யூடியூபில் ரூ.185 கோடி வருமானம்: Forbes பட்டியலில் முதலிடம் பிடித்த 8 வயது சிறுவன்!

2019ல் யூடியூபில் அதிகம் சம்பாதித்த அமெரிக்கச் சிறுவன் ரியானின் சேனல் எதைப் பற்றியது? எப்படி அவ்வளவு பணம் சம்பாதித்தான் தெரியுமா?

17th Jan 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஆண்டுதோறும் உலகளவில் அதிக வருமானம் ஈட்டும் நபர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அதில், யூடியூப் மூலமாக அதிகளவு வருமானம் ஈட்டுபவர்களின் பட்டியலும் அடக்கம்.


அந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் ரியான் காஜி கடந்தாண்டு முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளான். தனது யூடியூப் சேனல் மூலமாக கடந்தாண்டு ரியான் 26 மில்லியன் சம்பாதித்துள்ளான். இந்திய மதிப்பில் அது ரூ.185 கோடி ஆகும்.

Ryan

ஏற்கனவே நாம் ரியானைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஏனென்றால் அந்த ஆண்டும் 22 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டி இந்தப் பட்டியலில் ரியான் தான் முதலிடம் பிடித்திருந்தார்.


தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அந்தப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரியான். முந்தைய ஆண்டுகளை விட கடந்தாண்டு அவரது வருமானம் மேலும் அதிகரித்துள்ளது.


2015ம் ஆண்டு ரியானின் பெற்றோரால் இந்த யூடியூப் சேனல் துவங்கப்பட்டது. ’ரியான்ஸ் டாய்ஸ் ரிவியூ’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சேனல், பின்னர் ’ரியான்ஸ் வேர்ல்டு’ (Ryan's World) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதில் சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகள் பற்றி விளையாடிக் கொண்டே ரியான் விமர்சிக்கும் விடீயோக்களை பதிவு செய்து வெளியிட்டனர்.

குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களையும் கவரும் படியாக இருந்தது ரியானின் விமர்சனம். இதனால் படிப்படியாக உயர்ந்து தற்போது இந்த சேனலுக்கு 2 கோடி 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். ரியானுடைய பல வீடீயோக்களை 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

ஒருகட்டத்தில் ரியானின் வீடியோக்களுக்கு வரவேற்பு அதிகரிக்கவே, வீடியோவில் அறிமுகப்படுத்தப்படும் பொம்மைகளுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர் அளிக்க ஆரம்பித்தது. ஆனால் வீடியோவில் அதற்கான தகவலை ரியானோ அல்லது அவனது பெற்றோரோ சரிவரக் குறிப்பிடவில்லை. இதனால் இந்தப் பிரச்சினை நுகர்வோர் அமைப்பான "ட்ரூத் இன் அட்வர்டைசிங்", அமெரிக்காவின் பெடரல் டிரேட் கமிஷனுக்கு புகாராக அளித்தது.


இதனால் ரியானின் யூடியூப் சேனல் பிரச்சினையில் சிக்கியது. பின்னர் அந்த சேனலின் பெயரை மீண்டும் மாற்றி ’ரியான் ஏஜஸ்’ என வைத்தனர். அதில் தற்போது உயர் கல்விக்கான வீடியோக்களை ரியான் வழங்கி வருகிறான். சிறிய அளவிலான அறிவியல் பரிசோதனைகளைச் செய்து அந்த வீடியோக்களை ரியான் தனது சேனலில் வெளியிட்டு வருகிறான். தொடர்ந்து அவனது சேனலைப் பார்க்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Ryan Parents

பெற்றோர்கள் மற்றும் சகோதரிகளுடன் ரியான்

டெக்ஸாசில் தனது பெற்றோர் மற்றும் இரட்டை சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் ரியான், யூடியூபில் தனது சந்தாதாரர்களுக்கு தினம் ஒரு காணொளியை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ’டியூட் பெர்பெக்ட்’ என்ற யூடியூப் சேனல் 20 மில்லயன் டாலர் வருமானத்தில் 2வது இடத்தையும், ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுமியின் சேனல் 18 மில்லியன் டாலருடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India