நிறுவனங்கள் தரவுகளை ஒருங்கிணைக்க உதவும் ஏஐ ஸ்டார்ட் அப் OngIL.ai
ஏஐ சார்ந்த முடிவெடுத்தலில் உதவும் அனல்டிக் மேடையாக ஆன்கில்.ஏஐ, விளங்குகிறது. இதன் உடனடி மேசேஜிங் சாதனம், நிறுவனங்களின் மூத்த மேலாளர்கள் அனல்டிக் செயல்முறையை துரிதமாக்க உதவுகிறது.
தரவுகளை சேகரிப்பது, ஒருங்கிணைப்பது மற்றும் செயல்முறைக்கு உள்ளாக்குவது என்று வரும் போது நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக பெருந்தரவுகளை கையாளும் போது சவால்களை எதிர்கொள்வதோடு, டேஷ்போர்ட் அமைப்பு மற்றும் அறிக்கை தயாரித்தல் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன.
இதில் செயற்கை நுண்ணறிவு தரவுகள் சார்ந்த செயல்முறையில் உதவி, செலவுகளை குறைத்து, போட்டித்தன்மையை அதிகமாக்கலாம்.
“இந்த செயல்முறைக்கு பல நாட்கள் ஆகலாம். இருப்பினும், ஏஐ ஒருங்கிணைப்பால், பல நாட்களில் கடின உழைப்பு தேவைப்படக்கூடிய செயல்முறையை நிமிடங்களில் சாத்தியமாக்குகிறோம்,” என்று அஜீத் சகஸ்ரநாமம் யுவர்ஸ்டோரியிடம் கூறுகிறார்.
சென்னையை தலைமையகமாக கொண்ட 'ஆன்கில்' (
), தரவுகள் சார்ந்த துடிப்பான முடிவெடுத்தலில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஏஐ சார்ந்த தீர்வுகளை வழங்கி வருகிறது.இந்த உடனடி மெசேஜிங் சேவை சார்ந்த மேடை, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த மேலாளர்கள் அனல்டிக்ஸ் செயல்முறையை 95 சதவீதம் வேகமாக்க உதவுகிறது. நிகழ்நேர அலசல் மற்றும் கணிப்பு அலசல் உள்ளிட்ட அம்சங்களோடு, தரவுகள் தொடர்பான புரிதலை அளிப்பதன் மூலம் இதை சாத்தியமாக்குகிறது.
2017ல் நிறுவப்பட்ட இந்த ஸ்டார்ட் அப், பெங்களூரு பதிப்பு டெக்ஸ்பார்க்ஸ் 2023 நிகழ்ச்சியில் யுவர்ஸ்டோரியின் டெக் 30 பட்டியலில் இடம்பெற்றிருந்தது. காக்னிசண்ட் முன்னாள் துணைத்தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட தேவதை முதலீட்டாளர்களிடம் இருந்து 4,00,000 டாலர் நிதி திரட்டியுள்ளது.
தரவுகள் அலசல்
சமகால ஏஐ நுட்பங்கள், பெருமளவிலான தரவுகள் மற்றும் கம்ப்யூட்டர் திறன் சார்ந்து இயங்குவதால், இந்த பரப்பில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே சாதகமாக அமைகின்றன் என்கிறார் சகஸ்ரநாமம்.
“இதன் விளைவாக ஏஐ மேம்பாடு தொழில்நுட்ப பெரும் நிறுவனங்களின் தேவை, விருப்பங்களுக்கு ஏற்ப அமைகிறது. சப்ளை செயின் நிர்வாகம், காலநிலை மாற்ற தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் செயல்படும் அல்கோரிதம்கள், உருவ பகுப்பு, இ-மெயில் ஸ்பேம் கண்டறிதல் உள்ளிட்டவற்றுக்கு உருவாக்கப்பட்டதால், போதுமான பலன் அளிப்பதில்லை,” என்கிறார் சகஸர்நாமம். இவர் கம்ப்யூடேஷனல் நியூரோசயின்சில் பிஎச்டி பெற்றுள்ளார்.
தரவுகள் செயல்முறையில் கம்ப்யூட்டர் திறனை குறைப்பதை நோக்கமாக கொண்டு இவர் ஆன்கில்.ஏஐ நிறுவனத்தை துவக்கினார். கணிப்பு அலசல், பிழை கண்டறிதல்,என்.எல்.பி பயன்பாடு, ஆழ் கற்றல் ஆகிய செயல்பாடுகள் மூலம் ஏஐ சேவையை மேலும் ஜனநாயகமாக்கி பயனுள்ளதாக நிறுவனம் விரும்புகிறது.
நிறுவனம் கேஷுவல் மாடலிங் மற்றும் பிராபபிலிட்டி புரோகிராமிங் உத்திகளை கையாள்கிறது.
“மேலும், ஸ்பைகிங் நியூரான் மாடல் சார்ந்த நியூரால் நெட்வொர்க்கை உருவாக்க முயன்று வருகிறது. இது எங்கள் மாடல்களை மேலும் வளைந்து கொடுக்கும் தன்மை பெற வைத்து, கம்ப்யூட்டர் திறன் தேவையையும் குறைக்கும்,” என்கிறார் அவர்.
இந்நிறுவனம், யூனிலீவர், 3எம், ABInbev , ஹெலோ டிராவல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளது. நிறுவன சேவையை பயன்படுத்த துவங்கிய பிறகு யூனிலீவர் தரவு ஒருங்கிணைப்பில் 7 மடங்கு திறன் மேம்பாட்டை கண்டிருப்பதாக நிறுவனர் தெரிவிக்கிறார்.
ABInbev நிறுவனத்திற்கு தரவுகள் புரிதலுக்கான நேரம் மூன்று நாட்களில் இருந்து ஐந்து நிமிடங்களாக குறைந்துள்ளது என்கிறார். இந்த ஸ்டார்ட் அப் மாதாந்திர சந்தா சேவை அளிப்பதோடு, கணிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. வாடிக்கையாளர் தேவைக்கேற்ற சேவைகளும் அளிக்கிறோம், அதற்கு தனி கட்டணம் என்கிறார் நிறுவனர்.
19 ஊழியர்களைக் கொண்ட ஸ்டார்ட் அப் கடந்த நிதியாண்டில் 2,10,000 டாலர் ஆண்டு வருவாய் ஈட்டியது, இந்த ஆண்டு இது 300,000 டாலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால திட்டம்
இந்தியாவில் ஏஐ சந்தை 2025ல் 7.8 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு ஏஐ சந்தை 2022 முதல் 2025 வரை ஆண்டு அடிப்படையில் 20.2 சதவீத வளர்ச்சி பெறும் என மாநில கல்வி அறிக்கை தெரிவிக்கிறது.
பொதுவான பயன்பாடு சார்ந்த ஆதரவு சேவையில் இருந்து, இ.எஸ்.ஜி (சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம்) மற்றும் நிறுவனங்களின் சமூக தாக்கம் ஆகியவற்றில் நிறுவனம் கவனம் செலுத்த இருப்பதாக சகஸ்ரநாமம் கூறுகிறார்.
“இந்தியாவில் இல்லை என்றாலும், பல வெளிநாடுகளில் நிறுவனங்கள் தங்கள் சமூக தாக்கம் பற்றி தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான தரவுகளில் நிறுவனம் உதவும்,” என்கிறார்.
நிறுவனம் தற்போது தென்கிழக்கு ஆசியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க சந்தையில் செயல்பாடுகளை வலுவாக திட்டமிட்டுள்ளது.
“பொறுப்பான ஏஐ நுட்பத்தை கொண்டிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்திலும் விரிவாக்கம் செய்ய இருப்பதாக சகஸ்ரநாமம் கூறுகிறார்.
இந்நிறுவனம் புதிதாக நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.
“புதிய அல்கோரிதம் மற்றும் வன்பொருள் உருவாக்கம் மூலம் வர்த்தகத்தில் ஏஐ பயன்பாட்டில் புரட்சியை ஏற்படுத்த விரும்பும் எங்கள் இலக்கை பகிரும் தன்மை கொண்ட முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம். இது சவாலாக உள்ளது,” என்கிறார்.
ஆங்கிலத்தில்: பாலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்
புற்றுநோய் சிகிச்சையாளர்களுக்கு அணிகணிணி தீர்வுகளை வழங்கும் புனே ஸ்டார்ட் அப் Anatomech
Edited by Induja Raghunathan