'மின் வாகனங்களுக்கு இனியும் அரசு மானியம் தேவையில்லை' - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
நுகர்வோர் இப்போது தாங்களாகவே மின் வாகனங்கள் அல்லது சி.என்.ஜி வாகனங்களை தேர்வு செய்வதால், மின்வாகன தயாரிப்புக்கு மானியம் வழங்கும் தேவை இல்லை, என மத்திய அமைச்ச நிதின் கட்காரி கூறியுள்ளார்.
நுகர்வோர் இப்போது தாங்களாகவே மின் வாகனங்கள் அல்லது சி.என்.ஜி வாகனங்களை தேர்வு செய்வதால், மின்வாகன தயாரிப்புக்கு மானியம் வழங்கும் தேவை இல்லை, என மத்திய அமைச்ச நிதின் கட்காரி கூறியுள்ளார்.
துவக்கத்தில் மின்வாகனங்கள் தயாரிக்கும் செலவு அதிகமாக இருந்தது ஆனால், தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி செலவு குறைந்து, மானியங்கள் தேவையற்றதாகி உள்ளது என பி.என்.இ.எப் மாநாட்டில் பேசிய நிடின் கட்காரி தெரிவித்தார்.
"நுகர்வோர் இப்போது மின்வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி வானங்கனங்களை தாங்களாகவே தேர்வு செய்கின்றனர். எனவே, மின்வாகனங்களுக்கு அதிக மானியம் தேவை இல்லை என கருதுகிறேன்," என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான கட்காரி தெரிவித்தார்.
மின்வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட குறைவாக உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"இனியும் மின்வாகன தயாரிப்பை அரசு மானியம் மூலம் ஆதரிக்க வேண்டாம் என்பது என் கருத்து. மானியம் கோருவது இனியும் நியாயமானது அல்ல என நினைக்கிறேன்,” என்றார்.
தற்போது ஹைபிரிட் உள்ளிட்ட வாகனங்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் மின்வாகனங்கள் மீது 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்க வாய்ப்பில்லை என கூறிய அமைச்சர் இந்தியா போன்ற பெரிய பொருளாதாரத்தில், படிம எரிபொருளில் இருந்து நிகழும் மாற்றம் படிப்படியாகவே அமையும் என்றார். லித்தியம் பேட்டரி செலவு குறைந்திருப்பது மின்வாகன செலவை மேலும் குறைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
"அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் மின்வாகங்கள் விலை ஒரே அளவு இருக்கும். துவகத்தில் மின்வாகன விலை அதிகமாக இருந்ததால் மானியம் தேவைப்பட்டது,” என்றார்.
ஃபேம் (FAME) திட்டம் நீட்டிக்கப்படுமா எனும் கேள்விக்கு, இது தன்னுடைய அமைச்சகம் தொடர்பானது அல்ல, என பதில் அளித்தார்.
மின்வாகன ஏற்பிற்கான பேம் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை அரசு இரண்டு மாதங்களில் தீர்மானிக்க இருப்பதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி அண்மையில் கூறியிருந்தார். இந்த திட்டம் தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையிலான குழு கருத்துக்களை ஆய்வு செய்து வருவதாகவும், முதல் இரண்டு கட்டங்களில் இருந்த பிரச்சனைகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மின்வாகனங்கள் வேகமான ஏற்பிற்கான பேம் திட்டம் 3, தற்காலிக மின்வாகன போக்குவரத்து மேம்பாடு திட்டத்திற்கு பதிலாக அமையும். இரண்டாம் கட்ட திட்டம் 2019ல் ரூ.10,000 கோடியில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட்டது. பின்னர், ரூ.1500 கோடியில் மார்ச் 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
10 லட்சம் இருசக்கர மின் வாகனங்கள், 5 லட்சம் மூன்று சக்கர் வாகனங்கள் மற்றும் 7000 மின்பேருந்துகளை துவக்க இலக்காக திட்டம் கொண்டிருந்தது.
"பேம் 1 மற்றும் 2 தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வந்துள்ளன. பிரதமர் அலுவலகமும் ஆலோசனை அளித்துள்ளது. அமைச்சகங்களுக்கு இடையிலான குழு இதை கவனித்து வருகிறது," என பேம் 3 பற்றி அமைச்சர் குமாரசாரி தெரிவித்தார்.
இதற்காக கால அளவு பற்றி கேட்டபோது, ஓரிரு மாதங்களில் அனுமதி கிடைக்கும் என்றார்.
ஓரிரு மாதங்களில் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்படுமா என்று கேட்ட போது, பல்வேறு ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன, அவற்றை பரிசீலித்து சிறந்தவற்றை தேர்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
செய்தி- பிடிஐ, தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan