1 நொடிக்கு 4 ஸ்கூட்டர்; 24 மணி நேரத்தில், 600 கோடி மதிப்பு விற்பனை: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாதனை!
இன்றுடன் முன்பதிவு செய்தவர்களுக்கான விற்பனை முடிகிறது!
ஓலா நிறுவனம், ஓலா எலெக்ட்ரிக் மூலம் மின் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கான நவீன ஆலை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலா எஸ்1 மின் ஸ்கூட்டர்கள், எஸ்1 மற்றும் புரோ1 ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த மாதம் நிறுவனம் அறிவித்தது. இந்த மின் ஸ்கூட்டர்கள்,ரூ.99,999 ,ரூ.1,29,999, ஆகிய விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மின் ஸ்கூட்டர்களை செப்டம்பர் 8ம் தேதி முதல் வாங்கலாம் என்றும், அக்டோபர் மாதம் முதல் வாகனங்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சில நாட்கள் கழித்து ஓலா நிறுவன தலைவர் மற்றும் குழும சி.இ.ஓ பாவிஷ் அகர்வால், மின் ஸ்கூட்டர் விற்பனை ஒரு வாரம் தள்ளிப்போவதாகவும், செப் 15 முதல் விற்பனை துவங்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தநிலையில் சொன்னபடி, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நேற்று முதல் தொடங்கின. Ola S1, Ola S1 Pro ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியது. ஆன்லைன் இதை மூலமாக வாங்க முடியும். விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக முன்பதிவிலேயே ஓலா நிறுவனம் சாதனை படைத்தது. தற்போது முன்பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவிருக்கிறது ஓலா. அதற்கேற்ப முன்பதிவு மற்றும் கொள்முதல் வரிசையில் மாற்றமில்லை என்று ஓலா அறிவித்திருக்கிறது.
எனவே, நீங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால், ஸ்கூட்டரை (Ola Electric Scooter) உங்களால் முதலில் பெறமுடியும். மேலும், ஸ்கூட்டரின் விநியோக தேதிகளும் மாறாமல் இருக்கும் என்றும் ஓலா தெரிவித்திருந்தது. இதனிடையே,
விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே 600 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஸ்கூட்டர்களை விற்று சாதனை படைத்திருக்கிறது ஓலா. அதிலும் ஒவ்வொரு நொடியும் 4 ஸ்கூட்டர்களை விற்றிருக்கிறது.
இதுதொடர்பாக பாவிஷ் அகர்வால்,
“கடந்த இரண்டு மாதங்கள் முன்பு நாங்கள் முன்பதிவை தொடங்கியபோது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோவை வாங்க பதிவு செய்தனர். நேற்று விற்பனையைத் தொடங்கினோம். விற்பனையை தொடங்கிய உடன் வாடிக்கையாளர்கள் ஏக வரவேற்பு கொடுத்தனர். இந்த வரவேற்பால் ஒவ்வொரு நொடியும் 4 ஸ்கூட்டர்களை விற்றோம். 24 மணி நேரத்தில், 600 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஸ்கூட்டர்களை விற்றோம்,” என்றார்.
இது எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. வரவிருக்கும் மாதங்களில் எங்கள் உற்பத்தித் திட்டங்களைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர்களை வாங்குவதற்கான கடைசி நாள் இன்று. முன்பதிவு செய்தவர்கள் இன்று நள்ளிரவு வரை வாங்கலாம். எனவே இன்று உங்களை முன்பதிவு செய்து இந்த அறிமுக விலையில் வாங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று பதிவிட்டார்.
நேற்றைய தினம், சரியான தயாரிப்புடன், இந்தியாவில் அதிக தேவை மற்றும் இரு சக்கர வாகன EV-களுக்கு ஒரு பெரிய உள்நாட்டு சந்தை உள்ளது என்பது வெளிப்பட்டது. புதுமையை, வலுவான உள்ளூர் EV சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்குவிக்கவும், இந்தியாவை ஒரு பெரிய EV சந்தையாக மட்டுமல்லாமல், உலகளாவிய EV உற்பத்தி மையமாகவும் மாற்ற இதை நாம் பயன்படுத்த வேண்டும், என்று கூறியிருக்கிறார்.