தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் சோதனை ஒத்திவைப்பு - அக்னிகுல் நிறுவனம் அறிவிப்பு!
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான 'அக்னிகுல் காஸ்மோஸ்' தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது முதல் ராக்கெட் ஏவுகணை சோதனையை ஒத்திவைத்துள்ளது.
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான 'அக்னிகுல் காஸ்மோஸ்' தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது முதல் ராக்கெட் ஏவுகணை சோதனையை ஒத்திவைத்துள்ளது.
ஐஐடி-மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், 'தொழில்நுட்பச் சிக்கலால்' தனது முதல் ராக்கெட் ஏவுதலை ஒத்திவைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ இந்தியாவிலேயே முதன்முறையாக, 3டி பிரிண்டிங் மூலம் ராக்கெட் இன்ஜின் உருவாக்கியுள்ளது. 'அக்னிபான் SOrTeD' (சப் ஆர்பிட்டல் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்) என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட்டானது இன்று காலை 7 மணிக்கு அண்டை மாநிலமான ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் வளாகத்தில் உள்ள அதன் தனியார் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவிருந்தது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறுகாரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக நிறுவனம் தனது சோசியல்மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளது.
“நேற்று இரவு கவுண்டவுன் ஒத்திகையின் போது சிறிய அளவிலான தொழில்நுட்பக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது. விரைவில் புதிய தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் மிக்க நன்றி,” எனப் பதிவிட்டனர்.
அக்னிபான் ஏவுகணையின் பயன்கள்:
'அக்னிபான்' என்ற சுற்றுப்பாதை ஏவுகணை மூலம் வாடிக்கையாளர்களுக்கு விண்வெளிப் போக்குவரத்தை அணுகக்கூடியதாகவும், பொருளாதார ரீதியாகவும் திறமையானதாகவும் காட்ட அக்னிகுல் காஸ்மோஸ் திட்டமிட்டுள்ளது.
PTI-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி,
"மார்ச் 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு இந்திய நேரப்படி திட்டமிடப்பட்ட அக்னிபான் எஸ்ஓஆர்டிஇடி மிஷன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடக்க விமானம் ஒரு சோதனை விமானமாக செயல்படும், முக்கியமான விமான தரவுகளை சேகரித்து, அமைப்புகளின் உகந்த செயல்பாட்டை உறுதி செய்யும்.
“அக்னிபான் சார்டெட்” என்பது புதுமையான மற்றும் நிறுவனத்தின் அக்னிலெட் இன்ஜினை உண்மையான விமானத்தில் சோதிக்கும் ஒற்றை நிலை ராக்கெட் ஆகும்.உலகின் முதல் சிங்கிள் பீஸ் 3டி அச்சிடப்பட்ட செமி கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை எடுத்துச் செல்வதன் மூலம் நிறுவனம் மிக முக்கியமான மைல்கல்லை எட்டவுள்ளது.
575 கிலோ எடையுள்ள 6.2-மீட்டர் ராக்கெட்டில் சப்-கூல்டு லிக்விட் ஆக்சிஜன் மற்றும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் ஆகியவை அதன் உந்துசக்திகளாக பொருத்தப்பட்டுள்ளன. லிப்ட்-ஆஃப் செய்யப்பட்ட பிறகு, ராக்கெட் சுமார் 10 கிமீ உயரத்திற்கு பயணித்த பிறகு, பயண அட்டவணையின்படி, கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் வங்காள விரிகுடாவில் விழும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் 2022 இல் தனது முதல் ராக்கெட் விக்ரம்-எஸ் ஐ ஏவிய முதல் தனியார் விண்வெளி நிறுவனம் என சாதனை படைத்துள்ளது. தற்போது 2வது இடம் பிடிக்கவிருந்த அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் முயற்சியில் தடை ஏற்படுத்துள்ளது.