‘எலான் மஸ்க் தலைமையில் ட்விட்டர் மோசமான தளமாகும்’ - பில்கேட்ஸ் ஓபன் பதில்!
எலான் மஸ்க் தலைமையிலான டுவிட்டர் மேலும் மோசமடையும் என பில்கேட்ஸ் தெரிவித்திருக்கிறார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறார். சமீபகாலமாக இதுகுறித்த தகவலே பெரும் பேசு பொருளாக இருக்கிறது.
இந்த நிலையில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியது குறித்து பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
”எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டர் மேலும் மோசமான தளமாக மாறும்,” என தெரிவித்திருக்கிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பிரதான ஒருவர் என்ற பல்வேறு புகழுக்கு சொந்தமானவர் பில்கேட்ஸ். இருப்பினும், இவருக்கென்று ஒரு தனி சிறப்பு இருக்கிறது. அது அவரது கணிப்பும் கருத்தும் தான். உலகத்தை பெரும் தொற்று நோய் தாக்க இருக்கிறது என சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பே எச்சரித்தவர் பில் கேட்ஸ்.
அதேபோல், உலக நாடுகளை ஆட்டிப்படைத்தது கொரோனா தொற்று நோய். இந்த நிலையில் தற்போது எலான் மஸ்க் தலைமையிலான டுவிட்டர் நிறுவனம் குறித்து பில்கேட்ஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்தி சிஇஓ கவுன்சில் கூட்டத்தில் பில்கேட்ஸ் இந்தத் தகவலை தெரிவித்திருக்கிறார்.
எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டர் நிறுவனம் குறித்து பில் கேட்ஸ் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம். அதில்,
எலான் மஸ்க் ட்விட்டரை மேலும் மோசமானதாக மாற்றி விடுவதற்கு வாய்ப்புள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரில் கருத்து சுதந்திரம் பிரதானம் எனக் குறிப்பிடுகிறார். இதன்மூலம் ட்விட்டரில் வெறுப்புப் பேச்சுகளும் தவறான தகவலும் அதிகளவில் பரவ வழிவகைச் செய்யும்.
ஒவ்வொரு துறைகளிலும் கைதேர்ந்த வல்லுனர்களுக்கு பணியை வழங்கி டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை வெற்றி அடைய செய்துவிட்டார். அவரின் சாதனை குறிப்பிடத்தக்க ஒன்று.
ஆனால் சமூக வலைதளம் பல கோடி பேர் பயன்படுத்தும் ஒன்றாகும். இந்த இடத்தில் எலான் மஸ்க் செயல்பாடு வெற்றியுடையுமா என்றால் அது பெரிய கேள்விக் குறிதான். எலான் மஸ்க்கை குறைத்து மதிப்பிட முடியாது, இருப்பினும் எலான் மஸ்க் குறித்த சிறந்தவைகளை கூறுவதில் என்னிடம் எதுவும் இல்லை. எலான் மஸ்க் இதில் வெற்றிப் பெறுவார் என்பது சந்தேகம் தான். இப்படி தான் நடக்கும் என்று கூற மாட்டேன், பார்க்கலாம் என பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பை குறைக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பில்கேட்ஸ்-ஐ உருவக்கேலி செய்து எலான் மஸ்க் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், பில்கேட்ஸ் புகைப்படத்துக்கு அருகில் தொப்பையுடன் இருக்கும் ஒரு இமோஜியை இணைத்து வெளியிட்டார். மேலும் அந்த பதிவில் in case u Need to Lose a Boner Fast என குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது பில்கேட்ஸ், எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டர் நிறுவனம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.