செஸ் விளையாட்டில் சாதனை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு 'அர்ஜூனா விருது'
செஸ் விளையாட்டில் உலக அளவில் பிரப்பிக்க வைக்கும் சாதனைகளைப் படைத்த 19 வயது சிறுவனான பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் விளையாட்டில் உலக அளவில் பிரப்மிக்க வைக்கும் சாதனைகளைப் படைத்த 19 வயது சிறுவனான பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதிலேயே செஸ் விளையாட ஆரம்பித்து 7 வயதில் உலக சாமியன்ஷிப் பட்டம், 10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர், 12 வயதில் இளைய கிராண்ட்மாஸ்டர், 14 வயதில் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் என பட்டங்களை குவித்து வரும் பிரக்ஞானந்தா தற்போது அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த பிரக்ஞானந்தா?
பிரக்ஞானந்தா, 2005ம் ஆண்டு சென்னை பாடியில் வசித்து வரும் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டவர், இவரது மனைவி நாகலட்சுமி. கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் ரமேஷ்பாபுவின் ஒற்றை வருமானத்தை வைத்தே குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி செஸ் பயிற்சி பெற்று 14 வயதுக்குக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார்.
5 வயதில் போட்டிகளில் களமிறங்கி, தனது ஏழாவது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வசப்படுத்தியுள்ளார். அபிமன்யு மிஸ்ரா, செர்ஜி கர்ஜாகின், குகேஷ் டி, ஜாவோகிர் சிந்தாரோவ் ஆகிய இளம் செஸ் வீரர்கள் கொண்ட பட்டியலில் தனது பெயரையும் பதித்துள்ளார்.
இளம் கிராண்ட்மாஸ்டர்:
கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ’ஏர்திங்ஸ் மாஸ்டர்’ போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதிய 16 வயதான பிரக்ஞானந்தா, வெறும் 39 நகர்வுகளில் வெற்றி பெற்றார். தொடக்கம் முதலே கருப்பு காய்களை திறம்பட கையாண்ட பிரக்ஞானந்தா, உலக செஸ் சாம்பியனையே தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். இதன்மூலம், உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய முதல் இந்திய இளம் வீரர் என்கிற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.
தற்போது விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரக்ஞானந்தாவிற்கு ’அர்ஜுனா விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருது:
மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தேசிய அளவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜூனா விருதுக்கு, கடந்த 7ம் தேதி தமிழ்நாட்டை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி, நாட்டின் மிகவும் உயரிய விருதான அர்ஜுனா விருது 25 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த செயல் திறனுக்கான அர்ஜுனா விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோர் பெற உள்ளனர்.
இதனையடுத்து, பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.