புற்றுநோய் சிகிச்சையாளர்களுக்கு அணிகணிணி தீர்வுகளை வழங்கும் புனே ஸ்டார்ட் அப் Anatomech
புனேவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப், புற்றுநோய் சார்ந்த லிம்பிடெமா பாதிப்பை மையமாக கொண்ட, மறுவாழ்வு மற்றும் காயத்திற்கு பிறகான நீண்ட கால சிகிச்சைக்கான அணிகணிணி தீர்வுகளை வழங்குகிறது.
தீவிரமான வலியை நிர்வகிக்க முயற்சிப்பவர்கள் அல்லது நீண்ட கால காயத்தில் இருந்து மீண்டு வருபவர்கள், வீட்டில் இருந்தபடியே மறுவாழ்வு சிகிச்சை பெறுவது சவாலானது.
புனேவைச் சேர்ந்த 'அனடோமெக்' (
) தனது ஸ்மார்ட் அணிகணிணி சாதனம் மூலம் இந்த இடைவெளியை குறைக்க விரும்புகிறது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சிக்கிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.சுகாதாரம் சார்ந்த அணிகணிணி சாதன வடிவமைப்பில் ஏழு ஆண்டு அனுபவம் மிக்க திவ்யாக்ஷி கவுசிக்கால் இந்த ஸ்டார்ட் அப் துவக்கப்பட்டது. இந்திய அரசின் BIRAC சமூக முன்னெடுப்பு ஊக்கத்தொகை பெற்றவரான திவ்யாக்ஷி மறுவாழ்வு தீர்வுகள் மற்றும் காயம் அல்லது அறுவை சிகிச்சைக்கு பிறகு நீண்ட கால சிகிச்சையில் இடைவெளி இருப்பதை உணர்ந்து, 2020 மார்ச்சில் அனடோமெக் நிறுவனத்தை துவக்கினார்.
இந்த ஸ்டார்ட் அப் தற்போது, சாக்ஸ், கை மற்றும் கால் உரைகள் உள்ளிட்ட தொழில்நுட்பம் அல்லாத கம்பிரஷன் பொருட்களை தனது KUE பிராண்ட் கீழ் அளிக்கிறது. விரைவில் மூட்டு மற்றும் முழங்காலுக்கான ஆதரவை வழங்க உள்ளது. முன்னோட்ட வடிவில் உள்ள அணிகணிணி சாதனம் முதல் கட்ட சோதனையில் உள்ளது.
நிறுவனத்தின் முன்னோட்ட தொழில்நுட்ப பொருள் இன்னமும் அறிமுகம் செய்யப்படாதது, மார்பக புற்றுநோய் சார்ந்தது. இந்த ஸ்டார்ட் அப், யுவர்ஸ்டோரியால் தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் பிரகாசமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் டெக் 30 -2023 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
“டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சி, பெரிய அளவிலான பார்வையாளர்கள் முன் யோசனையை முன்வைப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது. தொடர்புடைய மனிதர்களை இதன் மூலம் உரையாட முடிந்தது. முதலீட்டாளர்களுடனான எங்கள் உரையாடல் நிதி திரட்டம் முயற்சிக்கு உதவும்,” என்கிறார் திவ்யாக்ஷி.
வழங்குவது என்ன?
அனடோமெக்கின் பிராண்ட் KUE, 2021 ஆகஸ்ட்டில் அறிமுகம் ஆனது. 30 எஸ்கேயூகள் கொண்ட ஐந்து கம்பிரஷன் பொருட்களை வழங்குகிறது.
நிறுவனத்தின் பொருட்கள், இரத்த அழுத்தத்தை சீராக்கி, தினசரி வாழ்க்கையில், கடின விளையாட்டுகளில் கைகால்களில் ஏற்படும் களைப்பு மற்றும் அழுத்தத்தை போக்கும் வகையில் பொறியியல் வடிவமைப்பை கொண்டுள்ளது என்கிறார் திவ்யாக்ஷி.
“எங்கள் தொழில்நுட்பம், சுகாதாரம், உடல்நலம், துணை வாழ்வியல், விளையாட்டு மீட்சி ஆகிய துறைகளில் நீட்டிக்கப்பட்ட பயன் கொண்டுள்ளது,” என்கிறார்.
ஐந்து பேர் குழு கொண்ட ஸ்டார்ட் அப், தடகள வீரர்கள் மற்றும் மூட்டு வலி கொண்டவர்களுக்கு கை கால்கள் வசதியின்மையை குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக்கும் மூட்டு மற்றும் முழங்கால் ஆதரவை விரைவில் வழங்க உள்ளது.
நிறுவன பொருட்கள் ரூ.350 முதல் ரூ.1,299 விலை கொண்டுள்ளன. kues.in இணையதளம் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட மேடைகளில் கிடைக்கின்றன. நிறுவனம் இ-பார்மசிகளிலும் தனது பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
“மறுவாழ்விற்கான அணிகணிணி (wearables) சாதங்களை எளிதாக அணுக வழி செய்யும் வகையில், இ-பார்மசிகள், இ-காமர்ஸ் தளங்கள், டி2சி தளங்கள் வாயிலாக விநியோகம் செய்கிறோம்,” என்கிறார் திவ்யாக்ஷி.
நிறுவனத்தின் வருவாய் பற்றிய தகவல்களை வெளியிடாமல், 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மேல் சேவை அளித்துள்ளதாக கூறுகிறார்.
லிம்பிடிமா நோயாளிகளுக்கு உதவி
லிம்பிடெமா (Lymphedema) என்பது கை கால்கள் அசைவை கட்டுப்படுத்தும் வலி மிகுந்த வீக்கமாகும். மார்பகம், பெல்விக், வயிறு புற்றுநோய் பாதிப்பு சிகிச்சை பெற்ற நோயாளிகளையும் இது பாதிக்கிறது. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 40 சதவீதம் பேருக்கு மேல் இந்த பாதிப்பை கொண்டுள்ளனர்.
“இந்தியா முழுவதும் சான்றிதழ் பெற்ற லிம்பிடெமா சிகிச்சையாளர்கள் 35 பேர் தான் உள்ளனர். இதன் காரணமாக மொத்த சூழலும் சுமை கொண்டுள்ளது. இந்த சுமையை பகிர்ந்து கொள்வதற்கான உடனடி தேவையையும், சிறந்த பலன்களை அளிக்கும் வகையில் சிகிச்சை முன்னேற்ற கண்காணிப்பு மற்றும் சீராக்க திட்டம் ஆகியவற்றுக்கான தேவையை உணர்த்துகிறது,” என்கிறார் திவ்யாக்ஷி.
அனாடோமெக்கின் உயிரி அணிகணிணியான லிம்பிடெமா (Lymphedema) தினமும் அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனமாகும். நோயாளிகளின் அக்சுவேட்டர்சுடன் ஒருங்கிணைக்கப்படும் இந்த சாதனம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் அழுத்தம் வழங்கி, நாள் பட்ட வீக்கத்தை குறைத்து, இன்னல்களையும் குறைக்கிறது.
“எங்கள் முன்னோட்ட தயாரிப்பு ஏற்கனவே வலி மிகுந்த புற்றுநோய் சிகிச்சை பாதைக்கு உள்ளாகி, மறுவாழ்வு முயற்சியிலும் சவால்களை எதிர்கொள்ள தேவையில்லாத புற்றுநோய் தொடர்பான லிம்பிடெமா சிகிச்சையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது,” என்கிறார் திவ்யாக்ஷி.
அணிகணிணி வன்பொருள் ஆற்றல் தவிர, நோயாளிகளை தொலைவில் இருந்து கண்காணிக்கும் மற்றும் சிகிச்சைகளை பரிந்துரைக்கும் டிஜிட்டல் திறன்களை இணைக்க உள்ளோம், என்கிறார்.
குறைந்தபட்ச நோக்கிலான தயாரிப்பு இப்போது முதல்கட்ட சோதனையில் உள்ளது. இதன் விலை ரூ.45,000 முதல் துவங்குகிறது. ஒருவர் வீட்டில் இருந்து தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பயன்படுத்தலாம்.
எதிர்கால திட்டம்
இந்த ஸ்டார்ட் அப் ஒரு கோடி நிதியை, அறிவியல் தொழில்நுட்ப கழகம் மற்றும் BIRAC மூலம் பெற்றுள்ளது. வென்சர் செண்டர் ஆதர்வு பெற்ற இந்த இன்குபேட்டர் மூலம் 2018 முதல் அனாடோமெக் இன்குபேட் செய்யப்பட்டுள்ளது.
Cornell Maha60, குவால்காம் இந்தியாவின் QWEIN, வெலாசிட்டி- NSRCel, IIMB; மற்றும் பெண்கள் தொழில்முனைவு திட்டம்- InFED, IIM நாக்பூர் வாயிலாக இந்த ஸ்டார்ட் அப் வழிகாட்டுதல் மற்றும் வலைப்பின்னல் வாய்ப்புகளை பெற்றுள்ளது. அமெரிக்காவின் கோயா மெடிகல், டாக்டைல் மெடிகல் ஆகிய நிறுவனங்களை போட்டியாளராக கருதுகிறது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட, சான்றிதழ் பெற்ற பொருட்களை போட்டி மிகுந்த விலையில் வழங்குவது நிறுவனத்தின் தனித்தன்மை என்கிறார் திவ்யாக்ஷி.
“இந்தியாவில் 350 பில்லியன் டாலர் மதிப்பிலான இல்ல சுகாதார நிர்வாக சந்தைக்கான தொழில்நுட்ப தயாரிப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். சுகாதார வளங்கள் பிரிவில் உள்ள சுமையை குறைப்பது எங்கள் நோக்கம். சிகிச்சை பரிந்துரையை மேம்படுத்தும் வகையில் தொலை கண்காணிப்பு வசதியை அளிப்பதன் மூலம் மாறிவரும் சுகாதார சூழலுக்கு ஏற்ப செயல்பட விரும்புகிறோம்,” என்கிறார்.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan