Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

முழுமையான சீரமைப்பு மேம்பாட்டை பெறும் 14 சென்னை மாநகராட்சிப் பள்ளிகள்!

இம்மாநகரில் 14 பள்ளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறை கற்றல் சாதனங்கள், குடிநர், துப்புரவு மற்றும் தூய்மை வசதிகளை வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து செயல்படும் வேர்ல்டு விஷன் இந்தியா.

முழுமையான சீரமைப்பு மேம்பாட்டை பெறும் 14 சென்னை மாநகராட்சிப் பள்ளிகள்!

Friday October 30, 2020 , 3 min Read

குழந்தைகள்‌ மீது சிறப்பு கூர்நோக்கம்‌ செலுத்தும்‌ ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘வேர்ல்டு விஷன்‌ இந்தியா’; ’வாழ்க்கைக்கு கல்வி’ என்ற செயல்திட்டத்தின்‌ ஒரு பகுதியாக சென்னையில்‌ இயங்கி வரும்‌ 14 மாநகராட்சிப் பள்ளிகளில்‌ பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) நிர்வாகத்தோடு இணைந்து அவைகளின்‌ உட்கட்டமைப்பு மற்றும்‌ கற்றல்‌ வசதிகளை தரம்‌ உயர்த்தும்‌ முயற்சியில்‌ ஈடுபடுகிறது.


மாணவர்கள்‌ பாதுகாப்பாகவும்‌, ஆரோக்கியமாகவும்‌ இருக்க உதவ, மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள்‌ மற்றும்‌ டிஜிட்டல்‌ முறையிலான கற்றல்‌ சாதனங்கள்‌ வழியாக தரமான கல்விக்கு அணுக, வசதி வழங்குவதை உள்ளடக்கிய இந்த செயல்முறையின்‌ மூலம்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட 14 மாநகராட்சி பள்ளிகள்‌ ஒரு முழுமையான மாற்றத்தைப்‌ பெறவிருக்கின்றன.


ஒரு குழந்தையின்‌ நலவாழ்வின்‌ மீது தாக்கம்‌ ஏற்படுத்துகின்ற உலகளாவிய தரஅளவுகோல்களை எட்டுவதை நோக்கி படிப்படியாக கல்வி அமைப்பு முறைகளை மேம்படுத்துவதே இச்செயல்திட்டத்தின்‌ குறிக்கோளாகும்‌.

1

இச்செயல்திட்டமானது, நான்கு முக்கிய அம்சங்கள்‌ மீது கவனம்‌ செலுத்தும்‌:


  • மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல்முறை கற்றல்‌ வசதியை வழங்குவது.
  • குடிநீர்‌, துப்புரவு மற்றும்‌ தூய்மை நிலைக்கான (WASH) சேவைகளுக்கு மேம்பட்ட வசதி.
  • வன்முறை மற்றும்‌ தவறாகப்‌ பயன்படுத்தலின்‌ அனைத்து வடிவங்களிலிருந்தும்‌ குழந்தைகளை பாதுகாப்பது.
  • பள்ளிகளில்‌ குழந்தைகளின்‌ பங்கேற்பிற்கு ஆதரவளிப்பது.


பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ கல்வித்துறையோடு, வேர்ல்டு விஷன்‌ இந்தியாவும்‌ சேர்ந்து இந்த பள்ளிகளில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்‌ குறித்து ஆய்வு செய்தது.


உட்கட்டமைப்பு வசதிகளின்‌ தரம்‌ உயர்த்தல்‌ செயல்பாடுகளில்,‌ கழிப்பறைகள்‌ கட்டுவது மற்றும்‌ சீரமைப்புகள்‌, பள்ளியின்‌ சுற்றுச்சுவர்‌ உயரத்தை அதிகரிப்பது, மழைநீர்‌ சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும்‌ பழுதுநீக்குவது, ஆழ்துளை கிணறுகளை தோண்டுவது, மாதவிடாய்‌ கால தூய்மை மீது வளரிளம்‌ பெண்‌ குழந்தைகளிடம்‌ விழிப்புணர்வை உருவாக்குவது, விளையாட்டு உபகரணங்கள்‌, பெஞ்ச்கள்‌ மற்றும்‌ மேசைகளை வழங்குவது ஆகியவை உள்ளடங்கும்‌.

சுவர்சித்திரங்கள்‌ வழியாக WASH மீது விழிப்புணர்வு வாசகங்களை எழுதி மாணவர்கள் மனதில்‌ பதியவைப்பது மற்றும்‌ நிலைக்கத்தக்க வாழ்க்கை முறை பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க சமையலறை தோட்டங்களை உருவாக்குவது என்ற பணிகள்‌ மீதும்‌ இச்செயல்திட்டம்‌ சிறப்பு கவனம்‌ செலுத்துகிறது.

இந்த மாநகராட்சி பள்ளிகளில்‌ டிஜிட்டல்‌ வகுப்பறைகள்‌ போன்ற ஸ்மார்ட்‌ அம்சங்களையும்‌ வேர்ல்டு விஷன்‌ இந்தியா இடம்பெறச்‌ செய்திருக்கிறது. இப்பள்ளிகளில்‌ 43 டிஜிட்டல்‌ வகுப்பறைகள்‌ ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. மென்பொருள்‌ வழியாக பாடங்கள்‌ பதிவேற்றம்‌ செய்யப்படுகின்றன மற்றும்‌ காட்சி நிலைகள்‌ மற்றும்‌ வரைபடங்களின்‌ உதவியோடு பாடங்களை விளக்க உதவுகின்ற கல்வி மென்பொருளையும்‌ வேர்ல்டு விஷன்‌ நிறுவியிருக்கிறது.

school paint

ஆசிரியர்களின்‌ செயல்திறனை இன்னும்‌ அதிகரிப்பதும்‌ இச்செயல்திட்டத்தின்‌ ஒரு பகுதியாகும்‌. WASH சேவைகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள அணுகுவசதியின்‌ மூலம்‌ கோவிட்‌-19 பெருந்தொற்றுப் பரவலுக்கு மத்தியில்‌ பள்ளிகளை மீண்டும்‌ திறக்கும்‌ அளவிற்கு இவைகள்‌ இப்போது பாதுகாப்பானவையாக தரம்‌ உயரத்தப்பட்டுள்ளன.


இந்த மறுசீரமைப்பு செயல்பாட்டிற்கு முன்புவரை இந்த பள்ளிகள்‌ பெரும்பாலானவற்றில்‌ கைகழுவுவதற்கான அடிப்படை வசதிகள்‌ மற்றும்‌ அடிப்படை துப்புரவு மற்றும்‌ குடிநீருக்கான சேவை வசதிகள்‌ இருக்கவில்லை.

‘வாழ்க்கைக்கான கல்வி’ செயல்திட்டத்தின்‌ கீழ்‌ சீரமைப்புப் பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ 14 மாநகராட்சி பள்ளிகள்‌:

1. அரசு உயர்நிலைப்‌ பள்ளி - எம்‌எம்டிஏ காலனி

2. சென்னை மாநகராட்சி ஆண்கள்‌ உயர்நிலை பள்ளி, நுங்கம்பாக்கம்‌

3. சென்னை நடுநிலை பள்ளி, நுங்கம்பாக்கம்‌

4, சென்னை பெண்கள்‌ உயர்நிலைப்‌ பள்ளி, ஷெனாய்‌ நகர்‌

5. சென்னை மாநகராட்சி மேனிலைப்‌ பள்ளி, கீழ்பாக்கம்‌

6. சென்னை நடுநிலைப்பள்ளி, பெரம்பூர்‌

7. சென்னை பெண்கள்‌ மேனிலைப்பள்ளி, பெரம்பூர்‌

8. சென்னை உருது அரசு நடூநிலைப்பள்ளி, பிராட்வே

9. சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சிந்தாதரிபேட்டை

10. சென்னை மாநகராட்சி, உயர்நிலைப்பள்ளி, வால்டாக்ஸ்‌ சாலை

11. சென்னை தொடக்கப்பள்ளி, எஸ்‌எம்‌ நகர்‌

12. சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வரதராஜபுரம்‌

13. சென்னை நடுநிலைப்பள்ளி, வில்லிவாக்கம்‌

14. சென்னை தொடக்கப்பள்ளி, அமைந்தகரை

வேர்ல்டு விஷன்‌ இந்தியா அமைப்பின்‌ ஆதாரவள திரட்டல்‌ மற்றும்‌ பொது ஈடுபாடுக்கான (RMPE) குரூப்‌ இயக்குனர்‌ சோனி தாமஸ்‌ இச்செயல்திட்டம்‌ குறித்து பேசுகையில்‌,

“எமது குழந்தைகளுக்கு அதிக உறுதியான எதிர்காலத்தை வழங்க பெருநகர சென்னை மாநகராட்சியோடு இணைந்து செயல்படுவதில்‌ நாங்கள்‌ பெரிதும்‌ மகிழ்ச்சியடைகிறோம்‌. கோவிட்‌-19 பெருந்தொற்று பரவியதில் இருந்து பள்ளிகள்‌ மூடப்பட்டிருப்பது, குழந்தைகளின்‌ கல்வி மற்றும்‌ நலவாழ்விற்கு இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சவாலை தந்திருக்கிறது. குழந்தைகளது கற்றல்‌ மீது வேர்ல்டு விஷன்‌ இந்தியா அதிக முன்னுரிமை செலுத்துகிறது. கை தாய்மை, தூய்மையான குடிநீர்‌ மற்றும்‌ பாதுகாப்பான துப்புரவு வசதிகளை வழங்குவது மீது சிறப்பு நோக்கத்தோடு, மீண்டும்‌ தொடங்கப்பட பள்ளிகள்‌ பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே இச்செயல்திட்டத்தின்‌ நோக்கம்‌,” என்று கூறினார்‌.
corporation school

பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ கூடுதல்‌ கல்வி அதிகாரியும்‌ (AEO) மற்றும்‌ பொறுப்பு கல்வி அதிகாரியுமான பாரதிதாசன்‌ பேசுகையில்‌,

“வசதி குறைவான நகர்ப்புற சமூகங்களைச்‌ சேர்ந்த மாணவர்களுக்கு பெரும்பாலும்‌ சமீபத்திய தொழில்நுட்பங்கள்‌ மீது அறிவோ, பரிச்சயமோ மிகவும்‌ குறைவாகவே இருக்கிறது. இத்தகைய ஸ்மார்ட்‌ வகுப்பறைகள்‌ மூலம்‌ டிஜிட்டல்‌ முறையிலான கற்றலுக்கான அணுகுவசதியை பெறவும் மற்றும்‌ அதைத்தொடர்ந்து சிறப்பான வேலைவாய்ப்புகளை பெறுவது என்ற இலக்கை நோக்கி பயணிக்கவும்‌ இத்தகைய மாணவர்கள்‌ ஊக்குவிக்கப்படுவார்கள்‌,” என்று கூறினார்‌.