Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கொரோனா வார்ட் நர்சுடன் நெகிழ்ச்சி உரையாடல் நடத்திய மலையாள நடிகர் மம்மூட்டி!

நடிகர் மம்மூட்டி கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஷீனா உடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் தொகுப்பு!

கொரோனா வார்ட் நர்சுடன் நெகிழ்ச்சி உரையாடல் நடத்திய மலையாள நடிகர் மம்மூட்டி!

Saturday April 18, 2020 , 5 min Read

கொரோனா சீனாவில் தொடங்கியபோது அது எங்கோ இருக்கும் அபாயம் என்றே நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். அதன்பின் நம் அண்டை மாநிலமான கேரளாவில் முதலில் வந்தபோது சற்று எச்சரிக்கையானோம். அப்படியும் கேரளா தனி ஒரு மாநிலமாக கொரோனாவை மனதிடத்தோடு எதிர்த்தது அம்மாநிலத்துக்கு பாராட்டுக்களைத் தேடித் தந்தது.


கேரளாவில் கொரோனா சமயத்தில் வெளிவந்த பல கதைகள் நாட்டு மக்களைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அப்படி ஒரு நிகழ்வு அண்மையில் நடந்தது. அது மலையாளா சூப்பர்ஸ்டார் மம்மூட்டிக்கும் கோடிக்கோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஷீனாவுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்.

mamooty

இந்த நெகிழ்ச்சியான உரையாடலை நீங்கள்  அனைவரும் கண்டிப்பாகக் கேட்க வேண்டிய பதிவு. உரையாடலின் மொழியாக்கம் இதோ:


மம்முட்டி : வணக்கம் ஷீனா மேடம்.

ஷீனா: வணக்கம், மம்முக்கா சந்தோசம்...


மம்: எவ்வளவு ஆட்கள் அங்கே சிகிச்சையில் உள்ளார்கள்?

ஷீனா: இங்கு முதலமைச்சர் சொன்ன அளவில் நோயாளிகள் உள்ளனர் அல்லாமல் 20 பேர் சராசரியாக மாதிரி பரிசோதனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.


மம் : சரி சரி

ஷீனா: பரிசோதனை முடிவுகளில் தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்க படுகிறார்கள்.

மம் : சரி சரி

ஷீனா: பரிசோதனையின் போதும் நாங்கள் பிரத்யேக உடையை அணிந்து கொள்கிறோம்.


மம் : கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளது?

ஷீனா: அனைத்தும் அரசுத் தரப்பில் மிகச் சிறப்பாக செய்து தரப் பட்டுள்ளது.

மம் : ஒரு பரிசோதனை முடிவுகள் வர எவ்வளவு நாட்கள் தேவைப்படுகிறது?

ஷீனா: பரிசோதனைக் கூடத்தில் 2 முதல் 3 ஆய்வாளர்கள் வரை வேலை செயகிறார்கள் எனினும் கூட்ட மிகுதியால் 2 நாட்களில் முடிவுகள் கிடைக்கிறது.


மம் : பிரத்யேக உடையை அணிவது எப்படி உள்ளது?

ஷீனா: மிகவும் கடினமாக உள்ளது, மூன்று அடுக்குகளில் இந்த உடையை அணிகிறோம். குறைந்த பட்சம் 6 மணிநேரம் அணிந்திருக்க வேண்டும்.


மம் : உங்களுக்குள்ளேயே மற்றவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வீர்கள் அது கடினமாக இருக்காதா ?

ஷீனா: அதற்காக நாங்கள் அந்த உடையின் மீது அடையாளத் தாள்களை ஒட்டுகிறோம். அத் தாள்கள் மருத்துவர், செவிலியர் மற்றும் ஆய்வக பணியாளர் என வகைப் படுத்தப் பட்டிருக்குமே தவிர யார், யார் என தெரிந்து கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவு. ஏதோ வேற்று கிரகத்தில் இருப்பதை போல் தோன்றும்.


மம்: அது மிகவும் அற்புதமான விஷயம் தான்.

ஷீனா: ஆம், ஆனால் அந்த உடை அணிந்த பின்பு நீர் அருந்தவோ அல்லது கழிவறைக்கு செல்லவோ இயலாது.


மம் : வேலை நேரம் முழுவதும் இப்படியே தானா?

ஷீனா: ஆம், ஆனால் தினமும் மற்ற நாட்களில் என்னென்ன பணிகளை செயகிறோமோ அதைத் தான் இந்த உடை அணிந்து செய்ய வேண்டியுள்ளது.

மம் : சரி சரி

ஷீனா: இதில் மிகவும் கடினமான விஷயம் இந்த உடையை துப்புரவு பணியாளர்கள் அணிந்து அவர்களின் வேலையை செய்வது தான், காரணம் நோயாளிகளின் திட மற்றும் உணவுக் கழிவுகளை அவர்கள் தனித்தனியே அப்புறப் படுத்த வேண்டும். அவர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்தல் மற்றும் சேகரித்தல் ஆகியவற்றிற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் வியர்வை ஒழுக இந்த வேலைகளை அந்த உடை அணிந்து கொண்டு செய்வது தான் மிகவும் கடினம். இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மிகக் கவனமாக அதைச் செய்கிறார்கள். சில நோயாளிகள் எங்களிடமே கூறுகிறார்கள் நீங்கள் எவ்வளவு வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனாலும் இந்த உடையின் உள்ளே உள்ள நிலைமை அது அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அவ்வளவு கடினமான விஷயம் தான் அது.

மம்: இத்தனை துயரங்களை வெளியில் சுற்றித் திரிபவர்கள் யோசிக்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.

ஷீனா: சூழ்நிலை காரணமாக தொற்று வந்தாலும் இது தெரிந்தும் வெளியில் சுற்றித் திரிபவர்கள் ஏராளம். 

மம்: ஆம், புத்தாண்டு கூட எளிய முறையில் கொண்டாடலாம் என்றில்லாமல் ஏராளமான மக்கள் வெளியில் சுற்றித் திரிவது தான் வருத்தமளிக்கிறது. லட்சக் கணக்கான ஆட்கள் மடிந்து போகிறார்கள் என்பது தெரிந்தும் தெரியாதது போல் நடக்கிறார்கள். நமக்கு வராது என்று நினைக்கக் கூடாது, நமக்கும் வரும். உங்களின் இத்தகைய கஷ்டத்தையும், நோய்த் தொற்று உள்ளவர்களின் துயரங்களையும் பார்த்தாவது இவர்கள் திருந்த வேண்டும். 


ஷீனா: இது மாதிரியான தருணங்களில் தங்களைப் போன்ற மனிதர்களின் வார்த்தைகள் தான் அவர்களை நல்வழிப்படுத்தும் .

மம்: ஆம், நீங்கள் இப்போது என்னிடம் பேசியதை அவர்கள் கேட்டாலே போதும். 

ஷீனா: கண்டிப்பாக, கேட்க வேண்டும். தற்போது பல ஆட்களும் நோய்த் தொற்று குறைந்து தினமும் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் வயதானவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம், ஏனெனில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களை அது மிகவும் கஷ்டப்படுத்தும். 


மம்: நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்களுக்கும் இது ஆபத்தானது தான். 

ஷீனா: ஆம், அது மக்கள் தெரிந்து கொண்டால் மிகவும் நல்லது, அப்படி நடந்து கொண்டால் நோய்த் தொற்று சதவிகிதம் மிகவும் குறையும். அது அரசுக்கும், அதிகாரிகளுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். 

மம்: ஆம், தற்போது நாம் இதை தெரிந்து கொண்டுள்ளோம், அதன் பலன்களை கண்கூடாய்ப் பார்க்கிறோம், 

ஷீனா: ஆம், கேரளத்தில் இது மிக அதிக பலன்களை தந்துள்ளது அதனால் தான் நோய்த் தொற்று சதவிகிதம் மிகவும் குறைந்துள்ளது என்ற மகிழ்ச்சியை எங்களால் அனுபவிக்க முடிகிறது. ஆனால் மற்ற இடங்களைப் பார்க்கும்போது இந்த மகிழ்ச்சியை எங்களால் கொண்டாட இயலவில்லை. 


மம்: மகிழ்ச்சி தான், ஆனாலும் அதை தற்போது கொண்டாட இயலாது. நோய்த் தொற்று இருக்கும் அனைவரும் குணமடையட்டும் அதன் பிறகு எல்லா விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடலாம் என்று விரும்புவன் தான் நான். இல்லையேல் இந்த நாடு மற்றும் உலகம் என்னாவது?, ஆகவே அனைவரும் வீட்டில் தனித்திருப்பதே சிறந்தது.

ஷீனா: ஆம், சார். தயவு செய்து எங்களுக்காக இந்த வார்த்தைகளைக் கூட மக்களுக்கு தெரியப் படுத்துங்கள். 

மருத்துவர்கள், செவியிலியர்கள், பரிசோதனை கூட ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இவர்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பிரதிநிதியாகக் கூறுகிறேன் நாங்கள் இங்கு இரவு பகல் பாராமல் பணிபுரியும் அனைவரும் வீட்டிற்கு போகாமல் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேல் இங்கேயே இருக்கிறோம். குழந்தை, சொந்த பந்தங்களை விட்டு நிற்கிறோம். எங்கள் வீட்டு உறுப்பினர்களும் ஒரு விதத்தில் பாதிக்கப் பட வாய்ப்புள்ளது. 

மம்: ஆம், அவர்களும் ஒரு விதத்தில் நிச்சயமாக தியாகிகள் தான்.

ஷீனா: ஆம், எங்களைப் போன்ற செவிலியர்கள் அதிகப் பட்சம் இளம் வயது பெண்கள் தான், ஐந்து வயது வரையிலான குழைந்தைகளே அநேகம். அம்மாவுக்காக அழும் அவர்கள் மற்றும் அவர்களை நினைத்து அழும் என்னுடன் பணிபுரிவோர் இவர்களை பார்த்தும் பார்க்காதது போல் நடித்து தான் தினமும் நாட்கள் நகர்கின்றன. 

இதையெல்லாம் மனதில் கொண்டு நாட்டு மக்கள் எங்களுடன் சகோதரத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன், நாம் பல செய்திகளை பெண்களுக்கு எதிராக வன் கொடுமைகளை எல்லாம் கேட்டிருக்கிறோம், இனி இவையெல்லாம் நடை பெறா வண்ணம் பார்த்துக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இச் செய்தியை தங்கள் மூலமாக மற்றவர்க்ளுக்கு தெரியப் படுத்தினால் நன்று. 

மம்: இந்த உரையாடலை அனைவரும் கேட்டாலே புரிந்து கொள்வார்கள், அதற்கு மேல் நான் ஏதும் சொல்லத் தேவையில்லை. நீங்கள் மிகவும் உற்சாகமாக உங்கள் வேலையை செய்யுங்கள். 

ஷீனா: நாங்கள் மிகவும் உற்சாகமாக தான் வேலை செய்கிறோம். இதற்கு முன் வந்த நிப்பா வைரஸ் மூலம் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம் அது இப்போது உதவியாக இருக்கிறது இப்போது அரசு பல வகைகளிலும் எங்களுக்கு உதவுகிறது பல தரப் பட்ட பயிற்சி வகுப்புகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது, நானும் மாநிலஅளவில் ஒரு பயிற்சி மேலாளர் தான், அவசர காலங்களில் எங்கனம் செயல்பட வேண்டும் என்பது அனைவருக்கும் அறிவுறுத்தப்படுள்ளது.


நோயாளிகள் மற்றும் பணிபுரியும் அனைவருக்கும் தேவையான உணவுகள் சரிவர கிடைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்து சமயங்களில் அவை அனைவருக்கும் தரப்படுகிறது, ஆனாலும் சில நோயாளிகள் கஞ்சி மற்றும் கூழ் கேட்டால் அதையும் நாங்கள் தயாரித்துக் கொடுக்கிறோம். தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள் தேவையான உதவிகள் அனைத்தையும் தக்க சமயங்களில் உதவுகிறார்கள். சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது நாங்கள் ஒரு பாதுகாப்பு வளையத்தினுள் தான் இருக்கிறோம், எங்களுக்குள் ஒரு அன்பு பகிர்மானத்தில் தான் எங்கள் வேலைகள் நடை பெறுகிறது. 


மம்: மிக்க நன்று, தேவதைகள் என சொல்லக் கேட்டிருப்போம் அது உண்மை தான் அவர்கள் வேறு யாருமல்ல நீங்கள் தான். 

ஷீனா: நன்றி சார், சில தனியார் மருத்துவமனை செவிலியர்களும் சம்பளம் இல்லாமல் தான் வேலை செயகிறார்கள், அவர்களுக்குத் தகுந்த ஊதியம் கிடைத்தால் இந்த ஒரு அவசர காலகட்டத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும். முன்தினம் இதைப் பற்றி மாண்புமிகு அமைச்சர் மொய்தீன் அவர்கள் பேசி உள்ளார்கள், அது நடந்தால் மிக நன்றாக இருக்கும். 

மம்: ஆம், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. 

ஷீனா: மகிழ்ச்சி, இவ்வளவு நேரம் என்னுடன் பொறுமையாக பேசியதற்கு மிக்க நன்றி.

மம்: சந்தோசம், கடவுள் எப்போதும் உங்கள் கூட இருப்பார்.

ஷீனா: நன்றி.. 


முடிவுரையாக மம்மூட்டி மக்களுக்காகப் பேசியது: 

அனைவரும் இந்த உரையாடலை கேட்டிருப்பீர்கள் நமக்காக வேலை செய்யும் இவர்களை என்றும் போற்றுங்கள், நாளை என்றில்லாமல் இன்றே அனைவரும் மனதால் அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள், வாழ்த்துங்கள். நன்றி.