3 மில்லியன் டாலர் நிதி திரட்டியது சென்னை மின் வாகன ஸ்டார்ட் அப் ‘Raptee’
சென்னையைச் சேர்ந்த மின்வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம் ’ராப்டீ’ (
), ப்ரீ சீரிஸ் ஏ நிதியாக, 3 மில்லியன் டாலர் திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.ஆழ் நுட்ப விசி நிறுவனம் புளுஹில் கேபிட்டல் தலைமை வகித்த, அனைத்து சமபங்கு நிதியான இந்த சுற்றில், டிரைஸ்டார் குளோபல் (UAE), நிறுவனர் மற்றும் சி.இ.ஓ யூஜின் மைனே, காக்னிசன்ட் முன்னாள் சி.இ.ஓ.லட்சுமி நாராயணன், கேய்னஸ் டெக்னாலஜி நிர்வாக இயக்குனர் ரமேஷ் கன்னா, சங்கரா பில்டிங் பிராடக்ட்ஸ் இயக்குனர் சந்து நாயர் மற்றும் அதிக நிகரமதிப்பு கொண்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிதி, உற்பத்தி வசதி மேம்பாடு, இயந்திரங்கள் வாங்குவது, விரைவில் அறிமுகம் ஆக உள்ள பைக்கிற்கான டூலிங், குழு மேம்பாடு ஆகியவற்றில் செலவிடப்பட உள்ளது.
ராப்டீ; தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட, முழு ஸ்டாக் மின்வாகன பைக் உற்பத்தி நிறுவனமாக இருக்கிறது. நிறுவனம் இதுவரை 45க்கு மேற்பட்ட காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. அதிக வோல்டேஜ் டிரைவ் டிரைன் நுட்பத்தை துணிச்சலாக முதலில் அறிமுகம் செய்த முதல் இந்திய மின்வாகன தயாரிப்பு நிறுவனமாக Raptee திகழ்கிறது.
மேலும், ஆன்போர்டு சார்ஜ் வசதியையும் இதில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியா மற்றும் உலக அளவில் வேகமாக வளரும் போது சார்ஜிங் அமைப்பிற்கு ஏற்றதாக திகழ்கிறது. அதிக வோல்டேஜ் தொழில்நுட்பம் இந்த நிறுவன பைக்கின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
சென்னை மற்றும் பெங்களூருவில் இரண்டு அனுபவ மையங்களுடன் முதல் கட்ட வாகனங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் ஆக உள்ளன. இந்த மையங்கள் பின்னர் எட்டாக உயர்த்தப்பட உள்ளது.
நிறுவனத்தின் வளர்ச்சியை கவனித்த தமிழக அரசு, உற்பத்தி மேம்பாட்டிற்காக 36 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
”உலகின் மிகப்பெரிய பைக் சந்தையான இந்தியாவில் மின்வாகன ஏற்பு அதிகரித்து வருகிறது. மின்வாகனத்திற்கு மாறுவதை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இடை பிரிமியம் மின்வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம். உற்பத்தி மற்றும் போக்குவரத்து துறையின் முக்கியப் புள்ளிகளின் நிதி ஆதரவை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று Raptee இணை நிறுவனர், சி.இ.ஓ.தினேஷ் அர்ஜூன் கூறியுள்ளார்.
மிகவும் செயல்திறன் வாய்ந்த முறையில் இங்கு சென்னையில், உலகத்தரம் வாய்ந்த மின் வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கும் ராப்டீ-யின் தொலைநோக்கை நாங்கள் வலுவாக நம்புகிறோம்.
“30க்கும் மேற்பட்ட மின்வாகன மதிப்பீட்டு, மின்வாகன மற்றும் ஆழ் நுட்ப சூழலில் முதலீடு செய்துள்ள நிலையில், ராடீயின் அதி நவீன நுட்பம் எங்களை ஈர்க்கிறது,” என்று புளுஹில் கேபிடல் சி.இ.ஓ மற்றும் பார்ட்னர் மனு ஐயர் தெரிவித்தார்.
சென்னையில் உற்பத்தி ஆகும் எலக்ட்ரிக் ‘மோட்டார் பைக்’ - Raptee இ-பைக் உருவானது எப்படி?
Edited by Induja Raghunathan