பதிப்புகளில்
சாதனை அரசிகள்

சாதி, பாலின வேற்றுமையால் பாதிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த விவசாயி மகள் ஐஏஎஸ் அதிகாரி ஆன கதை!

YS TEAM TAMIL
15th Mar 2019
170+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

சாதி மற்றும் பாலின சமத்துவமின்மை நம்மை ஒரு கட்டத்தில் சலிப்படையச் செய்கிறது. வாழ்கையில் முன்னேர அதுவே பலருக்கு தடையாக அமைகிறது, ஆனால் இந்த சமத்துவமின்மையே கரூரைச் சேர்ந்த பூவிதாவிற்கு உந்துதலாக அமைந்து இன்று ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மாற்றியுள்ளது.

2015 இல் யூனியன் பொதுச் சேவை தேர்வு எழுதி இந்தியாவில் 175வது இடம்பிடித்து இன்று ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளவர் பூவிதா.

கரூர் மாவட்டத்தில் ஓர் விவசாயின் மகள் பூவிதா சுப்பிரமணியன், சிறு வயதில் இருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை சுமந்து வளர்ந்துள்ளார். பள்ளி ஃபான்சி டிரஸ் போட்டிக்கு கூட ஐஏஎஸ் போன்றே வேடம் போடும் அளவிற்கு இப்பதவி மீது ஓர் ஈர்பிருந்துள்ளது பூவிதாவிற்கு. சிறு வயதில் தோன்றக் கூடிய ஆசை தான் நாளடைவில் மாறிவிடும் என நினைத்த இவரது பெற்றோர் இன்று தன் கனவை நனவாக்கியதைக் கண்டு பெருமைப்படுகின்றனர்.

பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் பூவிதா, தனது சிறு வயது முதலே சாதி பாகுபாடு, பாலின சமத்துவமின்மை, வரதட்சணைக் கொடுமை ஆகியவற்றை பார்த்து அனுபவித்து வளர்ந்தவர் இவர். அதாவது தன் தாய் கூட வரதட்சணையால் பாதிக்கப்பட்டத்தை பார்த்து வளர்ந்தவர். மேலும் மேல் ஜாதி குழந்தைகள் கூட பெரியவர்கள் பின் தங்கிய சமூகத்தினர் என்றால் மரியாதை இன்றி பெயர் சொல்லி அழைக்கும் சூழலில் வளர்ந்துள்ளார். இவை அனைத்துமே பூவிதாவிற்கு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் பெட்டெர் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்,

“என் சொந்த ஊர் சுற்றிலும் சாதி அமைப்பு மிகவும் கடுமையாக இருந்தது. உயர் ஜாதி விவசாய நிலங்களில் உழைக்க மற்றும் அவர்களது பயிர்களை பேண மற்ற ஜாதியினரை பயன்படுத்திக் கொண்ட  அதே சமூகம் மற்ற சூழலில் முழுமையான இகழ்வுடனும், தீண்டத்தகாதவர்கள் போலும் நடத்தியது..” என்கிறார்.

அதுமட்டுமின்றி கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்ட சாதிகளின் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறியபோது உள்ளூர் மக்கள் கவலையடைந்தனர் என வருத்தத்துடன் தெரிவிக்கிறார் பூவிதா.

இந்தச் சூழல் இருப்பினும் பூவிதாவின் பெற்றோர் அவரது கல்விக்கு எப்பொழுதும் தடை விதித்ததில்லை. இருந்தாலும் பூவிதாவின் கிராமத்தை பொறுத்தவரை பெண்களின் பட்டப்படிப்பின் முக்கியத்துவம் கல்யாணப் பத்திரிக்கையில் அடிப்பதற்கு மட்டுமே தவிரே தொழில் வளர்ச்சிக்கு அல்ல.

ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு அரசாங்க அதிகாரிகள் சமூகத்தில் மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்று எழுதிய எழுத்துக்கள் பூவிதாவை கவர்ந்துள்ளது. சமூக மாற்றத்தை ஏற்படுத்த ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று 12 ஆம் வகுப்பிற்கு பிறகு பிஏ வரலாறு படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் தொழில் ரீதியாக வளர்ச்சி இருக்காது என பிடெக் படிப்பை தனது பெற்றோர்களுக்காக படித்து குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆனார் இவர்.

கல்லூரி முடிந்தப்பின் தன் கனவை நிறைவேற்ற நினைத்தார் இவர், ஆனால் குடும்பத்தின் நிதிநிலை சரியில்லாததால் பணிக்கு அமர்ந்தார்.

“பணியில் இருந்தபோது கூட ஐஏஎஸ் கனவை விடவில்லை. 3 ஆண்டு கழித்து நான் ஐஏஎஸ் தேர்வு எழுத விரும்புவதாக என் பெற்றோர்களிடம் கூறினேன். நெருங்கிய உறவினர்கள் பெண் பிள்ளைக்கு இதற்ககு மேல் படிப்பிற்கு செலவு செய்ய வேண்டாம் திருமணம் செய்து வையுங்கள் என வலியுரித்தினர்.”

மகள் வேறு ஜாதியினரை திருமணம் செய்து கொள்வார் எனவும் பூவிதாவின் பெற்றோரிடம் பலர் கூறியுள்ளனர். பெண் என்றால் திருமணம் செய்து குடும்பத்தை நடத்துவதற்கு மட்டுமின்றி என தன் சமூகத்திற்கும் உறவினர்களுக்கும் உணர்த்த வேண்டும் என முடிவு செய்தார் பூவிதா.

“என் அம்மா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் என் தந்தையை திருமணம் செய்து கொள்ளும்போது பல சிரமங்களை சந்தித்தார். அதற்கு அவர் தான் காரணம் என்று இன்றும் என் அம்மா நினைக்கிறார். அவருக்கு எது உரிமை என்று இன்றும் தெரியவில்லை.”

இதனால் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரி பொறுப்பில் இருக்க வேண்டும் என்று ஒரு வருடம் தேர்வுக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார் பூவிதா. முதல் தடவை குடும்ப அழுத்தத்தினால் தோல்வியை தழுவினார், இரண்டாம் முறை ஐஆர்பிஎஸ் க்கு தேர்ச்சிப் பெற்றார்; ஆனால் பூவிதாவின் மனம் ஐஏஎஸ்–ஐ நோக்கி இருந்ததால் மூன்றாம் முறை எழுதி வெற்றிப் பெற்று கர்நாடக உடுப்பி மாநிலத்தில் பயிற்சிப் பெற்று இன்று அங்கேயே துணை மாவட்டஅதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

“பல காரணங்கள் உங்களை முன்னேற விடாமல் தடுக்கும், வீழ்ந்துவிடாமல் முயற்சி செய்யுங்கள், ஒரு முறை தோற்றால் இரண்டாம் முறை இன்னும் கடின உழைப்பைக் கொடுங்கள். நம்பிக்கையை மட்டும் என்றும் இழக்காதீர்,” என முடிகிறார்.

கட்டுரையார்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: தி பெட்டர் இந்தியா

170+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags