தான்சானியா நாட்டு விவசாயிகளுக்கு சோலார் கருவிகள் வழங்க ஈரோடு நிறுவனம் ஒப்பந்தம்!
தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த சூரிய மின்சக்தி தீர்வுகளில் கவனம் செலுத்தும் ஆஸ்கர் சோலார் பம்ப், நீடித்த விவசாயத்திற்கு சூரிய தண்ணீர் பம்ப் மற்றும் சோலார் டிரையர்கள் வழங்குவதற்காக தான்சானியா நாட்டின் வனியா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஈரோட்டைச் சேர்ந்த சூரிய மின்சக்தி தீர்வுகளில் கவனம் செலுத்தும் ஆஸ்கர் சோலார் பம்ப், நீடித்த விவசாயத்திற்கு சூரிய தண்ணீர் பம்ப் மற்றும் சோலார் டிரையர்கள் வழங்குவதற்காக தான்சானியா நாட்டின் வனியா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
கோவையில் நடைபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாங்குவோர்- விற்போர் சந்திப்பு நிறைவு விழாவில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமே.அன்பரசன் மற்றும் துறை செயாளலர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தனாது. நீடித்த வளர்ச்சியில் சர்வதேச ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.
இந்த ஒப்பந்தம், சூரிய மின்சக்தி சார்ந்த விவசாயக் கருவிகளை தான்சானியா விவசாயிகளுக்கு ஆஸ்கர் சோலார் பம்ப் நிறுவனம் வழங்க வழி செய்யும். இதன் மூலம் உற்பத்தித் திறன் மேம்படுவதோடு கிராமப்புறங்களில் மின் பற்றாக்குறையையும் எதிர்கொள்ளலாம்.
"மறுசுழற்சி எரிசக்தி தீர்வுகள் மூலம் உலக அளவில் விவசாயிகளுக்கு உதவும் எங்கள் உறுதியை இந்த ஒப்பந்தம் உணர்த்துகிறது,” என ஆஸ்கர் சோலார் பம்ப் நிறுவனர் வேணுகோபால் கூறினார்.
"இந்த கூட்டு முயற்சி சாத்தியமானதில் துறை அமைச்சர் மற்றும் துறை இயக்குனருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
ஆஸ்கர் சோலார் பம்ப் நிறுவனம், விவசாயத்திற்கு தேவையான மின்சக்தி கருவிகளை வழங்கி வருகிறது. இத்துறையில் 15 ஆண்டுக்கும் மேலான அனுபவம் பெற்றுள்ளது. சூரிய மின்சக்தி பம்ப்கள், ஹைப்ரிட் டிரையர்கள், எரிசக்தி கருவிகள் உள்ளிட்டவற்றை நிறுவனம் வழங்கி வருகிறது. தான்சானியா விரிவாக்கம் நிறுவன வளர்ச்சியில் முக்கிய மைல்கலாக அமைகிறது, என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Edited by Induja Raghunathan