Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம்: முக்கியத் துறைகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் என்ன?

சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம்: முக்கியத் துறைகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் என்ன?

Wednesday May 24, 2023 , 2 min Read

சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.

முதற்கட்டமாக சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

சிங்கப்பூர் அமைச்சருடன் சந்திப்பு:

இன்று சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை செய்யக் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது சிங்கப்பூர், தமிழ்நாடு இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்தும், புதிய தொழில் முதலீடுகளை செய்ய தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

CM

குறிப்பாக தமிழகத்தில் வளர்ந்து வரும் துறைகளான செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள், டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரத்தில் முதலீடு செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பிரதிநிதிகளை அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் Fintech மாநாட்டிற்கு அனுப்பி வைக்கவும் சிங்கப்பூர் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

சிங்கப்பூரில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்ததன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

CM
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

  • தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

  • தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

  • சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office - SIPO) மற்றும் தமிழ்நாட்டின் FameTN மற்றும் Startup TN நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

  • சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office - SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

  • தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.