ஆகாஷ் கல்விச் சேவை நிறுவனத்தை 1 பில்லியன் டாலருக்கு வாங்கும் Byju's நிறுவனம்!
பைஜுஸ் என்பது ஒரு இந்தியக் கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் பயிற்சி நிறுவனமாகும், ரவீந்திரன் என்பவரால் 2011 இல் நிறுவப்பட்டது.. Byju's என்பது இந்தியாவின் மிக முக்கியமான, மிகப்பெரிய கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப்.
Fall in love with learning (கற்றலைக் காதலிப்போம்) என்பதுதான் அவர்கள் டேக்லைன்.
இந்நிலையில் இந்நிறுவனம் ‘ஆகாஷ் கல்விச் சேவை’ நிறுவனத்தை (Aakash Educational Services) (AES) 1 பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளது. பைஜூஸ் மற்றும் ஆகாஷ் இந்த ஒப்பந்தத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஆன்லைன் கற்றலில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஆகாஷ் கல்விச் சேவை நிறுவனம் சுமார் 200 இடங்களில் உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைக்கும் ஒப்பந்தமானது முக்கியமான ஒரு ஒப்பந்தமாக இருக்கும். ஏனெனில் இது இடைநிலைக் கல்வியில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ‘பைஜிட்டல்’ அணுகுமுறையை மையமாகக் கொண்டு, நுழைவுத் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்ப்படுத்துகிறது.
பிளாக்ஸ்டோன் குழுமம், PE நிதியம், ஆகாஷ் கல்விச் சேவைகளுக்கு ஆதரவளித்துள்ளது. மேலும் இது ஒப்பந்தம் செய்யப்பட்டால், தகவல்களின்படி, ஆகாஷ் குடும்பத்திற்கு 300 மில்லியன் டாலர் பணம் செலுத்தப்படலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனமான Byju’s, மும்பையைச் சேர்ந்த ‘ஒயிட்ஹேர் ஜேஆர்’ (WhiteHat Jr.) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 300 மில்லியன் டாலர்களுக்கு கையகப்படுத்தியது BYJU. இந்நிறுவனம், ஆறு வயது முதல் 14 வயதான பள்ளிக்குழந்தைகள் கோடிங் கற்றுக்கொள்ளவும், செயலிகள் உருவாக்கவும் ஆன்லைனில் பயிற்சி அளிக்கிறது.
“ஆன்லைன் கற்றலில் தொழில்நுட்பத்தால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நான் மிகவும் நேர்த்தியாக இருக்கிறேன். இது தொடர்பான விழிப்புணர்வை நாங்கள் உருவாக்க முயற்சிக்கிறோம்,” என்கிறார் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன்.
ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: மலையரசு