இந்திய சந்தையில் எலக்ட்ரிக் பைக் மாடல்களின் விலை ஒப்பீடு பட்டியல் இதோ!
மின்சார இரு சக்கர வாகன சந்தையில் பவுன்ஸ் நுழைந்திருக்கும் நிலையில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் உள்ள மின் வாகனங்களின் விலை பற்றிய ஒரு விரிசான அலசல்.
பெங்களூருவைச்சேர்ந்த பவுன்ஸ் (Bounce) மின்சார இருசக்கர வாகன சந்தையில் தனது இன்பினிட்டி இ-ஸ்கூட்டர் மூலம் நுழைந்திருக்கிறது. இந்த வாகனம் பேட்டரி மற்றும் சார்ஜருடன் ரூ.68,999 எனும் விலை கொண்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் மின்ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதற்காக 22 மோட்டார்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது.
செயலி சார்ந்த போக்குவரத்துத் தீர்வு வழங்கும் நிறுவனமாக துவங்கிய பவுன்ஸ், 3 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட ஓலா எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படும் சந்தையில் நுழைந்துள்ளது.
2007ல் துவக்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் 526 மில்லியன் டாலர் நிதி திரட்டியிருபதோடு, 5 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில் மேலும் 200 மில்லியன் டால நிதி திரட்ட இருப்பதாகக் கூறப்படுகிறது. சந்தையில் உள்ள மற்றொரு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, 158 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
இவைத்தவிர ஏற்கனவே உள்ள பாரம்பரிய நிறுவனங்களான ஹீரோ எலெக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களும் மின்வாகன சந்தையில் தங்கள் முயற்சியை இரு மடங்காக உயர்த்தியுள்ளன. இந்த சந்தை 2025 ம் ஆண்டு வாக்கில் 57.9 சதவீத வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேஎம்.கே ரிசர்ச் அண்ட் அன்லடிக்கின் அண்மை ஆய்வு, இந்திய மின்வாகன சந்தையில் ஹிரோ எலெக்ட்ரிக் 3 சதவீத சந்தை பங்கை கொண்டுள்லதாகத் தெரிவிகிறது. ஜனவரி வரை 65,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்திய இருசக்கர வாகன உற்பத்தியில் ஸ்கூட்டர்கள் மூன்றில் ஒரு பங்காக இருந்துள்ளன. 2021ல் மொத்த இருசக்கர வாகன விற்பனையில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது.
நன்கு முதலீடு பெற்றுள்ள ஸ்டார்ட் அப்கள் போட்டியை சமாளிக்க சில பாரம்பரிய நிறுவனங்கள் வெளி நிதியை நாடுவதாகவும் கூறப்படுகிறது.
ஆம்பியர் டெக்னாலஜீசை கீரிவ்ஸ் கையகப்படுத்தி இந்த சந்தையில் நுழைந்துள்ள நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் ஸ்விஸ் நிறுவனமான இகோ மூவ்மெண்டில் பங்குகளை வாங்கியுள்ள நிலையில் இந்த துறை போட்டி மிக்கதாக மாறியிருக்கிறது.
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன பிரிவில் உள்ள நிறுவனங்களின் துவக்க நிலை வாகனங்கள் தொடர்பான ஒப்பீடு விவரன் கீழே:
ஆங்கிலத்தில்: பாயல் கங்குலி | தமிழில்: சைபர் சிம்மன்