Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கேரட்லேன் நிறுவனர் மிதுன் சச்சேட்டி இடமிருந்து நிதி முதலீடு பெற்றது சென்னை ippopay!

சென்னையைச் சேர்ந்த நிதி நுட்ப நிறுவனம் இப்போபே (IppoPay) கேரட்லேன் நிறுவனர் மிதுன் சச்சேட்டி மற்றும் ஜெய்பூர் ஜெம்ஸ் சி.இ.ஓ சித்தார்தா சச்சேட்டியிடம் இருந்து வெளிப்படுத்தப்படாத தொகையை முதலீடாக பெற்றுள்ளது.

கேரட்லேன் நிறுவனர் மிதுன் சச்சேட்டி இடமிருந்து நிதி முதலீடு பெற்றது சென்னை ippopay!

Tuesday August 06, 2024 , 1 min Read

சென்னையைச் சேர்ந்த நிதிநுட்ப நிறுவனம் இப்போபே (IppoPay) கேரட்லேன் நிறுவனர் மிதுன் சச்சேட்டி மற்றும் ஜெய்பூர் ஜெம்ஸ் சி.இ.ஓ சித்தார்தா சச்சேட்டியிடம் இருந்து வெளிப்படுத்தப்படாத முதலீடு பெற்றுள்ளது.

'இப்போபே' சிறிய வணிகர்களுக்கான, குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ளவர்களுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை சேவையில் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க இருப்பு கொண்ட இந்நிறுவனம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் விரிவாக்கம் செய்து வருகிறது.

சேவை அளிக்கப்பட்டாத துறையினர் மத்தியில் வங்கி தேவை மற்றும் யூபிஐ பரிவர்த்தனை ஆதரவு வழங்கி வரும் நிறுவனம், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் நடப்பு கணக்கு துவக்குவது உள்ளிட்டவற்றில் உதவி வருகிறது. தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனிடம் இருந்து TPAP அனுமதி பெற்றுள்ளது.

இந்நிலையில், மிதுன் மற்றும் சித்தார்த்தாவிடம் இருந்து நிதி பெற்றுள்ளது.

"மிதுன் மற்றும் சித்தார்த்தாவை உற்சாகமாக வரவேற்கிறோம். வெற்றிகரமான தொழில்முனைவோராக அவர்கள் அனுபவம் 'இப்போபே'வுக்கு உதவியாக இருக்கும். நிறுவன வளர்ச்சிக்காக வழிகாட்டி வந்துள்ளனர்,” என இப்போபே சி.இ.ஓ மோகன் கருப்பையா கூறியுள்ளார்,
Ippopay Mohan

IppoPay-வில் முதலீடு செய்துள்ளது பற்றி பகிர்ந்த மிதுன் சச்சேட்டி,

"இப்போபேவுடன் இணைவதில் மகிழ்கிறோம். மோகனின் தொலைநோக்கு மற்றும் எம்.எஸ்.எம்.இ நிறுவன வங்கி, பரிவர்த்தனை ஆதரவை மேம்படுத்தும் ஈடுபாடு எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது,” என்று கூறியுள்ளார்.

இப்போபேவின் துணை பிரிவான ஃபின்மெடோஸ், டெக் ஃபினி எனும் சேவையை அளித்து வருகிறது. யூபிஐ ஸ்விட்ச், கார்டு ஸ்விட்ச், கார்டு நிர்வாகம் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. அண்மையில் யூபிஐ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட, மோசடியை கண்காணித்து தடுக்க உதவும் ஏஇ சார்ந்த Tutelar சேவை நிகழ் நேர பரிவர்த்தனையை கண்காணிக்கும் நோக்கில் அமைந்துள்ளது. நிறுவனம், ஜஸ்பே, லைரா, ஹைபர்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

வலுவான தலைமை மற்றும் தொழில்நுட்ப கவனத்துடன் நிறுவனம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.


Edited by Induja Raghunathan