Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

#Budget 2022: இந்திய ஜிடிபி 9.2% உயரும்: ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கொரோனா பெருந்தொற்று சூழ்நிலைக்கு நடுவே 2022 - 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

#Budget 2022: இந்திய ஜிடிபி 9.2% உயரும்: ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Tuesday February 01, 2022 , 3 min Read

கொரோனா பெருந்தொற்று சூழ்நிலைக்கு நடுவே 2022 - 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வர உள்ள நிதியாண்டிற்கு அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும், அதை வைத்து மாநிலங்கள் தோறும் மத்திய அரசு என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்த போகிறது, அதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் தோராயமான கணக்கே பட்ஜெட் ஆகும்.


2022 - 2023ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், தொழில் மற்றும் வர்த்தக சூழலை மேம்படுத்த வேண்டிய கட்டாயம், ஐந்து மாநிலத் தேர்தல் எனப் பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் இன்று தாக்கல் செய்த 2022-23 மத்திய பட்ஜெட் மீது பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Nirmala

இன்று காலை சரியாக 10 மணி அளவில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் கூடியது. பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனர்.

இன்று காலை 10.45 மணி அளவில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.


கடந்த ஆண்டை போலவே இரண்டாவது முறையாக ’காகிதமில்லா பட்ஜெட்’ தாக்கல் செய்யப்படுகிறது. நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பட்ஜெட் பற்றி அறிந்து கொள்ள ‘யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்’ என்ற செல்போன் செயலி கடந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியில் பட்ஜெட் உரை, நிதி நிலை அறிக்கை, நிதி மசோதா, மானிய கோரிக்கைகள் உட்பட 14 வகையான ஆவணங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Nirmala

இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பட்ஜெட் ஆவணங்களை வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘இந்திய பட்ஜெட்’ என்ற இணையதளம் வாயிலாக பட்ஜெட் குறித்த ஆவணங்களை டவுன்லோடு செய்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 90 நிமிடங்கள் இந்த பட்ஜெட் உரை இருந்தது.


இன்று ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை ஏற்றம் அடைந்துள்ளது. சென்செக்ஸ் 736 புள்ளிகள் உயர்ந்து, 58,750.17 ஆக வர்த்தகமாகிறது. நிஃப்டி 197.70 புள்ளிகள் உயர்ந்து 17,537.55 ஆக வர்த்தகமாகிறது.

நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் முக்கிய அம்சங்கள்:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தன்னுடைய பட்ஜெட் உரையை தொடங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதிலிருந்து இந்தியா மீண்டு வருவதாக தெரிவித்தார்.


கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி திட்டம் சிறப்பாக செயல்பட்டதாகவும், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தவும் மக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதே காரணம் என்றும் தெரிவித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில், நடப்பு நிதி ஆண்டில் அனைத்து நாடுகளை விடவும் இந்திய ஜிடிபி 9.2 சதவிகிதம் வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், 2022-23 ஆண்டுல் 8.0 - 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
Nirmala

அடுத்த 25 ஆண்டுகளுக்கான ‘அம்ரித் கல்’ பொருளாதாரத்தின் அடித்தளத்தை அமைக்கவும், கட்டமைப்பை உருவாக்கவும் இந்தியா முயன்று வருகிறது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இருந்து 100-வது ஆண்டை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது எனத் தெரிவித்தார்.


2021-22 பட்ஜெட்டில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவினங்களில் கூர்மையான அதிகரிப்பு இருந்தது என தெரிவித்த நிர்மலா சீதாராமன், 2022 - 2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படுகையில் இந்த அரசின் உறுதியான கொள்கையாக இளைஞர்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், மகளிர் மற்றும் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

பிரதமரின் விரைவு சக்தித் திட்டம் ஏராளமான வேலைவாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு உருவாக்கும் என உறுதியளித்தார்.