எலான் மஸ்க் மீது முதலீட்டாளர்கள் வழக்கு: ட்விட்டர் பங்கு வாங்கியதில் சர்ச்சை!
ட்விட்டர் பங்குகளை வாங்கியதை சரியான நேரத்தில் வெளியிடாத காரணத்தால் எலான் மஸ்க் மீது பிற முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ட்விட்டர் பங்குகளை வாங்கியதை சரியான நேரத்தில் வெளியிடாத காரணத்தால் எலான் மஸ்க் மீது பிற முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வெர்ஜீனியாவில் வசிக்கும் வில்லியம் ஹெரெஸ்னியாக் தலைமையிலான ட்விட்டர் பங்குதாரர்கள் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
எலான் மஸ்க் ட்விட்டர் பங்குகளை வாங்கியதை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளியிட தவறியதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. மஸ்க் ட்விட்டர் வாங்குவது தொடர்பான விசாரணை எஸ்இசி மூலம் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
இந்தத் தகவலை ராய்ட்டர்ஸ் முதலில் அறிவித்தது, மார்ச் 14 ஆம் தேதிக்குள் ட்விட்டரில் 5 சதவீதத்திற்கு மேல் வாங்கியதை வெளிப்படுத்த தவறியதன் மூலமாக மஸ்க் $156 மில்லியன் வரை சேமித்துக் கொண்டார் என வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, மஸ்க் பங்குகளை வாங்குகிறார் என்பதை பொது மக்கள் முன்னதாகவே அறிந்திருந்தால் ட்விட்டர் பங்கு விலை அப்படியே இருந்திருக்கும் என வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 9% பங்குகளை மஸ்க் வாங்கிய பிறகு, மீதமுள்ள பங்குகளையும் மஸ்க் வாங்குவதாக அறிவித்தார். ஆனால், முதற்கட்டமாக வாங்கிய பங்குகள் குறித்து மஸ்க் சரியான நேரத்தில் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்திருக்கும் பட்சத்தில் மீதமுள்ள பங்குகள் விலை மிக அதிகமாக இருந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்க் பங்குகள் வாங்கியதை சரியான நேரத்தில் அறிவிக்கப்படாத காரணத்தால் ட்விட்டர் பங்குகள் விலை சரிந்தது இதன்மூலம் மஸ்க் $156 மில்லியன் வரை சேமித்துள்ளார் என வழக்கில் வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
ட்விட்டரில் தனது பங்குகளை வெளியிடுவதை தாமதப்படுத்தியதன் மூலமாக மஸ்க் சந்தை கையாளுதல் நடவடிக்கையில் ஈடுபட்டார் எனவும் இதன்மூலம் செயற்கையான முறையில் ட்விட்டர் பங்குகள் மதிப்பை குறைத்து வாங்குகிறார் என முதலீட்டாளர்கள் வழக்கில் தெரிவித்துள்ளனர்.
எஸ்இசி (Securities and Exchange Commission) விதிகளின்படி, 5 சதவீதத்திற்கு மேல் ஒரு நிறுவனத்தை வாங்கும்பட்சத்தில் அதுகுறித்த அறிவிப்பை 10 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: துர்கா