Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

எலான் மஸ்க் மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பராக் அக்ரவால் வழக்கு; 128 மில்லியன் டாலர்கள் கேட்டது எதற்கு?

128 மில்லியன் டாலர்கள் (ரூ. 1,061 கோடி) கேட்டு, முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட முன்னாள் ஊழியர்கள், எலோன் மஸ்க் மற்றும் எக்ஸ் கார்ப் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எலான் மஸ்க் மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பராக் அக்ரவால் வழக்கு; 128 மில்லியன் டாலர்கள் கேட்டது எதற்கு?

Tuesday March 05, 2024 , 2 min Read

128 மில்லியன் டாலர்கள் (ரூ.1,061 கோடி) கேட்டு, முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அக்ரவால் உள்ளிட்ட முன்னாள் ஊழியர்கள், எலான் மஸ்க் மற்றும் எக்ஸ் கார்ப் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எலான் மஸ்க் மீது வழக்கு:

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், மற்றும் எக்ஸ் கார்ப் தலைவரான எலான் மஸ்க் மீது முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், தலைமை சட்ட ஆலோசகர் விஜயா காடே மற்றும் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Twitter

பராக் அக்ரவால்

தங்களது மனுவில் எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு தங்களைக் காரணமுன்றி பணிநீக்கம் செய்ததாகவும், பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் செலுத்த வேண்டிய அன்பெய்டு செவரன்ஸ் பேமெண்ட்ஸாக 128 மில்லியன் டாலர்களை (ரூ. 1061 கோடி) செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மஸ்க்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிர்வாகிகள், தங்களை வெளியேற்றிய போது செலுத்த வேண்டிய தொகையை செலுத்த விரும்பவில்லை என்றும், அதற்கான பொய்யான காரணங்களைக் கூறி வெளியேற்றிதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பணம் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எலான் மஸ்க் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு, ட்விட்டர் சட்டத்தை மீறும் நிறுவனமாக மாறிவிட்டது. அவர்கள் ஊழியர்கள், நில உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பிறரை துன்புறுத்துகிறார்கள் என குற்றச்சாட்டியுள்ளனர்.

யாருக்கு எவ்வளவு தொகை கிடைக்க வேண்டும்?

பராக் அக்ரவால் ட்விட்டரில் 2011 முதல் 2022 வரை பணிபுரிந்தார் மற்றும் நவம்பர் 29, 2021 முதல் அக்டோபர் 27, 2022 வரை தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளனர்.

அவரின் ஒரு வருட சம்பளமான ஒரு மில்லியன் டாலர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பங்குகள், செயல்திறன் பங்குகள் மற்றும் பிற நன்மைகளுடன் சேர்த்து $57 மில்லியனுக்கும் அதிகமான தொகை கிடைக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது.

தலைமை சட்ட ஆலோசகர் விஜயா காடே $20 மில்லியன் தொகையில் பிரிவினைப் பலன்களுக்கு உரிமையுடையவர், இது ஒரு வருடத்தின் சம்பளமான $600,000 மற்றும் பிற சலுகைகளுக்கு சமமான தொகையாகும்.

Many Ex-Employees Suing Elon Musk

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றுவதற்கான முயற்சி தொடங்கியதில் இருந்தே தலைமை சட்ட ஆலோசகர் காடேவை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க், பராக் அkவாலுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

"மஸ்க் ஆக்ரோஷமானார் மற்றும் கோபத்துடன் தனது கட்டளையை திரும்பத் திரும்பச் சொன்னார். அக்ரவால் காடேவை நீக்க மறுத்தபோது, ​​அதன் விளைவாக "நாங்கள் ஒன்றாக வேலை செய்ய முடியாது..." என எலான் மஸ்க் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 27, 2022 அன்று வீடியோ கால் விவாதத்திற்கு அழைக்கப்பட்ட போது காடேவை உடனடியாக நீக்க எலான் மஸ்க் வலியுறுத்தியதாகவும், அதனை பராக் மறுத்ததாகவும் தெரிகிறது.

மேலும், அதனை ஏற்க பராக் ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டது. அப்போது வால், மஸ்க் கேட்டதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியதாகவும், ஆனால் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் தனது சொந்த முடிவுகளை எடுத்ததாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.