சென்னை Ford தொழிற்சாலையின் கடைசி கார் இது: இன்றுடன் பிரியாவிடை!
ஃபோர்டு இந்தியா நிறுவனம் சென்னை தொழிற்சாலையில் இருந்து கடைசியாக உற்பத்தி செய்யப்பட்ட ஈக்கோஸ்போர்ட் காரை பிரியா விடை கொடுத்து அனுப்பியுள்ளது.
Ford இந்தியா நிறுவனம் சென்னை தொழிற்சாலையில் இருந்து கடைசியாக உற்பத்தி செய்யப்பட்ட ஈக்கோஸ்போர்ட் (Eco-sport) காரை பிரியா விடை கொடுத்து அனுப்பியுள்ளது.
இந்தியாவின் ஆட்டோமொபைல்ஸ் வரலாற்றில் 20 ஆண்டுகளாக சரித்திரத்தைக் கொண்ட ஃபோர்டு நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு 1999ம் ஆண்டு தனது முதல் ஆலையை இந்தியாவில் நிறுவியது. குஜராத் மற்றும் சென்னை என இந்தியாவில் இரண்டு இடங்களில் ஆலைகளை நிறுவியது.
2019ம் ஆண்டு வரை இந்தியாவில் கொடிகட்டி பறந்து வந்த விற்பனை, கொரோனா பெருந்தோற்றிற்கு பிறகு சரிய ஆரம்பித்தது. அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் Sanand பகுதியில் செயல்பட்டு வந்த ஆலையை அந்நிறுவனம் மூடியது. அப்பொழுது கடைசி காராக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரை தயாரித்து அனுப்பி அந்த ஆலையை மூடியது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், அதன் அறிமுகத்தில், இந்திய ஆட்டோமொபைல் துறையில் புயலைக் கிளப்பியது. 2012ல் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் தோற்றத்திற்காக மிகுந்த வரவேற்பைப் பெற்றதை அடுத்து, ஜூன் 26, 2013 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஃபோர்டு அதை ₹5.59 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தி, ஆட்டோமொபைல் சந்தைகளையும், Ford இந்தியாவின் வரிசையில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்நிலையில், தற்போது சென்னையில் இருந்த கார் உற்பத்தி ஆலையையும் ஃபோர்டு நிறுவனம் மூடியுள்ளது. இந்நிறுவனத்தையும் கடந்த ஆண்டே மூட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு தொழிற்சங்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சென்னையில் உள்ள பெரிய கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையை மட்டும் அதன் வெளிநாட்டு உற்பத்திக்கு பயன்படுத்திவந்தது.
தற்போது போர்ட் நிறுவனம் அதனையும் முடிவிற்கு கொண்டுவந்துள்ளது. சென்னை தொழிற்சாலையை EcoSport, Endeavor போன்ற பெரிய கார்களை தயாரித்து வந்தது.
இந்த நிறுவனத்தின் கடைசி காராக ஃபோர்ட் நிறுவனத்தின் பிரபல SUV காரான EcoSport உற்பத்தி செய்யப்பட்டது. மாலை மரியாதையுடன் தங்கள் நிறுவனத்தின் கடைசி காரை ஃபோர்டு ஊழியர்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்து அனுப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஃபோர்டு இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
“B515 ஏற்றுமதி வாகன உற்பத்தியை முடிக்க அனைத்து ஊழியர்களும் அளித்த ஆதரவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். FCSD உதிரிபாகங்கள் தயாரிப்பை ஆதரிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை நாங்கள் தொடர்ந்து கொண்டிருப்போம். அதன்பிறகு, ஆலையை மூடுவதற்கு தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்கும்,” என்றார்.
இம்மாதம் 31ம் தேதியோடு சென்னையில் உள்ள ஃபோர்டு ஆலை மூடப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவை விட்டே ஃபோர்டு நிறுவனம் முழுமையாக வெளியேறுவது உறுதியாகியுள்ளது.