கொரோனா எதிர்ப்பு பாதுகாப்பு பொருட்களை தயாரிக்கும் கோவை நிறுவனம் ‘மை’
MY நிறுவனம் யூவி பேக்கெட் சானிடைசர், யூவி சேப் டேபிள்டாப் சானிடைசர், வைரஸ் தடுப்பு முகக்கவசத்தை அறிமுகம் செய்தது.
தற்போதைய சூழலில் தரமான தனிப்பட்ட பாதுகாப்புத் தேவையானது அன்றாட மனித வாழ்க்கை முறையின் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கோவையைச் சேர்ந்த கவின் குமார் கந்தசாமி மற்றும் ராஜா பழனிசாமி ஆகிய இரு இளம் தொழில்முனைவோர் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்களை தயாரிக்க ‘மை’ என்னும் நிறுவனத்தை துவக்கி உள்ளனர்.
சிறந்த டிசைன் மற்றும் உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதோடு இந்நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அனைத்து பாதுகாப்பு பொருட்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுபவையாகும்.
மேலும் அவை புதுமை, சிறந்த வடிவமைப்பு மற்றும் நிலைத்தன்மையை கொண்டிருக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த புதிய நிறுவனம் 6வது ஐ.நா. சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குனரும், ஐக்கிய நாடுகள் சபைதுணை பொதுச்செயலாளருமான எரிக் சோல்ஹெய்ம் மற்றும் யூதிங்க் சர்வதேச அறக்கட்டளை நிறுவனர் அப்துல் கனி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
துவக்க விழாவின் ஒரு பகுதியாக, இந்நிறுவனம் இந்தியாவில் தயாரித்த தனது புதிய யூவி பேக்கெட் சானிடைசர் மற்றும் யூவி சேப் டேபிள்டாப் சானிடைசர் மற்றும் வைரஸ் தடுப்பு முகக்கவசம், கழுத்தில் அணியும் ஸ்கார்ப் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.
இந்த தயாரிப்புகள் கோவிட் – 19 தொற்று மற்றும் எதிர்காலத்தில் உலகளாவிய சுகாதார நெருக்கடியின்போது இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் இந்தியாவின் உள்நாட்டு வினியோகசந்தைகளை மேம்படுத்துவதிலும்முக்கிய பங்கு வகிக்கும்.
துவக்க விழாவில், ‘My' ‘மை’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான கவின் குமார் கந்தசாமி பேசுகையில், நம் அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த வடிவமைப்புடன் கூடிய இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ‘மை’ என்னும் பிராண்டில் பாதுகாப்புப் பொருட்களை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
”எதிர்காலத்தில் சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் விதமாக நாம் உலக நாடுகளை நம்பியிருக்காமல், எதிர்கால சுகாதார அச்சுறுத்தல்களை நாமே எதிர்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் நாங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளோம். எங்கள் நிறுவனம் இந்தியாவைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கை முறை பாதுகாப்பில் உலக அளவில் சிறந்த நிறுவனமாக வளரும்,” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் துணை நிறுவனரும் வர்த்தக செயல்பாட்டு தலைமை அதிகாரியுமான ராஜா பழனிசாமி கூறுகையில், கடந்த சில மாதங்களாக, முன் எப்போதும் இல்லாத உலகளாவிய தொற்றுநோயின் போது மக்கள் எதிர்கொள்ளும் தரமான பாதுகாப்பு தயாரிப்புகளின் பற்றாக்குறை குறித்து நாங்கள் மிகவும் அக்கறையுடன் கவனம் செலுத்தினோம்.
அனைத்து தரப்பிலிருந்தும் மக்களை பாதுகாக்க தினந்தோறும் வாழ்க்கை முறைக்கு தேவையான புதிய பொருட்களை கண்டுபிடிக்கும் மற்றும் அதை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினோம்.
”இந்தியர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், நல்ல சம்பளம் தரும் வேலைகளை உருவாக்கவும், ‘மேட் இன் இந்தியா’ திட்ட புரட்சியின் தொடக்கமாக இருப்பதற்கும் நாங்கள் இந்த நிறுவனத்தை துவக்கி உள்ளோம். ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு மற்றும் கர்னாடகாவில் உள்ள எங்களின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் தலைமையை வலுப்படுத்த நாங்கள் நீண்டகாலமாக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். எங்களால் பலருக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
இந்த பிராண்டிற்கான நல்லெண்ண தூதரும் யூத் கிங்க் சர்வதேச அறக்கட்டளை நிறுவனருமான அப்துல் கனி பேசுகையில், கோவிட் -19 உலகளாவிய தொற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்விதமாக உண்மையிலேயே ஊக்கமளிக்கும் தயாரிப்புகளை ‘மை’ குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
”இந்நிறுவனத்தின் ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் தயாரிக்கப்படும் பாதுகாப்புப் பொருட்களானது ஒரு சிறந்த முன்முயற்சியாகும். இவை இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கே உதவிடும் வகையில் இருக்கும். இவை மீட்டெடுக்கவும் மீண்டும் திறக்கவும் வழிவகை செய்யும்,” என்று தெரிவித்தார்.
இதன் உற்பத்தி ஆலைகள் கோவை, திருப்பூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ளது. இங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். எதிர்காலத்தில் இதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொள்ளும்.
மேலும் விவரங்களுக்கு www.myprotection.in என்ற வலைதளத்தை பார்க்கவும்