4 மாதத்தில் 140 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்; சரிந்தது சொத்து மதிப்பு!
டெஸ்லாவின் பங்கு மதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சியடைந்ததால், நவம்பர் 4ம் தேதி அன்று எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 340.4 பில்லியன் டாலரில் இருந்து 198.6 பில்லியன் டாலராகக் சரிந்துள்ளது
டெஸ்லாவின் பங்கு மதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சியடைந்ததால், நவம்பர் 4ம் தேதி அன்று எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 340.4 பில்லியன் டாலரில் இருந்து 198.6 பில்லியன் டாலராகக் சரிந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க், சொத்து மதிப்பு கடந்த 4 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் படி, எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 198.6 பில்லியன் டாலர்கள் ஆகும். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத்தள்ளவும், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நீடித்து வரும் இது போனது.
கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி அன்று டெஸ்லா பங்குகள் சாதனை உச்சத்தை எட்டியபோது மஸ்க்கின் சொத்து மதிப்பு 340.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. உடனடியாக சுடு தண்ணீரை காலில் ஊற்றிக் கொண்டது போல் அவசரப்பட்ட எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் தனது நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்கலாமா? என வாக்கெடுப்பு நடத்தினார்.
இது ஒரு நாளில் அவரது நிகர மதிப்பில் இருந்து 35 பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியது. இறுதியில் 16 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புள்ள பங்கு விற்பனை செய்தார். மேலும் அதில் 5.7 பில்லியன் டாலர்களை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார்.
தற்போதைய நிலவரப்படி, பெசோஸ் மட்டுமே 200 மில்லியன் டாலர் மார்க்கெட்டில் நீடித்து வருகிறார். பெசோஸ் 169 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.
ஆங்கிலத்தில் - தருதர் மல்ஹோத்ரா | தமிழில் - கனிமொழி