2024ல் உலகின் முதல் டிரில்லினியராக உருவாகப் போகும் எலான் மஸ்க்; எப்படி சாத்தியம்?
டிபால்டி அப்ரூவ் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, 2024க்குள் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 1.38 டிரில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டக்கூடும் என்று கூறுகிறது.
டிபால்டி அப்ரூவ் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, 2024க்குள் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 1.38 டிரில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டக்கூடும் என்று கூறுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹூருன் நிறுவனம் 2022ம் ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் மீண்டும் உலக அளவில் நெம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 205 பில்லியன் டாலர் என கணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எலான் மாஸ்க் 2024ம் ஆண்டுக்குள் உலகிலேயே முதல் டிரில்லியனராக மாற வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன. டிபால்டி அப்ரூவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
அடுத்த இரண்டு ஆண்டுகளில் எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு 250 பில்லியன் டாலரில் இருந்து 1 டிரில்லியனாக அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டு முதலே எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு ஆண்டுதோறும் சராசரியாக 129 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த கணிப்பின் அடிப்படையில் பார்த்தால், 2024 ஆம் ஆண்டில் தனது 52 வயதில் 1.38 டிரில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஸ்க்கைத் தொடர்ந்து டிக்டோக் நிறுவனர் ஜாங் யிமிங், 2026 ஆம் ஆண்டில் டிரில்லியனராக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், அமேசானின் ஜெஃப் பெசோஸ் 2030 ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை மட்டுமே எட்டக்கூடும் என அறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸின் படி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் கடந்த ஆண்டு பெசோஸைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய பணக்காரராக ஆனது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தொழில்நுட்ப பங்குகள் தரையில் தள்ளப்பட்ட நிலையில், எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பும் சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சரிவை சந்தித்தது.
பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (SEC) அவர் சில பிரச்சனைகளில் சிக்கியது பின்னடவை ஏற்படுத்தினாலும், கணிக்கக்கூடிய வகையில், டெஸ்லா பங்குகளின் மதிப்பு அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ப்ஸின் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலின்படி, மஸ்கின் தற்போதைய நிகர மதிப்பு $270.9 பில்லியன் ஆகும்.
ஆங்கிலத்தில் - அபராஜிதா சக்சேனா | தமிழில் - கனிமொழி