இந்தியாவின் இரண்டாவது பெரிய டேட்டா செண்டர் மையமாக உருவாகும் சென்னை மாநகரம்!
சென்னை அருகே ஸ்ரீபெரும்பத்தூரில் L&T நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டேட்டா செண்டர் எனும் தரவுகள் மையம் விரைவில் செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை டேட்டா செண்டர் மையமாக உருவாகி வருவதன் அடையாளமாக கருதப்படுகிறது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்பத்தூரில் L&T நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டேட்டா செண்டர் எனும் தரவுகள் மையம் விரைவில் செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் டேட்டா செண்டர் மையமாக உருவாகி வருவதன் அடையாளமாக இது கருதப்படுகிறது. அதோடு, இந்தியாவின் இரண்டாவது பெரிய டேட்டா செண்டர் மையமாக சென்னை அமையும் எனக் கருதப்படுகிறது.
டேட்டா செண்டர் என்றால் என்ன?
இணையம் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் தரவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தரவுகளை சேமித்து வைப்பதும், கையாள்வதும் இன்றியமைதாதாகிறது. இவை பெரும்பாலும் டேட்டா செண்டர்கள் எனும் தரவுகள் மையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. கிளவுட் சேவை வழங்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவைகளிலும், இந்த மையங்கள் அடிப்படை வசதியாக இருக்கின்றன.
எனவே, டேட்டா செண்டர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் இதற்கான தேவை மேலும் பலமடங்கு பெருகும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், சென்னை அருகே ஸ்ரீபெரும்பத்தூரில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.2000 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள டேட்டா செண்டர் பரிசோதனை கட்டம் முடிந்து விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 மெகாவாட் திறன் கொண்ட இந்த மையம், வெகு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவை 30 மெகாவாட்டாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எல் அண்டு டி நிறுவனம் சென்னை அருகே டேட்டா செண்டர் அமைக்க 2021 ம் ஆண்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி, 90 மெகாவாட் கொண்ட மையம் ஒவ்வொரு கட்டமாக அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. இந்த மையத்திற்கு மாநில அரசு இடைவெளி இல்லாத மின்வசதி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
சென்னை அருகே ஏற்கனவே, அதானி, ஏர்டெல் மற்றும் எஸ்டிடி குலோபல் நிறுவனங்களின் டேட்டா செண்டர்கள் அமைந்துள்ளன. தற்போது எல் அண்டி டி மையமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
சென்னை டேட்டா செண்டர் மையமாக உருவாகி வருவதன் அடையாளமாக இது கருதப்படுகிறது. நாட்டின் இரண்டாவது பெரிய டேட்டா செண்டர் மையமாக சென்னை அமையும் என கருதப்படுகிறது.
ஏற்கனவே சென்னை ஆட்டோமொபைல் மையமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், டேட்டா செண்டர்களுக்கும் ஏற்ற இடமாக அமைந்துள்ளது.
சென்னை ஐடி உள்கட்டமைப்பை கொண்டுள்ளது, திறன்மிக்க ஊழியர்களை பெற்றுள்ளது சாதகமான அம்சங்களாக கருதப்படுகிறது. மேலும், சென்னையின் அமைவிடமும் முக்கிய அம்சமாகிறது. மாநில அரசும் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
Edited by Induja Raghunathan