Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

Forbes100: 2019ல் ரஜினி, விஜய், அஜித் எவ்வளவு சம்பளத்துடன் எந்த இடத்தில் உள்ளார்கள் தெரியுமா?

ஆண்டு வருமானம், புகழ், பொழுதுபோக்கு மற்றும் முதலீடுகளின் அடிப்படையில் ஃபோர்ப்ஸ் இந்திய பிரபலங்கள் 100 பேர் கொண்ட பட்டியலை தொகுத்து வெளியிட்டுள்ளது.

Forbes100: 2019ல் ரஜினி, விஜய், அஜித் எவ்வளவு சம்பளத்துடன் எந்த இடத்தில் உள்ளார்கள் தெரியுமா?

Wednesday December 25, 2019 , 2 min Read

ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரபலங்களை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகிறது ஃபோர்ப்ஸ் நிறுவனம். அந்தவகையில் 2019ஆம் ஆண்டிற்கான இந்திய பிரபலங்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அளவில் பிரபலமான 100 பிரபலங்களில் ரஜினி, கமல், விஜய், அஜித் என தென்னிந்திய பிரபலங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.


கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையிலான வருமானத்தின் அடிப்படையில் இந்த பிரபலங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்கள் மூலம் பெற்ற புகழ், பொழுதுபோக்கு அம்சம் மற்றும் முதலீடு அடிப்படையிலும் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்திய அளவிலான பட்டியலில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் இந்தக் குறிப்பிட்டக் காலகட்டத்தில் ரூ.253 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதன்முறையாக பாலிவுட் நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி கிரிக்கெட் வீரர் ஒருவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

rajini

Image courtesy: Dinamalar

இந்தப் பட்டியலில் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகருமான அக்‌ஷய் குமாருக்கு 2ஆம் இடம் கிடைத்துள்ளது. 3ம் இடத்தில் சல்மான் கானும், 4ம் இடத்தில் அமிதாப் பச்சனும் உள்ளனர். 5ம் இடத்தை பிரபல கிரிக்கெட் வீரர் தோனி பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினி 13வது இடத்தைப் பிடித்துள்ளார். தென்னிந்திய அளவில் அவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவரது வருமானம் ரூ.100 கோடி ஆகும். ஆஸ்கர் நாயகனான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பட்டியலில் இந்திய அளவில் 16வது இடத்தையும், தென்னிந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறார். இவர் ரூ.94.8 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

முறையே மூன்றாம் இடத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன் லால் உள்ளார். இந்திய அளவில் இவரது இடம் 27 ஆகும். இந்திய அளவில் 44வது இடத்திலும், தென்னிந்திய அளவில் 4ம் இடத்திலும் பாகுபலி நாயகன் பிரபாஸ் உள்ளார்.

ரூ.30 கோடி வருமானத்துடன் விஜய் தென்னிந்தியளவில் 5ஆம் இடமும், இந்தியளவில் 47ஆம் இடமும் பிடித்துள்ளார். ரூ.40.5 கோடியுடன் அஜித் தென்னிந்தியளவில் 6ஆம் இடமும் இந்தியளவில் 52-ம் இடத்தில் உள்ளார்.

இந்திய அளவில் 54வது இடத்தில் நடிகர் மகேஷ் பாபு உள்ளார். 8ம் இடத்தில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் பிடித்துள்ளார். இந்திய அளவில் அவருக்கு 55வது இடம் கிடைத்துள்ளது. அவரது வருமானம் ரூ.31.5 கோடி ஆகும்.


இந்தப் பட்டியலில் கமலின் ஆண்டு வருமானம் ரூ.34 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்திய அளவில் 56வது இடம் கிடைத்துள்ளது.அவருக்கு அடுத்த இடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி உள்ளார். இந்திய அளவில் அவர் 62ம் இடத்தில் உள்ளார்.

Forbes 100

பட உதவி: The Hans India

இந்தப் பட்டியலில் நடிகர் தனுஷ் ரூ.31.75 கோடி வருமானத்துடன் 64ம் இடத்தில் உள்ளார். அஜித்தை வைத்து இந்தாண்டு விஸ்வாசம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் சிவா, இந்திய அளவில் அவர் 80வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வருமானம் ரூ.12.17 கோடி ஆகும்.


இவரைப் போலவே ரஜினியை வைத்து இந்தாண்டு பேட்ட என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜுக்கு ரூ.13.5 கோடி வருமானத்துடன் இந்தப் பட்டியலில் 84வது இடம் கிடைத்துள்ளது.

ஆலியா பட் (ரூ. 59.21 கோடி) மற்றும் தீபிகா படுகோனே (ரூ. 48 கோடி) என இந்தப் பட்டியலில் முதன்முறையாக முதல் பத்து இடங்களில் இரண்டு நடிகைகள் இடம் பிடித்துள்ளனர். 69-வது இடத்தில் நடிகை ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா ரூ.15.17 கோடி வருமானத்துடன் உள்ளார்.