எலான் மஸ்கின் SpaceX நிறுவனம் 1.68 பில்லியன் டாலர் நிதி திரட்டியது!
எலான் மஸ்கின் விண்வெளி பயண நிறுவனமான ஸ்பேஸ் எப்க்ஸ் சமபங்கு நிதி மூலம்\ 1.725 பில்லியன் டாலர் வரை நிதி திரட்டியுள்ளதாக கட்டுப்பாட்டு அமைப்பில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலான் மஸ்கின், விண்வெளி பயணம், செயற்கைகோள் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ், சம்பங்கு நிதியாக 1.68 பில்லியன் டாலர் கூடுதலாக திரட்டியுள்ளது. எலான் மஸ்க், 70 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் 125 பில்லியன் டாலர் நிதி திரட்ட இருப்பதாக முந்தைய செய்தி தெரிவித்தது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாட்டு அமைப்பில் தாக்கல் செய்துள்ள தகவலின் படி,
ஸ்பேஸ் எக்ஸ் இந்த சுற்றில் 1.725 பில்லியன் டாலர் நிதி திரட்ட உள்ளது. ஸ்டார்லிங்க் செயற்கைகோள் அமைப்பு, செவ்வாய் கிரகத்திற்கான ஸ்டார்ஷிப் ராக்கெட் ஆகியவற்றில் செலவிடும் தொகையை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நிதிச்சுற்று நிகழ்ந்துள்ளது.
இணைய வசதி இல்லாத பகுதிகளில் நேரடி செயற்கைகோள் இணைய சேவை வழங்கும் நோக்கத்துடன் போதுமான செயற்கைகோள்களை செலுத்துவதை ஸ்டார்லிங்க் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்த போது, அந்நாட்டில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை அறிவிதத்தை அடுத்து இந்த முயற்சி பரவலாக கவனத்தை ஈர்த்தது.
ஸ்டார்ஷிப் திட்டத்திற்கு முக்கிய தடையாக இருந்த அமெரிக்க ஏவியேஷன் நிர்வாக அமைப்பின் அனுமதியும் கிடைத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்தது. இந்த திட்டத்திற்கான இடம் சுற்றுச்சூழல் பாதிப்பு கொண்டிருக்கவில்லை என சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மற்றும் இடம் மீது ஏவியேஷன் அமைப்பு 75 நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், இந்த அனுமதி ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முதல் வெள்ளோட்ட சோதனையை மேற்கொள்வதை நோக்கி முன்னேற வழி செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில்: தாருதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்