சென்னை கிளவுட் உற்பத்தி ஸ்டார்ட் அப் நிறுவனம் Frigate $175,000 நிதி திரட்டியது!
கிளவுட் உற்பத்தி ஸ்டார்ட் அப் நிறுவனமான பிரைகேட் (Frigate ) விதை சுற்றுக்கு முந்தைய நிதியாக 175,000 டாலர் திரட்டியுள்ளது.
கிளவுட் உற்பத்தி ஸ்டார்ட் அப் நிறுவனமான 'ஃப்ரிகேட்' (
) விதை சுற்றுக்கு முந்தைய நிதியாக 175,000 டாலர் திரட்டியுள்ளது.நிறுவனர் வேல் கன்னியப்பன், ஸ்ரீநாத் ராமகிருஷ்ணன், அபிஷேக் ராஜ் பாண்டே, Bitscrunch விஜய் பிரவீன் மஹராஜன், எஸ்.பி.கே குழுமத்தின் பிரபு செங்கோடன், Fintech நிறுவனர்கள் மோகன், ஜெயகுமார், Wilcosource நிறுவனர் சுந்தராமன் ராமசாமி மற்றும் அமெரிக்க, ஜப்பானிய ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இந்த சுற்றில் பங்கேற்றனர் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு துவக்கப்பட்ட Frigate® தேவை அடிப்படையிலான கிளவுட் உற்பத்தி மேடையாக விளங்குகிறது. பேப்ரிகேஷன், 3டி பிரிண்டிங், சிஎன்சி மிஷினிங் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளை உற்பத்தி நிறுவனங்கள், சிறு தொழில்கள் மற்றும் ஸ்டார்ட் அப்’களுக்கு இந்நிறுவனம் அளித்து வருகிறது.
Frigate நிறுவனம், ராஜ்கோட், மதுரை, சேலம், ஈரோடு, திருச்சி, அகமதாபாத், பாலக்காடு, இந்தூர், கோவை உள்ளிட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை தனது மேடையில் பெற்றுள்ளது.
மின்வாகனம், பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் நுட்பங்களில் சர்வதேச தேவைக்கேற்ற சேவையை வழங்க நிறுவனங்கள் இந்த மேடையை பயன்படுத்திக்கொள்கின்றன.
இப்போது திரட்டியுள்ள நிதி மூலம், நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மேடையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. வடிவமைப்பின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப இயந்திரங்களைப் பொருத்தும் வகையில் இந்த மேடை அமைந்திருக்கும்.
ஃப்ரிகேட்டின் OPTMAN மேடை, வெளிப்படையான தன்மையோடு, உற்பத்தி இயந்திரங்களின் இருப்பை உணர்த்துவதால் நிறுவனங்கள் அதற்கேற்ப தங்கள் உற்பத்தியை முன்கூட்டியே திட்டமிட்டு, கையிருப்பை பராமரிக்கவும் உதவுகிறது.
நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கையை 100க்கும் அதிகமாக திட்டமிட்டுள்ளது.
”முன்னோடி வடிவமைப்பு நிறுவனமாகத் துவங்கி, உற்பத்தியாளர்கள் தேவைக்கேற்ப உற்பத்தி வசதியையும் அளிக்கும் நிறுவனமாக மாறியிருக்கிறோம். சரியான நேரத்தில் சரியான பொருட்களைக் கொண்டு, சரியாக உற்பத்தி செய்ய, சரியான மூல இடங்களை கண்டறிய இந்தியா முழுவதும் பயணித்து இருக்கிறோம்,” என ஃப்ரிகேட் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ தமிழினியன் கூறியுள்ளார்.
”பேப்ரிகேஷன், டை உருவாக்கம் போன்றவற்றை கேள்விப்படும் போது, பாரம்பரிய உற்பத்தை முறையே நினைவில் வரும். இந்த பாரம்பரிய அமைப்பை ஸ்டாரட் அப்பாக மாற்றியுள்ள நிறுவனர்களில் ஒருவராக தமிழினியர் விளங்குகிறார்,” என்று Mamaearth அபிஷேக் ராஜ் பாண்டே கூறியுள்ளார்.
”இளமை துடிப்பான குழு உருவாக்கிய, முன்னோட்ட வடிவமைப்பு முதல் உற்பத்தி வரையான செலவு, நேரம், தரம், மற்றும் செயல்திறன் வாய்ந்த சேவையாக இந்த மேடை விளங்குகிறது,” என வேல் கன்னியப்பன் கூறியுள்ளார்.