்பைக் கேட்டு இப்படிக் கதறிக் கொண்டிருக்கிறார்களாம்.