Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

அதிகாலையில் எழுந்துதும் படிப்பது என்ன? கூகுள் சுந்தர் பிச்சை சொன்ன பதில்!

உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை, தனது நாளை தொடங்கும் முன்பு எந்த நாளிதழ் அல்லது புத்தகத்தை படிப்பார்? என்றெல்லாம் பல கேள்விகள் எழுவதுண்டு. அதற்கு அவரே பதிலளித்துள்ளார்.

அதிகாலையில் எழுந்துதும் படிப்பது என்ன? கூகுள் சுந்தர் பிச்சை சொன்ன பதில்!

Wednesday February 14, 2024 , 2 min Read

உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை, இவ்வளவு உயர்ந்த பதவியில் இருக்க காரணம் என்ன? தனது நாளை தொடங்கும் முன்பு எந்த நாளிதழ் அல்லது புத்தகத்தை படிப்பார்? என்றெல்லாம் பல கேள்விகள் எழுவதுண்டு. அதற்கு அவரே சொல்லியுள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூகுள் சிஇஓ:

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, வாசிப்புடன் தனது நாளைத் தொடங்குகிறார். இதில் என்ன விசேஷம், மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவராக இருப்பவர்களுக்கு வாசிப்பு பழக்கம் இயல்பானது தானே என தோன்றலாம்.

ஆனால், சுந்தர் பிச்சை காலையில் எழுந்தவுடன் ஒரு செய்தித் தாளையோ, புத்தகத்தையோ படிப்பதற்கு பதிலாக, ஒரு இணையதளத்தைத் திறந்து பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளாராம். டெக்மீம் என்ற தொழில்நுட்பம் சம்பந்தமான அந்த இணையதளத்தை திறந்து, புதுப்புது அப்டேட்களை பெறுவதாகக் கூறியுள்ளார்.

“காலையில் எழுந்ததும் Techmeme என்ற இணையதளத்தை பார்ப்பேன். உலகளவில் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் சமீபத்திய தகவல்கள் ஒன்றிணைக்கப்பட்டு தலைப்புச் செய்திகளின் வடிவத்தில் கிடைக்கின்றன,” என்றார்.
Sundar Pichai

இதற்கு முன்னதாக மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா மற்றும் இன்ஸ்டாகிராம் ஹெட் ஆடம் மொசெரி ஆகியோரும் இந்த இணையதளத்தை பார்வையிடுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேப் ரிவேராவால் 2005ல் நிறுவப்பட்ட டெக்மீம் இணையதளம், தொழில்நுட்ப உலகில் இருந்து புதுப்பிப்புகளின் சுருக்கங்களையும் அசல் கட்டுரைகளுக்கான இணைப்புகளையும் வழங்குகிறது. தொழில்துறையில் அதன் பயன்பாடு பற்றிய விவரங்களை வழங்குகிறது. இதன் மூலம், தொழிலில் ஏற்படும் வளர்ச்சியை அன்றாடம் கண்கூடாக அறிந்து கொள்ள முடியும். டெக் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல இணையதளம் என்று சொல்லலாம்.

கூகுளின் புதிய AI மாடல்:

படிப்படியாக இணைய தேடுதல் முறை மாறும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். எதிர்காலத்திற்காக இதனை மேம்படுத்த வேண்டும் எனக்கூறியுள்ள அவர், இதன் ஒரு கட்டமாக ஜெமினி என்ற செயற்கை நுண்ணறிவு சாட்போட்டை கொண்டு வருவது குறித்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ள பார்ட் என்ற பெயரை ஜெமினி என மாற்றவுள்ளதாகவும், விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் ஆப்ஸ் வடிவில் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

“மற்ற நிறுவனங்களின் AI உதவியாளர்களுடன் ஒப்பிடும்போது ஜெமினி மாடல் வித்தியாசமானது. உரைகள் மட்டுமின்றி, புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ, குறியீடு போன்ற பல்வேறு தரவு வடிவங்களிலும் தங்கள் மாடலைப் பயிற்றுவித்துள்ளோம். புகைப்படம், குரல் மற்றும் உரைகள் என எந்த விதமான கட்டளைகளுக்கும் இது பதிலளிக்கும்,” என்றார்.

கூகுளின் ஜெமினியானது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ChatGPT மற்றும் Microsoft Copilot AI மாடல்களுக்கு போட்டியாக கொண்டு வரப்படவுள்ளது.