Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'இந்தியாவின் நிதித் தொழில்நுட்ப சூழலியல், ஒட்டுமொத்த உலகிற்கும் வாழ்க்கையை எளிதாக்கும்' - பிரதமர் மோடி

உடனடி கடன் வசதி, கிரெடிட் கார்டுகள், முதலீடுகள் மற்றும் காப்பீடு சேவை கிடைப்பது நிதித் தொழில்நுட்பங்களினால் எளிமாகியுள்ளது.

'இந்தியாவின் நிதித் தொழில்நுட்ப சூழலியல், ஒட்டுமொத்த உலகிற்கும் வாழ்க்கையை எளிதாக்கும்' -  பிரதமர் மோடி

Saturday August 31, 2024 , 2 min Read

மும்பையில் உள்ள குளோபல் ஃபிண்டெக் திருவிழாவில் (GFF) பிரதமர் மோடி பேசும்போது இந்திய நிதித்தொழில்நுட்பச் சூழலமைவு குறித்து நம்பிக்கைத் தெரிவித்தோடு புத்தாக்க இந்திய நிதித்தொழில்நுட்பத் துறை உலக அளவில் மக்களின் வாழ்கையை மேம்படுத்தும் என்றார்.

அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி’,

நிதித் தொழில்நுட்பம் இந்தியாவின் தொழில்நுட்ப நிலவரத்தை மாற்றியமைத்துள்ளது, சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நகரங்கள் கிராமங்களுக்கு இடையிலான இடைவெளியை அகற்றியிருக்கிறது.

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு வருபவர்கள் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இப்போது, ​​​​இந்தியாவின் நிதித்தொழில்நுட்பப் பன்முகத்தன்மையைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்.

விமானநிலையத்தில் வந்து இறங்குவது முதல் சாலையோர உணவு விடுதிகள், ஷாப்பிங் அனுபவங்கள் என்று இந்தியாவின் ஃபின்டெக் பன்முகத்தன்மையை எல்லா இடங்களிலும் இப்போது காணலாம், என்றார்

PM GFF

கடந்த பத்தாண்டுகளில் ஃபின்டெக் துறை $31 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளைக் கண்டுள்ளது மற்றும் ஃபின்டெக் ஸ்டார்ட்-அப்கள் 500% க்கும் அதிகமாக வளர்ந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி பிரதமர் கூறும்போது,

”இந்தியர்கள் மிக விரைவான வேகத்தில் ஃபின்டெக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த கண்டுபிடிப்புகள் உள்நாட்டில் செய்யப்படுகின்றன, ஆனால் பயன்பாடுகளோ உலகளாவியது. இந்தியாவின் ஃபின்டெக் சுற்றுச்சூழல் அமைப்பு உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.”

ஏஞ்சல் வரியை நீக்குதல், அனுசந்தன் நேஷனல் ரிசர்ச் பவுண்டேஷன் மூலம் ஸ்டார்ட்-அப்களை ஆதரிப்பதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை தொடங்குதல் மற்றும் வட்டியில்லா கடன்களை வழங்குதல் போன்ற ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கும் வகையில் தனது அரசு பல கொள்கை மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் கடன் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் MSME துறைக்கு ரூ.50 லட்சம் வட்டியில்லாக் கடன் வழங்குவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய்களின் காலத்தில் தடைகள் இருந்தபோது, டிஜிட்டல் பேமெண்ட்ஸ் வங்கியை துரிதப்படுத்துவதில் UPI பெரும்பங்காற்றியதை சுட்டிக் காட்டினார் பிரதமர் மோடி. மேலும்,

“மலிவான ஃபோன்கள், மலிவான டேட்டா மற்றும் ஜீரோ பேலன்ஸ் ஜன்தன் கணக்குகள் இந்தியாவில் அற்புதங்களைச் செய்துள்ளன,” என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 530 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஜன்தன் கணக்குகளைத் திறந்துள்ளனர், இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள்தொகைக்கு சமம் என்று கூறிய பிரதமர் ஜன்தன் கணக்குகள் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு வழியாக மாறியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். ஜன்தன் திட்டத்தின் மூலம் பெண்கள் 290 மில்லியன் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர் என்றார்.

“தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்காக, QR குறியீடு மற்றும் சவுண்ட்பாக்ஸ்களின் பயன்பாடு போன்ற பல புதுமையான தயாரிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன, தரவு தலைமையிலான வங்கி தற்போது நியோபேங்கிங், டிஜிட்டல்-ஒன்லி வங்கிகள் மற்றும் டிஜிட்டல் ட்வின்ஸ் என்று மேலும் பல முன்னேற்றங்கள் கண்டுள்ளன,” என்றார்.

பிரதமர் மோடி தனது உரையின் போது, ​​சைபர் மோசடி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்துமாறு கட்டுப்பாட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டார். தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தைத் தொடர இந்தியாவின் இளம் திறமைகள் மீது அவர் தனது அபார நம்பிக்கைக் கொண்டிருப்பதை உறுதி செய்தார், மேலும் "வரும் காலங்களில் மேலும் சிறந்தவற்றை எதிர்பார்க்கலாம்," என்றும் கூறினார்.